Lord Skanda-Murugan
 

Palani Murugan

பழனி ஆண்டவர்

பழனி ஆண்டவர் சிலை விஞ்ஞான சோதனை

M.S. Saravanan

Original article in English: "Palani Icon: A Scientific Analysis"

தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் 'அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே பழனி மலை'.

தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடி உயரத்தில் உள்ள பெருமை மிக்க இடமான சிவகிரி மலையில் தண்டாயுதபாணி பழனி ஆண்டாவராக வீற்று உள்ளார். புராதான காலத்தின் துவக்கம் முதலே சித்தர்களும், முனிவர்களும் பழனி மலையில் தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் அதிகப் புனிதத் தன்மையை அடைந்தது. பல மன்னர்களும் கொடையாளிகளும் அந்த ஆலயத்துக்கு பல வகைகளிலும் தங்களுடைய ஆதரவை வழங்கி உள்ளார்கள். தமிழக முன்னணிப் பாடகர்கள் பலர் தண்டாயுதபாணியின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய தமிழ் பாடல்களைப் பாடி உள்ளார்கள். துடித்துக் கொண்டே இருக்கும் தெய்வீக சூழ்நிலையில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகளை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இந்துக்கள் தொடர்ந்து கடைபிடித்தவண்ணம் இருக்கின்றார்கள். அனுதினமும் அங்கு வரும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களே அதற்கு சாட்சி ஆவார்கள்.

ஆறுபடை வீடுகளில் மணிபூரகம் எனும் மூன்றாவது தெய்வீக நிலையை ஒருவர் எட்டியதும் அந்த நிலையில் இருந்து பரிபூரண ஆன்மீக நிலையினை அவர்கள் அடையத் துவங்கி விடுகின்றனர். மற்ற தெய்வீக நிலைகள் வருமாறு:

புராண காலத்தில் அருணகிரிநாதர் இயற்றிய இந்த பாடல் மூலம் பழனியின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். -''என் தெய்வமே , நீ தெய்வீகத்தில் பஐமை வாய்ந்த காசி, பெனாரஸ் போன்ற இடங்களை விட மிக உயர்ந்த நிலையில் உள்ள இந்தப் புனித மலை மீது அமர்ந்து இருக்கின்றாய்''. சைவ சித்தாந்தக் கூற்றின்படி ஒருவர் ஞான உபதேசத்தைப் பெரும் முன்னர் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் ஆன்மாவின் நான்கு பகுதிகளைக் கடக்க வேண்டும். அவை 'கார்யா' எனும் தன்னலமற்ற சேவை, சாதனாக்களை துதிக்கும் 'கிரியா' என்பது, ஒரு குருவின் துணையோடு தியானிக்கும் 'யோகம்', மற்றும் ஆத்மார்த்தமாக தன்னை உணர்ந்து கொள்ளுதலான 'ஞானம்' என்பது. ஒருவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் எனில், ஒரு முட்டையில் இருந்து புழுவாகி, புழுவில் இருந்து வளர்ச்சி பெற்ற கூட்டுப் புழுவாகி, வளர்ச்சி பெற்ற கூட்டுப் புழுவில் இருந்து கம்பளிப் பூச்சியாகி, கம்பளிப் பூச்சியில் இருந்து வண்ணத்துப் பூச்சியாகி பறப்பதைப் போல படிப்படியாக 'கார்யா', 'கிரியா', 'யோகா' போன்ற நிலைகளைக் கடந்து 'ஞான' நிலையை எட்ட வேண்டும். பழனி தண்டாயுதபாணி ஞானத்தை பிரதிபலிக்கின்றார். ஞானமே பேரானந்த மன நிலையான ஞானப் பழம் என்பதை நமக்குத் தரும். இளம் பிஞ்சு காயாகி பல்வேறு நிலைகளை கடந்து பழுக்கத் துவங்கி கடைசியாக பழமாவதைப் போலவே பழனி முருகனும் கவர்ச்சிகரமான முகப் பொலிவுடன் இருந்து கொண்டு பக்தர்களுக்கு பல்வேறு காட்சிகளிலும், ரூபங்களிலும் தரிசனம் தந்து கொண்டு அருள் மழையைப் பொழிந்தவாறு இருக்கின்றார். அவர் கொண்டுள்ள ரூபங்களில் சில:

