Lord Skanda-Murugan
 

இந்திய ஸ்கந்தனும், இரானிய ஸ்ரோசாவும்

சுகுமார் சென், M.A., Ph.D.

Original article in English: "Iranian Sraosa and Indian Skanda"

Skanda Śaktidhara

ஏவஸ்தியக் கடவுளான 'ஸ்ரோசாவிற்கும்' 'ஸ்கந்த குமார கார்த்திகேய குஹா' என்பவருக்கும் இடையிலான சில ஒற்றுமைகளை முன்னர் நாம் கவனித்து உள்ளதாகத் தெரியவில்லை. சமிஸ்கிருத மொழியில் ஸ்ரோசா என்றால் 'ஸ்ரவுசா' என்று அர்த்தம். (ஸ்ரா என்பது இறந்த காலச் சொல் ஆகும். அதை கீழ்ப்படிந்து இருத்தல் மற்றும் ஒருவரை சார்ந்து இருத்தல் என்றும் கூறலாம்.). இந்தப் பெயர் 8 முதல் 14 ஆம் ஆண்டு காலத்தில் சூரிய பகவானிடம் இருந்த இரண்டு உதவியாளர்களின் பெயராக இருந்தவை என ஆராய்ச்சிக் குறிப்புக்கள் மூலம் அறிய முடிகின்றது. 12 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் எழுதப்பட்டு உள்ள ஒரு மேற்கோளில் இப்படியாக எழுதப்பட்டு உள்ளது.

யமோபி தக்க்ஷைன் பர்ஸ்வே க்யோடா மாதரா சம்ஜ்யயாயா பூர்வாத்வரே ஹரா குஹாவ் ராஜஸ் ரசாவ் க்ரமினா தௌவ்

'ராஜஸ் ரசாவ்' என்றால் ஒரு மன்னனின் கீழ் அடக்கத்துடன் பணி புரியும் தூதன் என்று 'ஹரா' மற்றும் 'குஹா'வைப் பற்றிக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 'ஏவஸ்த்தியா' என்ற உண்மையானக் கடவுளின் பெயர் மறைந்து அது 'ஸ்ரோசா' என மாறி விட்டது. அவர் ஹஹூரா மாஸ்டா (Ahura Mazda) என்பவரிடம் மிகுந்த அடக்கத்துடனும், கவனத்துடனும் பணி புரிந்தவர் என்றப் பெயரைப் பெற்று உள்ளார். இந்த இரண்டு கடவுட்களுமே (ஸ்ரோசா மற்றும் ஸ்கந்தா) நல்ல தோற்றமும் இளமையும் கொண்டவர்கள். விரைவாகவும், புத்துணர்ச்சியுடனும் வெற்றிகளைக் கொண்டு வருபவர்கள்.

ஸ்ரோசா அசுரர்களை அழித்தவர். மாறாக ஸ்கந்தனோ படைவீரர்களின் தலைவராக இருந்தவர். காமவெறி பிடித்தவனும் , வெறுக்கத்தக்கவனாகவும் இருந்த ஏய்ஸமா என்பவனை அழித்தவர் அந்த இரானியக் கடவுள். அதேசமயம் தாரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தது அவருக்கு இணையான ஸ்கந்தனே. (ஆனால் பிரும்ம புராணங்களில் அந்த அசுரனை வதம் செய்தது ஸ்கந்தனின் தந்தையான சிவபெருமானே என்றும், ஆனால் அதே சமயம் புத்த மதப் புராணங்களின்படி அவனை அழித்தது புத்தர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது) .ஏவஸ்த்தியாவில் ஸ்ரோசாவின் வாகனம் மயில் என்று கூறப்பட, இந்து புராணங்களிலும் ஸ்கந்தனின் வாகனம் மயில் என்றே கூறப்பட்டு உள்ளது.

நான்கு குதிரைகள் இழுத்துச் செல்லும் ரதத்தில்தான் ஸ்ரோசா பிறந்தாராம். ஆனால் பிரும்ம புராணங்களில் அப்படி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அதே சமயத்தில் ரிக் வேதத்தில் அதைப் பற்றிய செய்தி மறைமுகமாகக் கூறப்பட்டு உள்ளது. யமனின் பாடல்களில் (துதிப்பாடல் 135) யமனின் தேர் போன்ற ஒற்றைக் கம்பில் நிற்கும் சக்கரம் இல்லாத தேரில் உள்ளவர் ஆனால் நான்கு பக்கமும் பார்த்தபடி உள்ளவர் எனக் குமரனைப் பற்றி கூறப்பட்டு உள்ளது. ஆகவே அந்தக் வேத காலக் குமரன் இரானிய ஸ்ரோசாவைப் போன்றே உள்ளவர் என்கிறார்கள்.

Article from Indo-Iranica, Vol IV No. 1, July 1950, p. 27.

Translated into Tamil by சாந்திப்பிரியா


See also these related research articles about the cult of Skanda-Kumara in Sanskrit sources:

Index of research articles on Skanda-Murukan