Lord Skanda-Murugan
 

hindu_thaipusam_1a.jpg

Thaipusam a festival to beseech the Grace of Lord Murugan

 முருகனின் அருளை வேண்டிக் கொண்டு செய்யப்படும்
விழாவே தை பூசம் ஆகும்

 

Thai Pusam
தை பூசம்

தமிழாக்கம் : சாந்திப்பிரியா / Santhipriya

Thai Pusam is a festival to celebrate two important events in Hindu mythology. The first is the anniversary when Lord Murugan received the Vel from His Mother, Goddess Parvati. The second event is the day that God Shiva danced the ananda tandava and revealed His form of Nataraja to the devas, sages and priests gathered at the hallowed Shiva temple of Chidambaram in Tamilnadu. Thus Thaipusam is celebrated in both Sivan and Murugan temples, though Thaipusam is more popular as a Murugan festival. Thaipusam is a one day festival which usually falls on the last week of January or beginning of February.
 

 தை பூசம் எனும் விழாவை இந்துக்கள் இரண்டு முக்கியமான காரணங்களுக்காக கொண்டாடுகிறார்கள். முதலாவதாக  முருகப் பெருமான் தனது தாயிடம் இருந்து சக்தி வேலினைப் பெற்ற தினம் தை பூசம் ஆகும். இரண்டாவது காரணம் அன்றுதான் குகைப் போன்ற சிதம்பரம் ஆலயத்தில் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் பண்டிதர்கள் குமுழி இருந்த ஆலயத்தில் தனது ஆனந்த தாண்டவ நடனத்தின் மூலம் சிவபெருமான் நடராஜர் என்ற தனது தத்துவத்தை வெளிப்படுத்தினார். தைப் பூசம் என்பது முக்கியமாக முருகப் பெருமானை சார்ந்த  விழா என்றாலும், அந்த விழாவினை சிவன் மற்றும் முருகன் ஆலயங்களில் பெருமளவில் கொண்டாடுகிறார்கள். சாதாரணமாக தை பூசம் தினம் என்பது ஜனவரி கடைசி அல்லது பிப்ருவரி முதல் வாரத் துவக்கத்தில் வருகிறது.

hindu_thaipusam_8.jpg

Lord Nataraja's Dance of Bliss being witnessed by inhabitants of the heavens and earth in Chidambaram.

தேவலோக மற்றும் பூமியில் இருந்தவர்கள் ஆனந்தமாக கண்டு களித்து மகிழ்ந்த நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவம்

hindu_thaipusam_7.jpg

Lord Murugan and His Vel. Thaipusam is especially dedicated to the issuance of the Vel to Lord Murugan.

முருகப் பெருமான் வேல் ஒன்றைப் பெற்ற தினமாக தைபூச விழா கடைபிடிக்கப்படுகிறது. கையில் வேலுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

 

The Vel that Lord Murugan received from his Mother is a symbol of purification. According to the myth, the Vel was given to Lord Murugan to vanquish three asuras that were terrorizing Earth and the Heavens at the time. The asuras were Surapadman, Singamugan and Tarakasura. The three of them represent the forces of fear, hatred, greed and arrogance. The Vel, a symbol of light and wisdom was used by Lord Murugan to rid the world of the three asuras and bring peace and balance back to the Heavens and Earth. Thus the Vel is the protecting and purifying force of Lord Murugan and Thaipusam is a celebration of these forces. It is a time to beseech Lord Murugan’s blessing to lessen the burden of bad karmas from our wrong doings and to make our lives more positive. Thus the Thaipusam is a festival that is marked by acts of penance such as carrying the kavadi.

தாயாரிடம் இருந்து ஒரு வேலை முருகப் பெருமான் பெற்ற நிகழ்வு தூய்மையைக் குறிப்பதாக உள்ளது.  வரலாற்றின்படி தேவலோகம்  மற்றும் பூமியில் இருந்தவர்களை துன்புறுத்தி வந்திருந்த -சூரபத்மன், சிம்மமுகன் மற்றும் தாரகாசுரன்- என்ற மூன்று அசுரர்களை அழிப்பதற்காகவே அவருக்கு அந்த வேல் எனும் ஆயுதம் தரப்பட்டது.  அந்த மூன்று அசுரர்களும் பயம், வெறுப்பு, பொறாமை மற்றும் தலைகனத்தை குறிப்பவை.  ஒளி மற்றும் ஞானம் என்பதைக் குறிக்கும் அந்த வேலினை கையில் ஏந்திக் கொண்ட முருகன் உலகில் அஞ்ஞானத்தில் உழன்று கொண்டுள்ளவர்களது அறியாமையை விலக்கி அவர்களுக்கு அமைதியை தந்தார். இப்படியாக மனத் தூய்மையைத் தரும் முருகனின் வேலின் சிறப்பைக் கூறும் தினமாகவே தைபூசம் கொண்டாடப்படுகிறது. ஆகவே நாம் நமது கர்மாக்களின் தீய விளைவுகளை அழித்து  அமைதியான வாழ்வை பெற்றிட தைபூச தினத்தை முருகனை வழிபடும் தினமாக கருதி விரதம் இருந்து கொண்டாடுவோம். பக்தர்கள் சிலர் தைபூச தினத்தன்று காவடி எடுத்தும் அந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

