Lord Skanda-Murugan
 


சிவமயம்

குருவின் பெருமை

வேல், மயில், சேவல், விருத்தம்

நல்ல கதி அடைய, இறைவனை அடைய, இறைவனை உணர வழிகாட்டுபவர்.
அஞ்ஞானம் என்ற இருளை விளக்கி ஞானம் என்ற ஒளியை தருபவர்.
இறைவனே குருவாக வருவதுண்டு: சிவபெருமான் மாணிக்க வாசகருக்கு உபதேசித்தது.
இறைவனே இறைவஎக்கு குருவாக வருவதுண்டு: சுவாமிமலையில் தகப்பன்சாமி.
லோககுரு தட்சிணா மூர்த்தி சுவாமிகள்.
கிருஷ்ண பகவான் ஸ்ரீ அர்ஜுணருக்கு குருவாகிரார்: பகவத்கிதை முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு உபதேசம் செய்த குரு.
ஏகலைவன், சிஷ்யன்: குரு துரோனாச்சாரியார்.
சிஷ்யர் பத்ம பாதர்: குரு ஸ்ரீ ஆதிசங்கரர்.v முதலில் அவரவர் குருவுக்கே வணக்கம்.
மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம் போன்றவற்றைப் பாடிய அருணகிரிநாதரும் குருவே. (சுமார் 600 வருடங்களுக்குமுன் திருவண்ணாமலையில் அவதரித்தார்.
அடியேஎடைய குரு பிரம்ம ஸ்ரீ சுவாமி சரஹண பவானந்தா (பிரம்ம ஸ்ரீ நம்பியார் சுவாமிகள்) அவர்களுடைய பொன்னடிகளுக்கு முதலில் வணக்கம் செலுத்துகிறேன்.

வேலின் பெருமை

வேலனே வேல், வேலே வேலன்: வேற்பூசையே குகன் பூசையாகும் - வேல்அலங்காரம்
வேல் - ஞானம் - ஞானமே வேல்: கிருபானந்த வாரியார்.
அறிவே உருவானது கந்தன் திருவடி.
அறிவை அறியச் செய்யும் அறிவின் உருவானது: வேல்.
அறிவு ஆழமாக இருக்கும் - பரந்து விரிந்து விளங்கும் - கூர்மையாகத் திகழும்.
வேலும் அப்படியே, வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது.
வேலின்இடைப்பகுதி விசாலமாக விளங்குகிறது.
வேலின்நுனிப்பகுதி கூர்மையாகத் திகழ்கிறது.

அறியாமை இருள் அகற்றி அறிவொளி அருள்வது வேலாகிய திருவருட்சக்தியாகும். வேல் கொன்டு சூரனை சூரசம்ஹாரம் செய்தார் முருகன். வேல் அழிக்ககூடிய ஆயுதம்மட்டுமல்ல. அது யாவற்றையும் அளிக்கக்கூடிய திருவருட்சக்தி. அறிவை அறியச் செய்யும் அறிவாய் உள்ள திருவருளின் உருவமே பராசக்தி. பராசக்தியே வேல்வடிவமாகக் குமரன் மேவியிருப்பதாயிற்று.

வேல் வகுப்பு

துதிக்கும்மடி யவர்க்கொருவர் கெடுக்கவிடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையு மெனக்கோர்துணை யாகும். தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமிரு கடுத்திரவு பகற்றுணை யாகும். வேல் விருத்தம் பாடப்பெற்ற பெருமை. வேல் சூரபன்மனின் உடலைப் பிளந்தது. சூரபன்மனின் உடல் பிளந்தவுடன் ஒரு பாதி சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் ஆகின. சூரபன்மனின் உடல் ஒருபாதி ''தான் என்கின்ற அகங்காரம்'' மற்றொருபாதி ''எனது என்கிற மமகாரம்'' மயிலும் சேவலுமாகிய சூரபன்மன் முருகனை எதிர்த்து வந்தான். முருகனின் திருவருளால் சூரபன்மன் ஞானம் பெற்றான். மயில் முருகஎக்கு வாகனமாகியது, சேவல் முருகஎக்கு சேவல் கொடியானது.

மயிலின் பெருமை

முருகனின் வாகனம். பிரணவத்தின் தோற்றம். ''ஓம்'' மயில் தோகைவிரித்தாடும்போது உள்ள தோற்றம். உயிர்கள் அறிவை அறிய அநூகூலமாக உள்ள திருவருளின் வடிவாகும். விந்துசக்தியின் உருவே. உயரில் "யான், எனது" என்எம் திரிபு மறைந்திருப்பதால், பரம்பொருளாகிய முருகன் ஒவ்வொரு உள்ளத்திலும் அறியாதபடி மறைந்து தங்கி இருக்கிறார் (கள்ளனே இறைவன்). உயிரின் நல்வினை தீவினைக் கேற்ப உயிரை இயக்குகிறார். இந்த மறைந்திருக்கின்ற சக்தியே மயில் அல்லது திரோதன சக்தியாகும். பக்குவமடைந்தபின் இந்தத் திரை விலகும். திருவருட்சக்தி விளங்கும். ஞானப் பழம் பெற மயிலேறி உலகவலம் வந்தார். சிறுவாபுரியில் மரகத மயில். மயில் விருத்தம் பாடப் பெற்ற பெருமை.

