Lord Skanda-Murugan
 

கந்தர் அனுபூதியில் பொதிந்த மெய்ப்பொருள் தத்துவம்

க.ரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ப. இரத்தனசாமி

முன் நூல்கள்

கவிஞர் அருணகிரி நாதர் கந்த வேளைத் துதித்துச் சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவைகள் நிறைந்த பல நூல்களை இயற்றிய&லதஇள்ளார். இந்த நூல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாக முனைவர் தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் பகுத்துத் தொகுத்து, முருகவேள் பன்னிரு திருமுறை என்ற தலைப்பில் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்ப&லதஇக் கழகத்தினர்f மூ லம் வெளியிட்டுள்ளனர். இந்த வரிசையில் கந்தர் அனுப&ஙதஇதி பத்தாந் திருமுறையாக அமைந்துள்ளது. கந்தர் அனுப&ஙதஇதியின் விளக்கம் கிருபானந்த வாரியார் அவர்களாலும் எழுதப்பட்டுள்ளது. தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் கந்தர் அனுப&ஙதஇதியில் கண்ட இறைமைத் தத்துவங்களைப் பேராசிரியர் Clothey (1984) எழுதியுள்ளார்.

நோக்கம்

சமயப் பூசல்களால் பீடிக்கப்பட்டு மக்கள் அமைதி இழந்து வாழும் இந்நாளில், பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முருகன் அருள் பெற்ற அருணகிரி நாதர் தீட்டியுள்ள மெய்ப் பொருள் விளக்கத்தைத் தற்காலச் சமயச் சூழ் நிலையில் ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். இதன் பயனாக, ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாத முழு முதற் பொருள் பல சமயங்களிடையே பெயர் அளவில் மாறு படுகின்றதே தவிர அடிப்படையான தத்துவப் பொருண்மையில் ஒத்திருக்கின்றது என்பது பெறப்படும்.   

மெய்ப் பொருள் (Absolute Reality)

மனதுக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்ட மூ ல மெய்ப்பொருள் எத்தன்மைத்து என்று ஞானிகளாலும் விளக்குதல் எளிதல்ல. மெய்ப்பொருளைக் காண்பதுவே அறிவுடைமை என்று தமிழ் மக்களுக்குப் பண்டை நாளிலேயே அறிவுரை வழங்கியவர் திருவள்ளுவர் ஆகும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு (திருக்குறள்)

பதி (இறை) ஞானம் சிறிதும் இன்றி பசு (ஆன்மா), பாச (மலங்கள்) ஞானம் மட்டும் மிகுந்தோர், மெய்ப் பொருளை உணர்வது அதனினும் கடினம் என்பதில் ஐயமில்லை. இந்த நிலைமையை மாற்றுவதற்குத் தென்னாட்டுப் பக்தி மார்க்கத்தில், முழு முதற் பொருளுக்குப் பல வேறு உருவங்கள் அமைத்து, பெயர்களும் கொடுத்து, கோயில்கள் கட்டி, பூ சைகள் செய்து, அவரவர் குடும்பங்களைக் காக்கும் தெய்வங்களாக வழிபடுவது மர பு . இங்ஙனம் செய்வது பாமர மக்களை இறைவழிப் படுத்தும் முயற்சியின் முதல் கட்டம் என்பதை நினைவு கொள்ளல் நன்று. சைவ சமயத்தில் இந்தக் கோட்பாடுக்குக் கடைக்கால் இட்டது காரைக்கால் அம்மையார் ஆவர்.

(அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்

இன்றும் திருவுருவம் கண்டிலேன் -- என்றுந்தான்

எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்

எவ்வுருவோ நின் உருவம் &ளஉஒதஇது) --- காரைக்கால் அம்மையார் (அற்புதத் திருவந்தாதி) 61.

அம்மையாருக்குப் பின்னர் வந்த சைவ சமயக் குரவர்களால் தேவாரப் பாடல்களில் இந்த வழிபாட்டு முறை வளர்க்கப்பட்டது.

(செந்தமிழர், தெய்வமறை நாவர், செழுநற்கலை
தெரிந்த அவரொடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய
அமர்கின்ற அரனுர்) --- திருஞானசம்பந்தர் (தேவாரத் திருமுறை) 3-80-4.