Carrying kavadi is a practice of penance or prayaschittam. The tradition of carrying kavadi was started by a great devotee of Lord Muruga, Idumban, who worshipped Lord Murugan at the Palani Hills temple in Tamilnadu. He created the first kavadi. It was a simple structure that consisted of a straight horizontal branch of a tree with two small pots of milk tied at either end and decorated by a wooden arch, flowers and peacock’s tail feathers. Idumban also pierced a small vel shaped skewer across his cheeks. Idumban carried the kavadi from the foothills of Palani to Lord Murugan’s Palani Andavan temple at the summit of the hills and offered the milk for Lord Palani’s (the form of Lord Murugan as a renunciate monk) abishegam.
 

 காவடி எடுப்பது என்பது அவரவர் செய்த பாவங்களுக்கு பரிகாரம் அல்லது பிராயசித்தம் தேடுவது போன்றதாகும்.  தமிழ்நாட்டில் பழனி மலையில் காவடி எடுக்கும் ஐதீகத்தை துவக்கியது இடும்பன் எனும் முருகப் பெருமானின் பக்தனே.  கட்டை ஒன்றின் ஒரு முனையில் மரம் ஒன்றைக் குறுக்காக கட்டியும், பால் நிரப்பிய இரண்டு குடுவைகளை  மலர்கள், மயில் இறகு மற்றும் பிற பொருட்களினால் அலங்கரித்து  அதை இன்னொரு முனையில் அதைக் கட்டி வைத்து, அந்தக் கட்டையை   தோளிலே சுமந்து கொண்டும், தனது வாயில் வேலினைப் போன்ற கட்டையை செருகி வைத்துக் கொண்டும் பழனி அடிவாரத்தில் இருந்து கிளம்பி நடந்தவாரே மலை மீதேறிச் சென்று பழனி மலை உச்சியில் அமர்ந்திருந்த பழனி ஆண்டவனை தரிசித்து அவரை அந்த பாலைக் கொண்டு அபிஷேகித்தாராம்.

hindu_thaipusam_4.jpg

A simple traditional kavadi carried by a boy. Children may also participate in carrying kavadi, however, they are only allowed to pierce their body when they are older, usually when they become teenagers.

காவடியை சுமந்து செல்லும் சிறுவன். சிறுவர்கள் காவடி சுமந்து செல்ல அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் வயது வரும்வரை அவர்கள் உடலில் வேலை சொருகிக் கொண்டு செல்வது அனுமதிக்கப்படுவது இல்லை.

hindu_thaipusam_6.jpg

Carrying kumbhas of milk for Lord Murugan at Batu Caves, Malaysia during Thaipusam.

தைபூச தினத்தன்று மலேசியாவின் பட்டு குகையில் உள்ள முருகனை தரிசிக்கும் பக்தர்கள் பால் குடங்களை சுமந்து கொண்டு செல்வார்கள்

hindu_thaipusam_5.jpg

Anga pradakshina, rolling around the temple grounds is another form of penance performed during Thaipusam. Nallur Kandswami Temple, Jaffna, Sri Lanka.

ஜாப்னாவில்  நல்லூர் கந்தசாமி கோவிலில் தைபூச தினத்தன்று தரையில் உருண்டபடி அதாவது அங்கப்பிரதர்ஷனம் செய்வதின் மூலம் பக்தர்கள் விரதத்தை கடைப் பிடிப்பார்கள்

hindu_thaipusam_2.jpg

Notice the small pot of milk tied to the right of the kavadi bearer. Piercings through the cheeks and tongue with Vel shaped shaped skewers is common among kavadi bearers, though it is optional and not a requirement for carrying kavadi.

படத்தில் வலது பக்கத்தில் பால் நிரப்பிய சிறிய குடுவை கட்டப்பட்டு இருக்க, தனது நாக்கில் வேல் போன்ற சிறு கம்பியை சொருகிக் கொண்டு பக்தர்கள் காவடியை ஏந்திச் செல்லும் காட்சி மிகவும் சாதாரணமானது.  காவடி எடுப்பவர்களுக்கு இப்படி செய்வது அவசியம் அல்ல, அது அவரவர்  விருப்பங்களைப் பொறுத்தது.

hindu_thaipusam_3.jpg

An extreme kavadi, this is called the paravai kavadi or the bird kavadi, Nallur Kandswami Temple, Jaffna, Sri Lanka.