சேவலின் பெருமை

சேவற் கொடியோன்; முருகன். பிரணவ மந்திரத்தின் நாத தத்துவத்தை விளக்குகிறது. தன்னை வழிபடும் அடியவர்களின் அக இருளை அகற்றி, ஞான சூரியனான முருகன் வருவதை முன் கூட்டியே கூவி அறிவித்து நாத ரூபமாக அமைந்துள்ளது. சேவல் விருத்தம் பாடப் பெற்ற பெருமை; பூதப் பிசாசுகளை, சேஷ்டைகளை, பில்லி சூன்யங்களை ஓட்டி விலக்க வல்லது இச்சேவல் விருத்தங்கள்.

வேண்டுகோள்

  1. அருணகிரிநாதர் காலத்தில் இந்து சமயத்திற்கு, தெய்வ வழிபாட்டுக்கு சோதனைகள் வந்த போது, அருணகிரிநாதரால் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இன்று சோதனைகள் வருகின்றபோது, நாம் எல்லோரும் ஒன்றுகூடி மறுமலர்ச்சி பெற முனைந்து செயல்பட வேண்டுவதவசியம். இந்து மதம் செழித்தோங்க வேண்டும்.
  2. நமது முன்னோர்களால் பாடப்பெற்ற பல பாடல்கள் (புத்தக வடிவிலுள்ளவை) கிடைக்க வில்லை. கிடைத்த பாடல்களும் (உரையுடன் கூடியவை) பாதுகாக்கப்பெற வில்லை. மறு பிரசுரிப்புகள் செய்யப் படாமல் மறைந்து கொண்டு வருகிறது.
  3. தமிழ் நாடு வலையபட்டி திரு.ரா.கிருஷ்ணன் அவர்கள் ஒரு சில புத்தகங்கள் கொடுத்துதவியமைக்கு நன்றி. இந்து சமயமும், சைவமும் நலிந்து போகாதிருக்க இந்து சமய பாதுகாவலர்கள், சமயப் பெரியார்கள், அறிஞர்கள், அமைப்புக்கள் முன்வந்து புதிய பதிப்புகளை பிரசுரிக்க பொருளாதார வசதிகளைச் செய்து

கொடுப்பது சாலச் சிறந்ததெனக் கருதுகிறேன்.

வேல் விருத்த பாடல் (2வது பாடல்) - மொத்தம் 10 பாடல்கள்

வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உ ருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்

தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கௌமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கௌரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே

(முருகன் திருக்கை வேலே
அறுமுகவன் திருக்கை வேலே)

உரை

வெம்மையான ஆலாலமுண்ட நீலகண்டருடைய திருக்கரத்தின் சூலாயுதமும், திருமாலின் வெற்றியும் ஒளியும் படைத்த சக்ராயுதமும்தேவேந்திரஎடைய வஜ்ராயுதமும், சூரனையும் அவஎடைய குலத்தையும் வேருடன் களையவல்ல அல்ல என்ற எண்ணி போர்வீர முர்த்தியே நீர் வென்று அருள் புரியும் என்று தேவர்களும் பிரம்மதேவரும் திருமுன் குறையிரந்து நிற்க சிரவுஞ்ச மலையையும், சூரபன்மஎடைய உடலையும் ஒருநொடிப்பொழுதில் உருவி அழித்து, ஒப்பற்ற வீர வலிமை கொன்ட நீண்ட வேல் ஆகும்எழும்பு மாலை அணிந்தவளும், தூர்காதேவியும், வாராகியும், இந்திராணியும் கௌமாரியும் தாமரை மலர்ப் பீடத்தில் எழுந்தருளியுள்ள கண்ணியும், நாரணியும், குமாரியும், திருபுரையும், பைரவியும், மலம்இல்லாதவளும், கௌரியும், காமாஷியும், சிவ சம்பந்தமுடைய அழகியும், பச்சை நிறம் படைத்தவளும், பவானியும், கார்த்திகையும், வெற்றி மடந்தையும் முக்கண்ணியும் ஆகிய பார்வதிதேவி பெற்ற செல்லப் புதல்வரும், ஆறுமுகக் கடவுளும், முருகவேளும், அசுரர்களின் குலத்துக்கு முடிவைச் செய்பவருமாகிய கந்த கடவுளின் சிவந்த திருக்கை வேலே

கருத்துரை

உமாதேவியின் புதல்வராகிய முருகப்பெருமாஎடைய வேலாயுதமே சூரசம்ஹாரஞ்செய்த தனிவீரவேல் என்றறிக.