பழனியில் குடி கொண்டுள்ள அந்த தெய்வம் உலகின் பல இடங்களில் இருந்தும் பக்தர்களை தன்பால் இழுக்கின்றது. பழமையில் ஊறிப்போன முஸ்லிம் மதத்தினர் கூட இங்கு வந்து அவரை வணங்குகிறார்கள். முருகனை பழனி பாட்ஷா என அன்புடன் கூறி அவரை வணங்குகிறார்கள். ஆத்ம ஞானம் பெற அங்கு வரும் பக்தர்களுக்கு ஒளி வெள்ளத்தைக் காட்டியபடி பழனி ஆண்டவர் அவர்களை வழி நடத்திச் செல்கிறார். தண்டாயுதபாணி ஆலயம் தனி மகத்துவம் பெற்றது. மற்ற ஆலயங்களுடன் அதை ஒப்பிடும்போது அவற்றில் இருந்து இது வேறுபட்டு உள்ளது நன்கு தெரியும். முதலாவதாக அந்த ஆலயத்தில் உள்ள பிரதான தெய்வத்தை மூலவர் என்று அழைக்கின்றார்கள். சாதாரணமாக இந்து ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் சிலைகளை கருங்கல் பாறைகளில் செய்வார்கள். அதற்குக் காரணம் அவற்றில் இயற்கையாக அமைந்து உள்ள அதி இழுவிசை சக்தியே. மேலும் கருங்கல் பாறைகள் பெரும் பலம் மிக்கவை . அது மட்டும் அல்லாமல் இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற அனைத்துப் பொருட்களும் அதற்குள் உள்ளன. ஆனால் அப்படி இல்லாமல் பழனி ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது. சமஸ்கிருதத்தில் 'நவ' என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 'நவ' என்றால் 'புதியது' அல்லது 'ஒன்பது' என்ற அர்த்தங்கள் உள்ளன. அது போலவே 'பாஷணம்' என்றால் 'விஷம்' அல்லது 'தாதுப் பொருட்கள்' என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான 'போகர்' என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.
Bhogar, using the nine different minerals, creates the Dandapaani vigraha and sanctifies it
அங்குள்ள மூலவரின் சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால் செய்து உள்ளார். அந்த ஒன்பது நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களும் ஒன்றாகியபோது உடைக்க இயலாத பலம் மிக்க பொருளாக மாறியதும் அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருத்துவத் தன்மைக் கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமித்து இருப்பதில் இருந்தே சித்த முனிவரான போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமல்ல , தொலைதூர கண்ணோட்டத்துடன் பின்னர் வர உள்ள காலத்து முருக பக்தர்களின் உடல் நலனில் பெருமளவு அக்கறை கொண்டு இருந்தவர் என்றும், அவர் மிக உயர்வான தெய்வீக நிலையில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த முனிவருடைய சித்தர் பரம்பரை பற்றியும் இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. சித்தர்களின் தலைவராகக் கருதப்படுபவர் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவரே. அவருடைய ஏழு சிஷ்யர்களில் 'திருமூலர்' என்பவர் உண்டு. அந்த திருமூலருக்கு 'கலங்கி கஞ்சமலையான்' என்ற சிஷ்யர் இருந்தார். அந்த கலங்கி கஞ்ச மலையானுக்கு ஆறு சிஷ்யர்கள் இருந்தார்கள். அந்த ஆறு சிஷ்யர்களில் ஒருவரே 'போகரும்'' ஆவார். இப்படியான சிஷ்ய பரம்பரைக் காட்டும் பட்டியல் கீழே உள்ளது.

