Lord Skanda-Murugan
 

பண்டைக் கால நாணயங்களில் கார்த்திகேயர்

Yaudheya coin
300-340 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப்பில் உபயோகிக்கப்பட்ட யவுதேய நாணயங்கள். வலது கையில் மயிலினைப் பிடித்துக் கொண்டும், வேலை ஏந்திக் கொண்டும் நேராக நின்றபடி காட்சி தரும் கார்த்திகேயர். பிராம்மி எழுத்தில் உள்ளவை: -யசுதேய கணஸ்ய ஜெயா( யசுதேய மக்களுக்கு வெற்றி) பின்புறம்- இடுப்பில் கை வைத்தவாறு உடல் தெரியும் அளவிற்கு மெல்லிய உடை உடுத்தி நின்று கொண்டு இருக்கும் பெண் தெய்வம்
3 Gupta Period coins
மயில் படங்கள் பொறிக்கப்பட்டு உள்ள குப்தா மன்னர்கள் கால நாணயம்
Original article in English: "Kārttikeya in Early Indian Coinage"

ஈஸ். சுரேஷ்

தமிழில் மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா

நாணயங்களின் உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் வரலாற்றை விளக்குதல் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அபூர்வமாகவே கையாண்டு உள்ளார்கள். 1 கார்திகேய மரபைப் பற்றி நாணயங்களின் உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் விளக்குதல் என்பதைக் ஆராய்ச்சியாளர்கள் முற்றிலுமாக தவிர்த்து உள்ளார்கள். 2 தற்போதைய இந்த கட்டுரை இந்திய கண்டத்தில், அந்த தெய்வத்தின் வடிவமைப்பு, தன்மை மற்றும் அவருடைய சின்னங்கள் போன்றவற்றை கொண்டு புழக்கத்தில் இருந்திருந்த நாணயங்களின் வரலாற்றை ஆராய்கிறது. அந்த நாணயங்களின் காலமுறை வரிசை, ஓவியத் தன்மை, வடிவமைப்புக்கள் மற்றும் அவற்றின் சமூக, மத முக்கியத்துவங்களையும் விளக்க முற்பட்டுள்ளேன்.

நாணயங்கள்: வடிவமைப்புகளும் வரலாறும்

கனிஷ்காவை தொடர்ந்து பதவிக்கு வந்த முதலாம் நூற்றாண்டை சேர்ந்த குஷான் வம்ச மன்னர் ஹுவிஷ்கா என்பவறின் காலத்தில்தான் முதன் முதலாக கார்திகேயரின் உருவ நாணயங்கள் வெளியாகி உள்ளன. I.3 இந்துக் கடவுட்கலான சிவன் அல்லது ஒய்ஸா போன்றவர்களின் உருவங்கள் குஷன் காலத்தில் தோன்றினாலும், அதற்கு முன்னரே கனிஷ்காவின் முன்னோர்களான விமா காட்பிசெச்ஸ், ஹுவிஷ்கா என்பவர் பல கடவுள், மற்றும் பெண் தெய்வங்களின் உருவங்களைக் கொண்ட பல நாணயங்களை வெளியிட்டு உள்ளார். குஷான் மன்னர்களில் ஹுவிஷ்கா மட்டுமே சிவன் மற்றும் உமா அல்லது ஒம்மா (பார்வதி) என்ற கடவுட்கள் இருந்த நாணயங்களை வெளியிட்டு உள்ளார்.