சேவல் விருத்த பாடல் (2வது பாடல்)-மொத்தம் 12 பாடல்கள்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்தஅதி மதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணிதழு வப்பெ றுவரால் மகரால யம்பெறுவர் உ வணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தை யுடன்வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்

அமுதா சனம்பெ றுவர்மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம்பெ றுவரே

(அழியா வரம்பெ றுவரே அழியா வரம்பெ றுவரே)

உரை

உலகில் நாள் தோறும் தோன்றுகிற அடியார்கள் துன்பம் நீக்கி மேற்கதியைக் காண்பித்து, பாம்பு போல திரிந்து அச்சம் தரும் தீவினை நல்வினை முறைப்பட்டு அஞ்ஞான இருள் வருமை நீங்க,

வேதனை தரும் பேய்பிசாசுகள் விūம் உள்ள பாம்புகள் பலத்துடன் கொடுமை செய்ய வந்தால் அவைகளை,

கண்ணைப் பறித்து, உடலைப் பிளந்து (வென்று) தனது சிறகுகளைக் கொட்டி நின்று ஆடல் புரியும் அது (சேவல்)

மலைகள் பொடிய கடல்கள் வற்ற அசுரர்கள் இறக்க, வேலாயுதத்தை ஏவிய முருகன் உயர்ந்து வடமலை மேரு அதிர்ச்சி அடையும்படி, அவற்றொடு எதிர்க்க வல்ல கொங்கைகளை உடைய குறமகள் வள்ளியும்

வில் வஜ்ஜிராயுதம் உடைய இந்திரனின் மகள் தேவானையும் அணைக்கின்ற புயங்கள் கொண்ட சரவணத்தில் வந்த சிறுவன், பிரம்மன் அஞ்சும்படி

தலைமேல் மிக்க கோபத்துடன் அடித்துக் குட்டின ஆறுமுகனின் அழகிய கொடியோன் சேவல் தான் அது

கருத்துரை

எல்லாப் பாடல்களும் பூத பிசாசுகளை சேக்ஷ்டைகளை ஓட்டி வைக்க உதவும் என்பது தெளிவு.

மயில் விருத்த பாடல் (12வது பாடல்)-மொத்தம் 12 பாடல்கள்

எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
திலங்கிய திருத்த ணிகைவாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
நம்பிரா னான மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்தஅதி மதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்

படிப்பவர்கள் ஆதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணிதழு வப்பெ றுவரால் மகரால யம்பெறுவர் உ வணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தை யுடன்வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
அமுதா சனம்பெ றுவர்மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம்பெ றுவரே

(அழியா வரம்பெ றுவரே
அழியா வரம்பெ றுவரே)

உரை

எல்லா நாள்களிலும் ஒப்பற்ற சுனையில், இந்திரநீலம் என்ற நீலோர் பல மலர் விளங்குகின்ற திருத்தணி மலையில் வாழ்கின்ற, எங்கள் தலைவரும், இமையவர்களின் தலைவரு மாகிய முருகப்பெருமான் ஏறிவருகின்ற ஒப்பற்ற நம் தலைவனாகிய மயிலை, பலநாட்களாக திருவடியைப் போற்றிப் புகழ்கின்ற அருணகிரிநாதன் சொன்ன மிக இனிமையான அழகிய, பாடல்களாக விளங்குகின்ற, குற்றமில்லாத விருத்தங்கள் ஓருபத்தையும் பாராயணம் புரிபவர்கள், ஆதியான வேதநூல் தன்னிடத்தே நிலை பெற்ற, பிரமஎடைய நான்கு முகங்களையும் பெறுவர், அன்ன வாகனத்தின் மீது ஏறப்பெறுவர் கலைமகளைத் தழுவப் பெறுவர், ஜராவதம் என்ற யானையும் (இந்திரப்பதம்) பெறுவர் மகர மீன்களையுடைய கடலை இடமாகப்பெறுவர் (வருணபதம் பெறுவர்), கருட வாகனத்தில் ஏறுகின்ற வரம் பெறுவர்

அமுதத்தை உணவாகப் பெறுவர் பின்எம், ஆயிரம் பிறை தொழுகின்ற சதாபிசேகம் பெறுவர் செல்வங்கள் பெறுவர் புகழ் பெறுவர் அழியாத முக்தி நலமும் பெறுவார்கள்

கருத்துரை

மஹான் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பாடலை முருகனே பாடியது. மயில் விருத்தம் பாடல்களைப் பாராயணம் செய்பவர்கள் எல்லா நன்மைகளும், வரங்களும் பெறுவர்.

Dr. K.M.S. Ramasamy MBBS
2230-B Lorong
Kampung Pisang
05100 Alor Setar
Kedah
Malaysia