ஜாப்னாவில் நல்லூர் கந்தசாமி கோவிலில் பக்தர்கள் ஏந்திச் செல்லும் கடினமான பறவைக் காவடி

hindu_thaipusam_1.jpg

Fire pot kavadi, Nallur Kandswami Temple, Jaffna, Sri Lanka.

ஜாப்னாவில் நல்லூர் கந்தசாமி கோவிலில் தீ மூட்டிய  சட்டியை தலை மீது சுமந்து செல்லும் காவடி

Since those ancient times, the forms of kavadi have become more elaborate. During Thaipusam these days devotees can be seen carrying kavadis as simple as a pot of milk balanced on their heads to elaborate structures rising up to two meters above the head with multiple body piercings. Devotees carrying kavadi usually wear yellow garments. Yellow colour symbolizes purification.

 பண்டைக் காலம் தொட்டே  எப்படிப்பட்ட காவடிளை சுமப்பது என்பது விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. தைபூச தினத்தன்று உடம்பு முழுவதும் பலவிதமான வேல் எனும் அலகுகளைக் குத்திக் கொண்டு அவரவர் தலைக்கு மேல் இரண்டு மீட்டர் உயரத்துக்கும் அதிகமான கட்டமைப்புக்களில் பால் குடத்தை வைத்துக் கொண்டு, அது கீழே விழாமல் இருக்கும் வகையில் காவடியை தலை மீது ஏந்திச் செல்வார்கள். காவடியை சுமந்து செல்லும் பக்தர்கள் பொதுவாக மஞ்சள் நிற ஆடைகளையே அணிந்திருப்பார்கள். மஞ்சள் நிறம் தூய்மையைக் குறிக்குமாம்.

Devotees participating in Thaipusam, especially if they are carrying kavadi, prepare for the festival anywhere between one month to nine days before the festival. These preparations can include: 

• Performing daily prayers at home to Lord Murugan, 

• Chanting devotional hymns such as the Skanda Puranam or doing japa on Lord Murugan's  mantra Aum Saravanabhavaya Namaha (the mantra is chanted 108 times daily after prayers on a rosary of rudraksha beads), 

• Fast or abstain from non vegetarian food, 

• Not cut their hair nor shave and abstain from carnal pleasures.

• Sleep on the floor (without a mattress).

 

Men who carry kavadi usually shave their heads bald on Thaipusam day. The type and severity of the kavadi carried and the preparations before Thaipusam the devotee does is left the devotee. Apart from pure devotional motivation, the preparations done and the type of kavadi carried may depend on the severity of guilt or troubles the devotee may be feeling or going through. If unsure of what type of preparations to perform or kavadi to carry a devotee can seek the counsel of a qualified temple priest or a Hindu guru.

தைபூச விழாவில் பங்கேற்று காவடி சுமக்கும் பக்தர்கள் ஒன்பது நாள் முதல் ஒரு மாதம் விரதம் பூண்டு சில நியமங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். அந்த நியமங்கள்:

  • தினமும் முருகனுக்கு பூஜை செய்வது
  • பக்திப் பாடல்களை ஓதியபடி இருப்பது.  ருத்திராக்ஷ மணி மாலையை உருட்டியபடி  108 முறை ஓம் சரவணபவாய நமஹா எனக் கூறியபடி ஜெபம் செய்வது
  • மாமிச உணவை உட்கொள்ளாமல் தவிர்ப்பது, பட்டினி விரதம் இருப்பது
  • இம்மை வாழ்விற்குரிய சுகபோகமான தலை முடியை வெட்டுவது, முக சவரம் செய்து கொள்வது போன்றவற்றை தவிர்ப்பது
  • தரையில் விரிப்பு எதுவும் போட்டுக் கொள்ளாமல் படுப்பது

காவடியை சுமப்பவர்கள் தைபூச தினத்தன்று தமது தலை முடியை மழுவிக்கு கொண்டு மொட்டை அடித்துக் கொள்வார்கள். எப்படிப்பட்ட காவடியை சுமந்து செல்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ஆகும். பக்தியினால் மேற்கொள்ளும் காவடி அவரவர் செய்யும் பாவ பிராயசித்தங்களின் அடிப்படையில் அமைந்து இருக்கும். எப்படிப்பட்ட காவடியை தாம் சுமந்து செல்ல வேண்டும் என்பது தெரியாமல் குழப்பம் ஏற்பட்டால் குருமார்களை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும்.