ஹுவிஷ்கா காலத்து கார்த்திகேயர் நாணயங்கள் அதன் வடிவமைப்பு, தோற்றம் மற்றும் அதில் உள்ள உருவம் என அனைத்திலும் அவை ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு இருந்தன. அதில் இருந்த உருவங்களில் மாசேனா அதாவது மஹாசேனா என்பவர் தனியாகவும், ஸ்கந்தகுமாரா-விசாகோ எனும் வார்த்தையுடன் ஸ்கந்தன் மற்றும் விஷாகாவும் இருவருமாகவோ, இல்லை ஸ்கந்தகுமாரா- மசேனோ-விசாகோ எனும் பெயருடன் ஸ்கந்தகுமாரன்- மஹாசேனா- மற்றும் விஷாகா எனும் மூவராகவும் உள்ள உருவத்துடன் காணப்படுகிறது. அநேகமாக அனைத்து நாணயங்களிலும் உள்ள தெய்வங்கள் கலைவண்ணம் மிக்க ஒரு பீடத்தில் நிற்பது போலவே காணப்படுகின்றன. விசாகாவும், ஸ்கந்த குமாரனும் உடல் தெரியும் வகையிலான மெல்லிய ஆனால் தளர்ந்து காணப்படும் ஆடைகளை அணிந்து கொண்டவராகவும், தலைக் கிரீடம், ஆயுதம், நெக்லேஸ், கையைச் சுற்றி அணியும் பட்டை, மணிக்கட்டுக் காப்பு, போன்றவைகளுடன் காணப்படுகிறார்கள். அதில் உள்ள தெய்வம் தனது கையை இடுப்பில் வைத்து கொண்டும், இடது கையில் திரிசூலம் போன்ற ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டும் நிற்பது போல உள்ளது. சில நாணயங்களில் உள்ள உருவங்களில் அவர் இடுப்பில் வாள் அல்லது கெட்டியான குறுந்தடியும் கட்டி வைக்கப்பட்டு உள்ளது போல காணப்படுகிறார். ஸ்கந்தகுமாரன்- மஹாசேனா- மற்றும் விஷாகா என்ற மூவருமே மூன்று பெயர்களில் உள்ள ஒரே கடவுள்தான் என்றாலும் கூட, குஷான் காலத்தில் அவை மூன்றுமே வெவ்வேறு கடவுட்களாக கருதப்பட்டு இருந்துள்ளன. 4 ஆனால் அந்த வடிவங்களில் சில ஒன்றோடு ஒன்று ஒத்து உள்ளன. ஹுவிஷ்கா காலத்தை சேர்ந்த நாணயங்களில் இருபுறங்களிலும் நின்ற நிலையில் உள்ள அந்த மூன்று கடவுட்களின் அமைப்பும் அதே போன்ற ரோமன் நாணய அமைப்பில் உள்ளன என்று கருதப்படுகிறது. 5 தொடர்ந்து கொண்டு இருந்த வாணிகத் தொடர்ப்பினால் நிறைய ரோமானிய நாணயங்கள் இந்தியாவுக்கு குஷான் காலத்தில் வந்துள்ளன 6.

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டி உள்ளது. இந்தியக் கடவுளான கார்த்திகேயர் யுத்தம், ஆயுதங்கள் மற்றும் வேட்டைத் தொழில் போன்றவற்றுடன் சம்மந்தப்பட்டு உள்ளது போலவே, இரானியக் கடவுளான ஓர்லக்னோ என்ற யுத்தக் கடவுளும் அவரைப் போலவே கருதப்படுகிறார் 7. இருவருமே ஒரு வேல்கம்பை கையில் வைத்துள்ளதைப் போலவே சித்தரிக்கப்படுகிறார்கள். கனிஷ்கா காலத்து நாணயங்களின் பின்புறத்தில் ஓர்லக்னோவின் உருவம் காணப்பட்டாலும், ஹுவிஷ்கா காலத்து நாணயங்களில் அவர் உருவம் ஒரு நாணயத்தில் கூட காணப்படவில்லை. ஆளுனர்கள் மற்றும் ஆளப்பட்டவர்கள் என்ற இரண்டு வர்க்கமுமே கார்த்திகேய வழிபாட்டு மரபை பெருமளவில் வைத்துக் கொண்டு இருந்ததினால், அவரைத் தவிர தவிர வேறு எந்த யுத்தக் கடவுளின் உருவங்களையும் நாணயயங்களில் வடிவமைக்கவில்லை.

குஷான் காலத்து கார்த்திகேயர் நாணயங்கள் பின்னர் வந்துள்ள நாணயங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளன. மத்திய பாரதத்தை சேர்ந்த உஜ்ஜெயின் எனப்படும் நகரில் கிடைத்த அடையாளக் குறிப்பு இடப்படாத செப்பு நாணயத்தில் முன்புறத்தில் சிவன் அல்லது கார்திகேயரைப் போன்ற உருவம் காணப்படுகிறது. 8 அந்த தெய்வத்தில் வலது கையில் கைத்தண்டம் இருக்க இடது கையில் ஒரு குடுவையும் காணப்படுகிறது.

அடுத்து உடும்பராக்கள் எனப்படும் மலைக்குடியினர் ஆட்சி மற்றும் பஞ்சாப்பின் யவுதேய ஆட்சியின் போது பெருமளவில் கார்த்திகேயர் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. 9 உடும்பராக்களின் இஷ்ட தெய்வம் சிவன் அல்லது மகாதேவா என்றாலும் கூட அவர்கள் வெளியிட்டு உள்ள நாணயங்களின் முன்புறத்தில் வலது கையில் வேல்கம்பை ஏந்திய கார்த்திகேயர் இடப்பக்கம் நின்றுள்ள காட்சியில் உள்ளார். யவுதேய ஆட்சியின்போது வெளியிடப்பட்டு உள்ள செப்பு நாணயங்களில் முன்புறத்தில் கார்த்திகேயர் நின்று கொண்டு இருக்க அவரது இடப்புறத்தில் அவருடைய வாகனமான மயிலும் காணப்படுகிறது. அதைத் தவிர யவுதேய ஆட்சி கால நாணயங்களில் முதன் முதலாக ஒரு ஆறு தலையைக் கொண்ட தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. அந்த நாணயங்களின் பின்புறத்தில் காணப்படும் பெண் தெய்வம் முன்புறத்தில் உள்ள தெய்வத்தின் மனைவியாக இருக்கலாம். அவளது உருவம் அவள் நிற்பது போலவும், சிலவற்றில் அவள் தனது இடுப்பில் இடது கையை வைத்துக் கொண்டு நடப்பது போலவும் உள்ளது.