Golden Vimanam, Palani

Golden Vimanam (at left) and Raja Gopuram, Palani

போகரைப் பற்றிய அனைத்து செய்திகளும் திருமூலர் எழுதி உள்ள திருமந்திரம் என்ற நூலில் உள்ளன. திருமூலர் சைவ சித்தாந்திற்கு ஒரு தூணைப் போன்றவர். அவரே சைவ சித்தாந்திகளுக்கு தெய்வீக மார்கத்தில் இணைந்து , ஆத்மா ஞானத்தைப் பெற்று இறைவன் பாதத்தில் இணைந்து விடும் வழிமுறைகளை காட்டியவர். நவபாஷணப் பொருட்களில் கலவையைக் கொண்டு தயாரித்த முருகன் சிலையை வடிவமைப்பதிலும் போகர் வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டு உள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் காணப்படும் முருகன் சிலைகள் அழகிய இளைஞரைப் போல தோற்றம் உள்ளதாகவும், கிழக்கு நோக்கிப் பார்த்தவாறும் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் பழனியில் உள்ள முருகனின் சிலையோ மெல்லியதாகவும், மொட்டைத் தலையுடனும், காவி உடை அணிந்தபடியும், சாமியார் கோலத்திலும் கையில் தன்டாயுதத்தை ஏந்திக் கொண்டு தெற்கு நோக்கிப் பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளது. 'நானே முதிர்ச்சி உள்ள அறிவுப் பழம் ' என்பதை பறை சாற்றிக் கொண்டு நிற்பது போல அமைந்து உள்ளது.

Bhogar

அங்கு வரும் பக்தர்கள் பக்தி பெருக மூலவருக்கு செய்யும் அபிஷேகங்களினால் அந்த சிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாகும். கிருத்திகை தினங்களில் சுமார் அறுநூறு முதல் எழுநூறு அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. அத்தனை அபிஷேகம் செய்தும் அவற்றினால் எந்தவிதமான பாதிப்பும் அடையாமல், அந்த நவபாஷண சிலை எப்படி அப்படியே உள்ளது என்பதைக் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அந்த சிலையின் அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்கு கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில் தற்போது இல்லை என்பது தெரியவரும். பக்தர்கள் உபயோகித்து இருந்த சில அபிஷேகப் பொருட்களினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தொடைப் பகுதியில் முட்டிக்கு கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தெரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும், எலும்புகள் தேய்ந்து போன நோயாளிகளின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவிற்கு அந்த சிலை பழுது அடைந்துள்ளது. உடலின் பல பாகங்களில் சிறு சிறு பள்ளங்கள் போன்றவை தோன்றி உள்ளன. அந்த சிலை சொரசொரப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல காட்சி அளிக்கின்றது. கூர்மையான பொருள் போல சில பகுதிகளில் எதோ நீட்டிக் கொண்டு உள்ளது . அந்த சிலையின் கால்கள் பலவீனமாகி விட்டதினால் சிலையின் கனத்தைத் தாங்க முடியாமல் எந்த நேரமும் அந்த சிலையின் கால்கள் உடைந்து விடுமோ என்று கூட ஒரு கால கட்டத்தில் பயந்தார்கள்.

அந்த நிலை முற்றிக் கொண்டே போகத் துவங்கியதும், பல பக்தர்களும் மக்களும் அந்த சிலையின் உருவத்தை கண்டு அஞ்சி தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்களை அனுப்பினார்கள். அதனால் கவலையுற்ற தமிழக அரசும் 1983 -84 ஆம் ஆண்டுகளில் பழனியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த சிலை மேலும் பழுதாகி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்மானித்து பல யோசனைகளைப் பரிசோதித்தது. அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு கட்டதில் யோசனை செய்யப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டப் பின் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தப் பின் முதலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த அதே சிலையை அது முன்னர் இருந்த இடத்திலேயே வாய்க்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக பழுதடைந்த சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான சிலையை செய்து அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதான முன் உதாரணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் எந்த ஆலயத்திலும் நடைபெற்றது இல்லை.