Questions and Answers on Thaipusam

Question: Must I carry kavadi to celebrate Thaipusam?

Answer: No it is not necessary to carry kavadi to celebrate Thaipusam. To celebrate Thaipusam all one needs to do is to attend special prayers performed in temples to Lord Murugan on Thaipusam day and offer thanks to Him. To observe Thaipusam you can also perform special prayers to Lord Murugan at home, meditate on Lord Murugan and be a vegetarian on this day, if you are not one already.

Question: Is it required to pierce the body to carry kavadi? It seems barbaric. Does Lord Murugan ask  this of us?

Answer: No, it is not required to pierce the body to carry kavadi nor does Lord Murugan require us to do so. Remember that the practice of taking kavadi is a penance. It is not meant as an external show of devotion. Rather, taking kavadi is a very personal rite of purification. Kavadi is performed to lessen the burden of bad karmas we may have created. In certain situations some devotees may feel a deep sense of guilt for wrong doings they have done. They may feel the need to take on hardships such as piercing their body to assuage the feeling of guilt. However it is best to seek the counsel of knowledgeable spiritual people such as gurus or qualified temple priests before taking the more extreme kavadis. Kavadi is a very intimate act in the relationship between the devotee and Lord Murugan. It must be approached with devotion and in all humility. It is not a means of showing off ones abilities, nor should people compete with each other in creating heavier or taller kavadis with more body piercings. There is absolutely no merit in taking kavadi for these reasons.

தைபூசம் குறித்த வினாக்களும் விடையும் 

கேள்வி: தைபூச விழாவைக் கொண்டாட காவடியை தூக்கிக் கொண்டு செல்வது அவசியமா?

பதில் : தை பூச தினத்தன்று காவடி தூக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. அன்றைய தினம் முருகப் பெருமானின் ஆலயங்களில் நடைபெறும் தைபூச வைபவங்களில் கலந்து கொண்டு அவரை வழிபட வேண்டும். அது போல தைபூச தினத்தன்று உங்கள் வீட்டிலும் முருகப் பெருமானுக்கு பூஜை செய்து, தியானம் செய்து அவரை வழிபடலாம். நீங்கள் மாமிசம் உண்பவர் என்றால் அன்றைய தினம் கண்டிப்பாக சைவ உணவையே உட்கொள்ள வேண்டும்.

கேள்வி : காவடி தூக்கிக் கொண்டு செல்கையில் உடம்பில் அலகு குத்திக் கொண்டு செல்வது அவசியமா? அராஜகமாகத் தெரியும் இந்த பழக்கத்தை முருகப் பெருமான் விரும்புகின்றாரா?

பதில் : உடலில் அலகு குத்திக் கொண்டுதான் காவடி எடுக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. முருகப் பெருமானும் அப்படி எதுவும் கூறவில்லை.   காவடி தூக்குவது என்பது பிராயசித்தம் செய்வது போன்றது ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்வதின் மூலமே தமது பக்தியை வெளிப்படுத்த முடியும் என்பது தவறு.  காவடி சுமப்பது தனி நபர் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ள செய்யும் சடங்காகும். நாம் செய்த தீய கர்மாக்களை விலக்கிக் கொள்ள செய்யும் ஒரு சடங்கு ஆகும். சில நேரங்களில் பெரும் தவறை செய்து விட்ட குற்ற உணர்வை சில பக்தர்கள் இதயத்துக்குள்ளேயே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஆகவே அந்த குற்ற உணர்வை விலக்குவதற்காக தம்முடைய உடம்புகளில் அலகுகளைக் குத்திக் கொண்டு அதற்கு பரிகாரம் தேடுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட காரியத்தை செய்யும் முன்னர் அனுபவம் வாய்ந்த பண்டிதர்களையும் ஆலயத்தில் உள்ள குருமார்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது அவசியம் ஆகும். காவடி என்பது முருகப் பெருமானுடனான நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள முயலும் பக்தர்களின் ஒரு செயல்பாட்டு முறை ஆகும். அதை மிகவும் எளிமையாகவும், தூய மனதுடனும் செய்ய வேண்டியது அவசியம்.   பிறருடன் போட்டிப் போட்டுக் கொண்டு அவர்களை விட அதிக பளுவை தாம் சுமப்பதைப் போல காட்டிக் கொள்ள நினைத்து செய்வதையும் தம்முடைய மனதிடத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சியைக் கருதுவதும் தவறு. அப்படிப்பட்ட எண்ணங்களுடன் காவடியை சுமப்பது அர்த்தமற்ற வேலை ஆகும்.

More about Thai Poosam festival:

friend on Facebook | Forward to a friend