(....நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு,

புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,

     பூமாலை புனைந்து &ளஉஒதஇத்தி, புகழ்ந்து பாடி,

தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி.) திருநாவுக்கரசர் (தேவாரத் திருமுறை (6-31-3)

புராண ஸ்கந்தனைத் தமிழில் கந்தனாக கந்த புராணம் என்ற நூலின் மூலம் அளித்தவர் கச்சியப்fப சிவாசாரியார். இவர்களுக்குப் பின்னர் தோன்றிய அருணகிரி நாதர் முழு முதற் பொருளைக் எகந்தன்எ எனக் கொண்டு, ஞானக் கந்தனாகத் தமிழ் மக்களுக்கு வழங்கினார். பதி ஞானத்துடன் கூடிய முற்றிய பக்தியால் தான் மெய் பொருள் உணர்வை அடைய முடியும் என்ற மேலான தத்துவத்தை மக்களிடையே பரப்பியது கந்தர் அனுபூதியின் தனிச் சிறப்பு ஆகும்.

மெய்ப் பொருள் உணர்வை அழுந்தக் கூறிய காரணம்.

கந்தர் அனுபூதியில் மெய்ப் பொருளைக் குறித்துப் பல இடங்களில் (பாடல்கள் 8, 11, 20, 45) இந்த நூலில் வலியுறுத்தப்ட்டுள்ளது. புராணக் கதைகளும் உருவ வழிபாடும் தழைத்தோங்கிய போது அருணகிரியார், மூல மெய்ப் பொருளுக்கு மிக்க முக்கியத்துவம் தரக் காரணம் என்ன என்று சிந்திக்த் தக்கது.

மக்களுக்குப் பக்தி மார்க்கத்தைப் புகுத்திய நாயன்மார்களும், ஆழ்வர்களும் மறைந்த பின்னர், அடுத்த சில நுற்றாண்டுகளில் சைவ, வைணவ சமயத்தைச் சார்ந்த அடியார்களுக்குள் இருந்த வேறுபாடுகள் மிகுந்து பெரும் பூசல்களாக உருவெடுத்தன. ஒரு ஊருக்குப் போகும் வழியை ஊராகவே எண்ணும் நிலையும் உருவகியது. உருவ வழிபாடு என்பது, உரு, அருவற்ற முழு முதற் பொருளை மனத்தில் நிலைக்கச் செய்தற்கும், உணர்தற்கும் &ளஉஒதஇற்ற வழிமட்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டும் பொருட்டே என்பதே கந்தர் அனுபூதி என்ற ஞான நூலின் சமயப் பொருண்மையாகும். தத்துவக் கருத்துக்களுக்கும், வழி பாட்டு முறைகளுக்கும் நிலவிய இடை வெளியைக் குறைப்பதே இந்நூலின் நுண்ணிய கருத்து எனலாம்.

அரி, அரன் இருவருக்குள் உயர்ந்தவர் யார் என்னும் வினாவிற்கு முத்தாய்ப்பு வைக்கும் பொருட்டு அருணகிரியார் இரண்டு வழிகளைக் கையாண்டார். கந்தர் அனுபூதியின் மூலம் மூலப் பரம்பொருளை உருவத்துக்குள் அடக்க முடியாது என்பதையும், புலன்களுக்கும் அறிவுக்கும் அப்பால் பட்டது என்பதையும் வலியுறுத்தினார். பிரணவ மந்திரமான ஓங்காரத்தைச் சிவாயநம என்று ஐந்தெழுத்தாலும் மட்டும் அன்றி, ஆறெழுத்தாகிய சரவனபவ என்பதாலும் குறிக்கலாம் என்பது அருணகிரியாருடைய தேற்றம்.

இரண்டாவதாகத் திருப்புகழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்யுட்களில் கந்தன்f, சிவபெருமான் - உமை இவர்களின்f மைந்தன் என்றும், அடுத்துத் திருமாலின் முருகன் என்றும் திரும்பத் திரும்பக் கூறி சைவ- வைணவ அடியார்களிடையே ஒருமை மனப்பான்மையை வளர்த்தார்.