கற்பாறைகளில் செய்யப்பட்ட சிலைகளைக் கூட ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்டபோது தற்காலிகமாக அதே ஆலயத்தில் எங்காவது ஒரு பகுதியில் கொண்டு போய் வைத்து இருந்து , ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனங்கள் செய்தப் பின் (வெண்ணையில் சில மூலிகைகளை கலந்து பசைப் போல தயாரித்து அந்த சிலை முழுவதையும் பூசுவதே அந்த நிகழ்ச்சி) முதலில் இருந்த இடத்திலேயே சிலையை கொண்டு போய் வைத்து விட்டு அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து விடுவார்கள். ஆனால் மூலவர் சிலையையே மாற்றி அமைத்து உள்ளதான சரித்திரமே எந்த ஆலயங்களிலும் கிடையாது. பழனியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் வடிவமோ இன்னும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டு விசேஷமான கலவையில் தயாரிக்கப்பட்டு வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினரின் உடல் நலத்தை மனதில் கொண்டு தெய்வாம்சம் கொண்ட 'போகரால்' செய்யப்பட்டு உள்ளது. அதை தயாரித்த விதமோ, அல்லது அந்த மூலிகைகளின் கலவையின் அளவோ எவருக்கும் தெரியாது. முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசைப் போல செய்து அதை அந்த சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது வேறு ஒரு மருத்துவக் குணம் கொண்டப் பசையாக மாறி வியாதிகளை தீர்க்கும் முறையில் மாறி விடுவதினால் அந்த சிலை மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோயும் விலகுகின்றன என மக்கள் கருதினார்கள். அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் உள்ளது என ஆலயம் வெளியிட்டு உள்ள புத்தகக் குறிப்பில் காணப்படுகின்றது.

ஒரு சாரரின் கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருட்களில் லட்சக்கணக்கான சில கிருமிகள் உள்ளன என்றும், அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதினால் அதைப் பருகும் மக்களின் உடலில் உள்ள தீய அணுக்கள் மடிந்து வியாதிகள் வெளியேறுகின்றன என நம்பினார்கள். அந்த அபிஷேகப் பொருட்கள் பலநாட்கள் பத்திரமாக வைக்கப்பட்டு சித்த மருந்துகளாக பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தானோ என்னவோ பழனி மலை அடிவாரங்களிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பல சித்த மருத்துவசாலைகள் பரவி உள்ளன என்பது வியப்பை அளிக்கும் செய்தியாக இருக்கவில்லை. பழனி தண்டாயுதபாணியே முதல் மருத்துவராக விளங்குவதினால் அந்த மூலவர் சிலையை மாற்றி அமைக்கலாம் என்ற யோசனையை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அந்த சிலை மேலும் பழுதடைந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அதற்கான வாழிமுறைகளை கண்டறிய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நியமித்தது. நல்ல கல்விமானும், பெரும் தெய்வ பக்தி மிகுந்தவருமான நீதிபதி சதாசிவம் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஐந்து உப குழுக்களை ஏற்படுத்தி பல்வேறு வழிகளையும் ஆராய்ந்தது பார்த்து அந்தப் பிரச்னைக்கு தீர்வு தரக் கூடிய வகையில் கருத்துக்களைத் தருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்தக் குழுக்களில் இருந்தவர்கள்:

  • பெரிய மடங்களின் மடாதிபதிகள், சமயத் தலைவர்கள்
  • புகழ் பெற்ற ஸ்தபதிகள்
  • ஆகமங்களில் சிறந்து விளங்கியவர்கள்
  • பூசாரிகள் மற்றும் பண்டாரங்கள்
  • விஞ்ஞானிகள்

நானும் ஒரு விஞ்ஞானி என்பதினால் அந்த உப குழுவில் இருந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்று இருந்தேன். அந்த மூலவரின் சிலை எந்தப் பொருளினால் செய்யப்பட்டு உள்ளது என்பதைக் கண்டறியும் வேலை எங்களுக்கு தரப்பட்டு இருந்தது. நாங்கள் உண்மையைக் கண்டறியும் குழுவில் இருந்ததினால் மூலவரின் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதை இன்னமும் என் வாழ்நாளில் கிடைத்த பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன். நாங்கள் அந்த சிலையின் அருகில் சென்று அதை ஆராய்ந்து பார்த்தோம். சிலையின் முகமோ எந்த விதமான சேதமும் அடையாமல் புத்தம் புதிய சிலையைப் போலவே காணப்பட்டதைக் கண்டு வியந்தோம். பூதக் கண்ணாடியைக் கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்றப் பொருள் போலவே தெரிந்தது. அடுத்து கழுத்துப் பகுதிகளையும் அதற்கு கீழே இருந்த உடல் பகுதிகளையும் ஆராய்ந்தபோது சிலையின் உடல் பாகத்தின் நிலையைக் கண்டு திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் இருக்க உடலின் சில பாகங்கள் நீண்டு கூர்மையான பொருட்களைப் போல நீண்டு இருந்தது. இரண்டு கால்களும் ஒரு மெல்லியக் குச்சி ஒரு பீடத்தில் நின்று உள்ளதைப் போல காணப்பட்டது. பலம் இழந்து போய் இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் அந்த சிலை விழுந்து விடக் கூடிய அபாய நிலையில் இருந்தது.

