Lord Skanda-Murugan
 

வை துவ் பூ சா (போதிசத்துவ ஸ்கந்தன்) போதிசத்துவ ஸ்கந்தன்

Wei Tuo
Wei Tuo Pú sà
(Bodhisattva Skanda)
Skanda at Baima Monastery, China
Skanda at Baima Monastery
Shuanglin_Skanda
Skanda, a colored sculpture in the Shuanglin Temple, China
Chinese Skanda
Skanda in the well-known Sanskrit Dharani of Great Compassion. In the Chinese gloss-version there is a quasi-Sanskrit rendering of Dhuru Dhuru Vajayate - 'the Victorious One who delivers'. The Chinese depict the 'Bodhisattva' Skanda as accompanied by a peacock.

சீன தேசத்தினர் வழிபடும் புத்த மதத்தில் தம்மை ரட்சிக்கும் கடவுளாகக் கருதப்படும் எட்டு பேர்களில் ஒருவரே 'வை துவ் பூ சா' எனும் 'போதிசத்துவ ஸ்கந்தன்' ஆவார். அவர் ஒரு படையின் சிறப்பு மிக்க படைத் தலைவரைப் போல தோற்றம் தருபவர்.

கௌதம புத்தர் தான் முக்தி அடையும் முன்னால் அவரை அழைத்து புத்த மதத்தின் தருமங்களைப் பாதுகாக்குமாறு அவரிடம் கூறினார். புத்தரின் மறைவுக்குப் பின்னால் துர் தேவதைகள் அவருடைய புனிதச் சின்னங்களை அபகரித்துக் கொண்டு ஓடியபோது, 'வை துவ் பூ சா' அவற்றை விரட்டிச் சென்று அந்த நினைவுச் சின்னங்களை மீட்டு வந்தார்.

புத்த மடாலயங்கள், அதன் செல்வங்கள் மற்றும் புத்த தர்மம் போன்றவற்றை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுவதில் கவனம் செலுத்தியவர் 'வை துவ் பூ சா' எனும் 'போதிசத்துவ ஸ்கந்தன்' என்பவர். சீனாவின் ஹினன் மாகாணத்தில் உள்ள 'லுயோ யாங் 'கில் உள்ள 'பைமா' (வெள்ளைக் குதிரை மடாலயம்) என்ற மடாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்குதான் ஒரு வெள்ளை நிறக் குதிரை புத்தரின் புனித நூல்களை சுமந்து கொண்டு வந்ததாக வரலாற்றுக் கதை உள்ளது.

புத்தமதத்தை சார்ந்தவர்கள் 'பைமா' மடாலயத்தை தமது மூதாதையர் வழி ஆலயம் என்றும், இங்கிருந்துதான் புத்தமதம் சீனாவில் வந்தது என்றும் நம்புகிறார்கள். இந்த மடாலயத்தில் 'வை துவ் பூ சா' எனும் 'போதிசத்துவ ஸ்கந்தனின் ' இரண்டு ஆள் உயர சிலைகள் (படத்தில் உள்ளதைப் போன்ற) கடவுளாக வணங்கப்படுகின்றன.


Translated into Tamil by சாந்திப்பிரியா

Read the the original article in English in Wei Tuo Pú sà (Bodhisattva Skanda) Translated into Tamil by சாந்திப்பிரியா (Santhipriya)

Iconographic Contact between Karttikeya and ManjuŚrī in China
Skanda in Japanese Buddhism
Karttikeya in ancient JavaKarttikeya in ancient Cambodia
Index of research articles on Skanda-Murukan