பக்குவப்பட்ட மனம் படைத்த ஞானிகளுக்கும் அறவோர்களுக்கும், உருவமற்ற மூல ப் பொருளைக் குறித்துத் தியானம் செய்து அதனுடன் கலத்தல் சாத்தியம் ஆகலாம். ஆனால் உலக வாழ்வில் சிக்குண்டு, மயங்கி, சிதறுண்ட மனம் உள்ள &ளஉஒதஇனையோர்க்கு அங்ஙனம் மனதை ஒருமுகப் படுத்துதல் எளிதல்ல. மூவாசைகளும், மும்மலங்களும், தீவினைகளும் நிறைந்து, இல்லற வாழ்க்கையில் உழன்று திரிவோர்க்கு முழு முதற் பொருளைக் குறித்து தியானிக்க வு ம், அத்துடன் ஒன்றறக் கலக்க வு ம், பல தடைகள் இடைஞ்சலாக இருக்கின்றன. ஆதலால் ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாத மெய்ப் பொருளுக்கு, ஆயிரம் திருநாமங்கள் சூட்டி, ஒருமையுடன் வழிபடுதல், அந்த மெய்ப் பொருளை மாந்தர் அனைவரும் உணரும்படி செய்வதற்கு உறு துணையாக அமையும் என்னும் அரிய தத்துவம் கந்தர் அனுபூ தியில் விளக்கப்படுகின்றது.இரண்டாவதாகத் திருப்புகழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்யுட்களில் கந்தன்f, சிவபெருமான் - உமை இவர்களின்f மைந்தன் என்றும், அடுத்துத் திருமாலின் முருகன் என்றும் திரும்பத் திரும்பக் கூறி சைவ- வைணவ அடியார்களிடையே ஒருமை மனப்பான்மையை வளர்த்தார்.

அறிதற்கு அரிதானதும், குணம் குறியற்றதுமான பரம் பொருளை உணர்ந்து கொள்ளும் பொருட்டு, அதனை அவரவர் மனதுக்கு உகந்த உருவங்கள் அமைத்து தெய்வங்களாக வழிபடுவது, கண்டு அறிந்தவைகளின்f YY மூல ம் காண ஒண்ணாத ஒன்றை அறிதற்காக, என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்தது. மெய்ப்பொருள் உணர் வு க்கு முதற்படி தெய்வ வழிபாடு என்பது பழந்தமிழர்களின் தேற்றம். இது பழந் தமிழ் மக்கள் பக்தி மார்க்கத்துக்கு வழங்கிய ஒரு உத்தி என்று கூறினால் அது மிகையாகாது. இந்த உண்மையை அறியாத அகச் சமயத்தோர் சிலர், வழி படும் தெய்வங்கள், மூல ப் பரம் பொருளை அடைய வு ம் அத்துடன் கலக்க வு ம் ஒரு &ளஉஒதஇணி போல் உத வு கின்றன என்பதை மறந்து விடுகின்றனர். பு றச் சமயங்களோ இந்தச் சீரிய சமய தத்துவத்தையே அறியாமல் பல தெய்வங்களை வணங்குபவர் என்று தவறாகப் பொருள் கொள்வர்.

தெய்வங்கள் பல என்பது காண்போரின் கருத்து நிலை. பரம் பொருள் ஒன்றே என்பது மூலப் பொருளுக்குரிய தத்துவ நிலை. கந்தன் என்றும் (பாடல் 33), உமையாள் மைந்தன் என்றும் (பாடல் 46), கதிர் வேலவன் என்றும் (பாடல் 46), குகன் (பாடல் 15) என்றும், மறை நாயகன் என்றும் (பாடல் 46), முருகன் (பாடல் 15) என்றும் பல நாமங்கள் சொல்லித் தொழுவதால் ஒருமைப் பொருளைப் பன்மையில் போற்றிப் பணிகின்றோம் என்பது விளங்கும்.

இப்படிப்பட்ட பரம் பொருளின் தன்மைகளை அனுபூதி கிட்டிய ஞானிகளும் அப்பேரின்பத்தைப் பிறருக்கு எடுத்துரைக்க இயலாதவர்களாக இருக்கின்றனர். அருணகிரி நாதரும் இதற்கு விலக்கில்லை. அதனால் தான் அனுபூதியில் பல இடங்களில் அவர், நவிலத்தகுமோ (பாடல் 28), ஒருவர்க்கு இசைவிப்பதுவே (பாடல்30), ஆண்டது செப்புமதோ (பாடல் 38), தந்தது செப்புமதோ (பாடல்44) என்று கூறியிருப்பதைக் காண்கின்றோம். இதே காரணத்தினால் தான் பரம் பெருள் எஓம்எ என்னும் பிரணவ ரூபமாய், நாத, விந்து, கலைகளுக்கு அப்பால் பட்டது ( பாடல் 1) என்ற அரிய கருத்தால் விளக்கப் பட்டது. அருணகிரி நாதரின் மெய்ப் பொருள் தத்துவத்தைப் படம் 1 மூலம் அறியலாம். மிகவு=ஏஏ ஸபாந=ஏஏ>பூதியில் கூறப்பட்டுள்ளதை வலிய

கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர் மெய்ப் பொருள் தத்துவங்களையதி நெறிகளைய

அனுபூதி பாடல் வரிசை எண்

மெய்ப் பொருள் தன்மை 3, 8, 11, 18, 19, 20, 21, 28, 36, 45, 49, 51
மூவாசை 2, 4, 5, 9, 14, 16, 24, 34, 39, 43
மும்மலங்கள்  
ஆணவம் 3, 28, 37
கருமம் 7, 14, 16, 25, 31, 40
மாயை 5, 7, 8, 17, 25, 27, 29, 31, 37, 35, 39, 40, 48
திருவடி 6, 14, 21, 23, 53, 40, 44
அருள் 1, 15, 21, 25, 30, 51
ஞானம் 13, 17, 30, 42, 45, 48, 50
தியானம் 42, 49
துதி 15, 21, 26, 27, 28, 33, 34, 41, 46
அனுபூதி 17, 20, 28, 30, 38, 43, 44, 49

மெய் உணர்வுக்குத் தடைகள்

முதற்கண், ஐம்புலன்களின் வசப்பட்டு அதனால் விளையும் மண், பெண், பொன் ஆகிய Yமூவாசைகளை அடக்க வேண்டும். மாயைவிடா மூவேடணை என்று முடிந்திடுமோ (பாடல் 39) என்று கூறியது இதை விளக்கும் பொருட்டே. விவலியம் முதலிய புறச fசமய நூல்களும் ஆசையின் விளைவுகளைக் குறிப்பிடுகின்றன.

அடுத்து நம்மைப் பீடிக்கும் மும்மலங்களாகிய ஆணவம், கருமம், மாயை ஆகியவற்றை விலக்க வேண்டும். எல்லாம் அற என்னை இழந்த நலம் (பாடல் 2), யானாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலை நின்றது (பாடல் 28), அறிவால் அடியோடும் அகந்தையையே ( பாடல்37) என்ற அடிகள் யான், எனது என்ற இருமைகளையும் ஆணவத்தையும் குறிfப்பன. விடுவாய், விடுவாய் வினையாவையுமே (பாடல்7) வினையோட விடும் கதிர் வேல் (பாடல் 40) என்பவை கரும மலத்தைக் குறிப்பிடுவன. மகமாயை களைந்திட (பாடல் 5), அகமாம் எனுமிப் பிரமங்கெட (பாடல் 8), என்ற சொற்றொடர்கள் நிலையாமையை (மாயையை) உணர்த்துவன.

மெய்ப்பொருளை உணர, உலக அறிபு (பசு, பாச ஞானம்) போதாது. பல நூல்களைக் கற்று உலக அறிவால் மட்டும் மூலப் பொருளை அறிய முடியாது அதற்குப் பதி ஞானம் வேண்டும் என்பதை (அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில் ( பாடல் 48) என்ற பாடலில் காணலாம். மெய் உணர்வுக்குத தடையாய் நிற்பவைகளைப் படம் 2 Yவிளக்கிக் காட்டுகின்றது.

மெய் உண்ர்வுக்கு நெறிகள்

அனுபூதிக்குத் தடையாயிருப்பவைகளை அறிந்த பிறகு இறை உணர்வுக்குத் துணையாயிருப்பவைகளை ஆராய்தல் நன்று. உருவும் அருவமாக நிற்கும் பரம் பொருளை மனம் உருகித் துதி செய்தல் வேண்டும். நெஞ்சக்கனகல்லும் நெகிழ்fந்து உருக என்று காப்புப் பகுதியிலேயே கூறியது கவனிக்கத் தக்கது. உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் (பாடல் 15) என்பது அருணகிரியார் வாக்கு. ஒரு நாமம் ஓர் உருவம் இல்லார்க்கு ஆயிரந் திருநாமம் சொல்லித் துதி செய்வதில் தவறில்லை. முருகன், குமரன், குகன் (பாடல் 15), கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே (பாடல் 46) என்று பலவாறு அருணகிரி நாதர் துதி செய்திருக்கிறார்.