மூலவரின் முகமோ புத்தம் புதிதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டதுபோல அந்த சிலை பழுதடைந்து இருந்தது அபிஷேகத்தினால் இருக்க முடியாது என்பது தெரிய வந்தது. அபிஷேகத்தினால் சிலை சிதைந்து உள்ளது என்பது உண்மை என்றால் முகம் மட்டும் எந்த மாறுதலும் அடையாமல் இருக்க, உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்றக் கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்து சிலை பழுதடிந்துள்ளது என்றக் கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது.

அடுத்த செய்தி, கர்பக் கிரகத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பண்டாரங்களுக்கும் பழனியில் இருந்த சித்த வைத்தியர்களுக்கும் இடையே இருந்த தொடர்புப் பற்றியது. அவர்களிடையே இருந்திருந்த தொடர்ப்பினால் சில விஷமிகள் அவ்வப்ப்போது அந்த சிலையின் உடலை சிறிது சுரண்டி அதில் கிடைத்தப் பொருட்களை சித்த வைத்தியர்களுக்குக் கொடுத்து இருக்கலாம், அதைக் கொண்டு அவர்கள் சில மருந்துகளை தயாரித்து இருக்கலாம் என்பதினால்தான் சிலை பழுதடைந்து உள்ளது எனப் பரவலாக கூறப்பட்டது. ஏன் எனில் பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீர் எனப் பெரும் புகழ் பெற்றன. அந்த சிலை எதோ ஒரு வகையிலான கருங்கல்லினால் செய்யப்பட்டு உள்ளது போல தோற்றம் தந்தாலும் அதை விஞ்ஞான பூர்வமாக எங்களால் நிரூபிக்க முடியவில்லை என்பதின் காரணம் அந்த சிலையில் இருந்து விழுந்த எந்தப் பொடித் தூள்களுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த சீலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீர் அந்த சிலையின் மீதுள்ள நவபாஷண பொருள் மீது ஏறி வருவதினால் ரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாக மாறி விடுகின்றது எனவும், அந்த நீரைப் பயன்படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனைகளை தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் நல்ல சந்தனத்தை பசையைப் போல அரைத்து அதை அந்த சிலையின் மீது பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலையின் மீதே இருக்குமாறு விட்டு வைத்து விட்டு மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம். அணுத்தூள்களை சோதனை செய்யும் கருவியான 'பேர்க்கின் எல்மார் ௭௦௭' எனும் மிக நீளமான கருவியை திரவப் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் நிலையில் துல்லியமாக நிலை நிறுத்தி விட்டு அந்த சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் ஏதும் சந்தனத்துடன் கலந்து வருகின்றதா என ஆராய்ந்து பார்த்தோம். என்ன ஆச்சர்யம். சிலை மீது இருந்து எடுத்த சந்தனப் பசையில் எந்தப் பொடிகளுமே கலந்து வரவில்லை என்றாலும், அந்த சந்தனப் பசை மருத்துவ குணம் கொண்டப் பசையாக மாறி இருந்ததைக் கண்டோம். பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து ஆராய்ந்தபோதும், ஒரே மாதிரியான முடிவையே தொடர்ந்து காட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே இரவு முழுவதும் சிலை மீது நாங்கள் பூசி வைத்து இருந்த சந்தனப் பசை என்ன ரசாயன மாற்றம் அடைந்து இருந்தது என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு உணர்த்திய உண்மை என்ன என்றால், எந்த நவீன விஞ்ஞானக் கருவிகள் மூலமும் தெய்வீகத் தன்மைக் கொண்டப் பொருட்களை ஆராய முடியாது என்பதே.