துதித்தால மட்டும் போதாது. வேறொன்றையும் பற்றி எண்ணாமல் மெய்ப் பொருளைத் தியானிக்க வேண்டும். குறியைக் குறியாது குறித்தறியும் (பாடல் 42), தன்னந் தனி நின்றது தான் அறிய (பாடல் 49) என்பவைகளை மனதை ஒருமுகப் படுத்துதல் என்ற தலைப்பில் அடக்கிக் கூறலாம். மௌன நிலையில் தான் அனுபூதி கிட்டும் என்பது சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே (பாடல் 12) என்பதால் அறியப்படும்.

மனமுருகத் துதிக்கும் அடியோர்க்கு இறைவன் எளியோன் என்பது முருகன், குறமகள் பாதம் தொழுதான் (பணியான என வள்ளி பதம் பணியும் (பாடல் 6), பாளைக்குழல் வள்ளி பாதம் பணியும் (பாடல் 22) என்ற அடிகளால் உணரலாம்.

மெய்ப்பொருளுடன் கலத்தல் என்பது இறைவன் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளல், (சரணம் சூடும்படி தந்தது (பாடல் 44) என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது. மெய்ப் பொருளை உணற்வதற்கு ஏற்ற வழிகளைப் படம் 3 விளக்கும்.

மெய்ப் பொருளுடன் கலத்தல்

இதுகாறும் கூறியவாற்றால் கந்தர் அனுபூதியில் குறிப்பிடப்பட்ட மெய்ப் பொருள் கலத்தல் என்னும் தத்துவம் ஞானிகளுக்கு மட்டுமன்றி இல்லறத்த்iல் வாழ்ந்து ஐம்பஎ என்ற அடியை நினைவு கொண்டால், இந்த அறநெறி முறைகளின் மேன்மைய எடுத்துக் காட்டாக வினைகளை அறவே விட வேண்டும் என்ற அறவு ஆகியாவகாள நன்க ஆராய்ந்த செயல்பட்டால் தான், திய விaனகாள அகற்றி, வாரயாரயு உலகிலுள்ள சமய நூல்கள் அனைத்திலும் இறைமைத் தன்மைகளும், மனிதப் பண்ப அவற்aறப் பகத்தறிவ கந்தர் அனுபூதியில் சுரர்கள் உயர் நிலையைய விதி என்னும் சொல் பிரமனைக் குறிக்கும். (விதி காணும் உடம்பை விடா வினையேன் (பாடல் 35) என்னும் பாடல் சிந்திக்கத் தக்கது. ஒருவன் செய்ய மெய்ப் பொருள்தத்துவமும் சமய வாதங்களும்.

செல்வம் மிகுந்து, விஞ்ஞானம் வளர்ந்து, மக்கள் மிகவாக முன்னேறி இருக்கும் இந்நாளில் அருணகிரி நாதர் கந்தர் அனுபூதியில் கூறிய அருள் வாக்கு எத்துணை பொருத்தமானது என்று சிந்fதிப்பது அவசியம். மதம், இனம், சாதி, மொழி, பொருள் என்ற அடிப்படையில் மனித சமுதாயம் பல்லாயிரம் பிளவு பட்டுக் கலங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது. தத்தம் கோட்பாடே மெய் என்றும், சரி என்றும் தர்க்கம் இட்டு, அடியார் கூட்டங்கள் ஆண்டவன் அருளை நாடுவதைவிட, தங்களுடைய கொள்கையே உயர்ந்தது என்று நிலை நாட்டுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றன. இதை உணர்ந்தே மாணிக்க வாசகர் எசமய வாதிகள் தம்தம் மதங்களே அமைவது ஆக அரற்றி மலைந்தனர்எ என்று திருவாசகத்தில் கூறினர் போலும்!

தெய்வங்களைக் குறித்து மக்கள் ஒருவரோடு ஒருவர் போராடி மடியும் இந்தக் காலத்தில் கந்தர் அனுபூதியில் கூறப்பட்ட மூலப் பொருள் தத்துவம் அனைவராலும் உணரத் தக்கது. மெய்ப் பொருள், உருவாய், அருவாய், உளதாய், இலதாய், மருவாய், மலராய் (பாடல் 51) பல நிலைளில் உளது என்று அருணகிரி நாதர் கந்தர் அனுபூதியை முடிக்கின்றார். மூலப் பொருளுடன் ஒன்றிட விரும்புவோர் அதனைத் தானாய், உடனாய், வேறாய் நிற்கும் நிலைகளில் உணர்ந்து கொள்ளலாம். தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை தமிழ் இலக்கியத்தில் தெய்வம், கடவுள், இறை என்ற சொற்கள் பலவேறு கருத்துக்களை உணர்த்த பயன்படுத்தப்பட்டன என்று பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் (1994) சுட்டிக் காட்டியுள்ளார். சற்று ஆழ்ந்து சிந்தித்து, இந்தச் சொற்கள் யாவும் விவரிக்க முடியாத மூலப் பரம்பொருளைச் சித்தரிக்க மனிதன் மேற்கொண்ட முயற்சிகள் என்று பொருள் கொண்டால், பெயர்களால் ஏற்படும் சமயப் பூசல்கள் குறையும் என்று நம்பலாம்!

முடிவு

கந்தர் அனுபூதியில் பொதிந்தத் தத்துவச் சிறப்புகளின் சுருக்கம் வருமாறு.

  • மக்கள் தம் மதங்களைக் காப்பதிலேயே கவனம் செலுத்தாமல், பிறவி எடுத்த ஆன்மாக்கள், மூலப் பரம்பபொருளில் ஒன்றிட முயற்fசிப்பதே அறிவுடைமையாகும்.
  • எந்தப் பெயரைக் கொண்டு அழைத்தாலும் மெய்ப் பொருளுக்கு ஒரு குறைவும் &ளஉஒதஇற்படாது.
  • அவரவர்களுக்கு உகந்த வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து, மெய்ப்பொருள் உணர்வை எய்தற்கு உள்ள தடைகளும், அவற்றைப் போக்குதற்குரிய நெறிகளும் விளக்கப்டடுள்ளன.
  • பதி ஞானத்துடன் கூடிய முற்றிய பக்தியால் மெய்ப் பொருள் உணர்வை அடையலாம்.

அருள் நெறியில் முன்னேறி மெய்ப் பொருளுடன் ஒன்றிட விரும்புவோர்களுக்குக் கந்fதர் அனுபூதியில் கூறப்பட்ட உத்திகள் பயன்படும். மெய் உணர்வுக்குத் தடையாய் இருப்பனவற்றை அகற்றி, உற்ற நெறிகளை &ளஉஒதஇற்று, வழி படும் தெய்வங்களை, வரங்கள் தரும் கற்பகத் தருவாகக் கருதாமல், பரத்தின் கண் மனத்தை நிறுத்திப் பக்குவப்படுத்தும் பற்றுக் கோடாக எண்ணும் மனப்பான்மை இக்காலத்துக்குப் பொருத்தமானதாகும்.

கந்தர் அனுபூதி சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல். இதில் கூறப்பட்ட மெய்ப் பொருள் தத்துவங்களும், அற நெறிகளும் காலத்தினால் மாறுபடாமல் அன்று போல் இன்றும் நிலைத்து நிற்கின்றன. மனித சமுதாயங்களின்f மாறுபட்ட வாழ்க்கை முறைக்கு &ளஉஒதஇற்ப, புது நோக்கோடு பழைய சமயக் கோட்பாடுகளை ஆராய்ந்தால், துறவோர் இறையுடன் ஒன்றிடவும், மற்றவர்கள் வளமாக, மன அமைதியுடன் வாழவும் இந்த அறிவு நு|ல் பயன்படும் என்பது திண்ணம்.

பிற நூல் குறிப்புகள்

  1. செங்கல்வராயன், வ.சு. 1992. முருகவேள் பன்னிரு திருமுறை. தொகுதி 4. பத்தாம் திருமுறை. கந்தர் அனுபூதி. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  2. Clothey, F.W. 1984. Quiescence and Passion. The Vision of Arunagiri. Publication No. 63. Madurai Kamaraj University, Madurai.
  3. Karthikeyan, N.V. 1972. Kantaranubuthi of Saint Arunagirinathar. The Divine Life Society, Śivanandanagar.
  4. கிருபானந்தவாரி. 1981. கந்தர் அனுபூதி. வானதி பதிப்பகம், சென்னை.
  5. சுப்ரமணியன், ச.வே. 1976. அருணகிரி நாதர் இலக்கியக் கொள்கை. (ஒன்று நன்று), தமிழ்ப் பதிப்பகம், அடையாறு.

Kandar Anubhuti in Tamil | Kandar Anubhuti English translation | Other research articles about Skanda-Murukan
home