அதன் பின் நாங்கள் எங்களுடைய அறிக்கையை தயாரித்து தலைமை செயலாளருக்கு அனுப்பினோம். அவரும் அவற்றுக்கு தேவையான மேற் குறிப்புக்களுடன் அதை அரசாங்கத்திடம் சமர்பித்தார். அந்த சிலையின் உருவ பாதுகாப்பைக் கருதி அந்த சிலைக்கு பயன்படுத்தி வந்த அபிஷேகப் பொருட்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து அதன்படித்தான் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தோம். அந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இன்னொரு வதந்தியும் நிலவிக் கொண்டு இருந்ததைக் கண்டோம். அந்த செய்தி என்ன என்றால் சித்த முனிவரான போகர் பழனியில் தான் செய்து வைத்து இருந்த சிலையைப் போலவே மூன்று சிலைகளை செய்ததாகவும், அவற்றில் இரண்டு சிலைகளை பூமியில் எங்கேயோ மறைத்து வைத்து உள்ளதாகவும், தக்க சமயத்தில் தெய்வீகப் பிறவி ஒருவர் அதைக் கண்டுபிடித்து வெளியில் எடுத்து அந்நாள்வரை பயன்படுத்தி பழுதடைந்து உள்ள சிலையை மாற்றி அமைப்பார் என்பதே. இதன் மூலம் தெரிய வந்தது என்ன என்றால் இறைவன் நம்மிடம் கொடுத்து உள்ள பொருட்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் பல நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களால் இறைவனது படைப்புக்களை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. ''மனித குலத்துக்கு தான் செய்து உள்ள சேவை, புராதான காலமாக வந்துள்ள நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்பதே.

முருகனுடைய சிலையில் இருந்து எந்தப் பொருள் ரசாயன மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீனக் கருவியினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற உண்மையை பெரும்தன்மையுடன் ஒரு விஞ்ஞானி வெளிப்படுத்தி உள்ளார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் இந்த தருமணத்தில் நினைவில் நிற்கின்றது '' சூனியத்தில் இருந்துகொண்டு, இந்த அகண்டத்தையே ஆண்டு கொண்டு, நம் கற்பனைகளுக்கு அப்பால் உள்ளவரே கடவுள். அவர் யார் , எப்படி இருப்பார் என்பதை புரிந்து கொண்டு யார் ஒருவர் அவரை உளமார உணர்கிறார்களோ அவர்களுக்கு அவர் காட்சி அளிப்பார்''


Dr. Prof. M.S. Saravanan, M.Sc., Ph.D., F.M.S., F.G.S. is an an earth scientist and mineralogist and former Director of the Tamil Nadu Department of Geology & Mines and Chairman of Tarnilnadu Minerals Limited. A one-time close associate of Kripananda Variar, he was appointed Head of the Palani Andavar Idol Replacement Committee.

Translated into Tamil by சாந்திப்பிரியா

This paper was presented at the First International Conference Seminar on Skanda-Murukan, December 1998

Other articles about Kaumara Iconography and Art History:

  • Iconography of Skanda-Murukan
  • 'Iconography of Murugan' by Raju Kalidos
  • "Trimurti in Medieval South India"
  • "Iconography of Somaskanda"
  • "Palani Andavar Idol: A Scientific Study"
  • "Rare Image of Brahmasasta"
  • "Kinetic Iconography of Murukan"
  • The Iconography of Goddess Kaumārī
  • "Painting of Murugan, Subrahmanya or Karthikeyan"
  • "Significance of Kaumara Icons"
  • "Mailam Murukan temple"
  • "7th cent. Murukan image discovered"
  • "Vallakkottai Murukan Temple"
  • "Karttikeya Images of Ancient Java"
  • "Skanda Images in Ancient Cambodia"
  • "17 Iconographical Aspects of Subrahmanya"
  • 19th Century Bengali Watercolor of Karttikeya
  • Skanda upon Peacock, 11th-12th Cent Chola Granite
  • Galleries of Kaumara Iconography

  • Gallery One: Tiruvavaduthurai Adheenam
  • Gallery Two: 1920's - 40's collection
  • Gallery Three: early to late 20th century
  • Gallery Four: 1930-50 lithographs
  • Aru Padai Veedu paintings
  • Paintings of famous temple moolavars