குஷான் காலத்து நாணயங்கள், யவுதேய ஆட்சி கால நாணயங்களின் தன்மைகளில் பெரும் அளவு ஆதிக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதற்குச் சான்றாக யவுதேய ஆட்சி கால நாணயங்களில் காணப்படும் கார்த்திகேயர் உருவங்களும் குஷான் காலத்து நாணயங்களில் உள்ள மகாசெனாவின் தோற்றமும் ஓரளவு ஒன்று போலவே உள்ளது. அது மட்டும் அல்ல சில சமயங்களில் யவுதேய ஆட்சி காலத்தில் அவர்களுடைய சில பகுதிகளில் குஷான் காலத்து செப்பு நாணயங்கள் பெருமளவில் உபயோகத்தில் இருந்துள்ளன. யவுதேய ஆட்சி கால நாணயங்களில் உள்ள கார்த்திகேயரை அவர்கள் பிராமண்யா என அழைத்துள்ளார்கள்.

யவுதேயர்களுக்கு பிரதான தெய்வம் கார்திகேயர்தான். புனித நகரான ரோதக் அல்லது ரோஹ்தக் எனப்பட்ட இடம் யாவுதேயாவின் நாணயச் சாலை என்றே அழைக்கப்பட்டது. தற்காலத்தில் கேரளத்தில் உள்ள திருவாங்கூர் தனி பிரதேசமாக இருந்தபோது எப்படி அது பத்மநாப ஸ்வாமி எனும் விஷ்ணுவின் பெயரால் ஆட்சி செய்யப்பட்டதோ அப்படித்தான் அந்தக் காலத்திலும் கார்திகேயரின் பெயரிலேயே யாவுதேய மன்னர்களும் தமது நாட்டில் ஆட்சியை நடத்தினார்கள். அற்புதமான உருவ அமைப்பைக் கொண்ட கார்த்திகேய உருவ நாணயங்கள் குப்த சக்ரவர்த்திகளின் காலத்தில்தான் வெளியாயின. பூவணி வேலைபாடுகளைக் கொண்டும், சைவ சமய பொருட்களைக் காட்டியபடியும் இருந்த நாணயங்களை அவர்கள் காலத்தில் வெளியிட்டார்கள்.10

குப்தா மன்னர்கள் சிலர் தமது பெயர்களில் ஸ்கந்தா அல்லது குமரா என்ற வார்த்தையையும் சேர்த்து வைத்துக் கொண்டார்கள். குமார குப்தா I (415-450 A.D) காலத்தில் வெளியான தங்க நாணயங்களில் பின் புறத்தில் மயில் மீது கார்த்திகேயர் அமர்ந்திருக்க அவரது இடது கையில் வேல்கம்பை பிடித்துள்ள நிலையில் உருவங்கள் காணப்படுகின்றன. முன்புறத்தில் ஒரு மன்னன் மயில் ஒன்றுக்கு பழங்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வலது கையினால் கொடுப்பது போன்ற உருவங்கள் உள்ளன. அந்த நாணயங்களின் இருபுறத்திலும் அந்த மன்னனின் பட்டப் பெயரான மஹேந்த்ரகுமராஹ் என்ற வார்த்தை காணப்படுகின்றது. குமார குப்தா I னின் காலத்தில் வெளியிடப்பட்டு உள்ள மேலும் பல தங்க நாணயங்களில், ஒரு மயிலுக்கு உணவு தருவதைப் போன்ற பெண்ணின் பலவித உருவங்கள் காணப்படுகின்றன. அபூர்வமாகக் கிடைத்த ஒரு வெள்ளி நாணயத்தின் பின்புறத்தில், அந்த பக்கத்தின் முழு பகுதியையும் ஆக்ரமித்துள்ளது போல ஒரு மயில் தனது தொகையை விரித்தாடிக் கொண்டுள்ள காட்சி உள்ளது.

குப்தர்கள் காலத்திற்குப் பிறகு வட இந்தியாவில் கார்த்திகேய நாணயங்கள் காணப்படவில்லை.

தென் இந்தியாவில் கார்த்திகேய உருவ அமைப்புடன் கூடிய நாணயங்கள் மிகவும் குறைவாகவே இருந்தது. அதுமட்டும் அல்ல நாணயங்களில் காணப்பட்ட எழுத்துக்கள் மற்றும் சின்னங்களில் ஆராய்ச்சியாளர்களிடையே ஒருமித்தக் கருத்துக்கள் இருக்கவில்லை. சங்க காலத்தை சேர்ந்த சோழர்கள் மற்றும் மலையமான் காலத்து தமிழ்நாட்டு நாணயங்களில் கார்திகேயருடன் சம்மந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட வேலின் உருவம் காணப்பட்டது. 11 தமிழ் சங்க கால இலக்கியங்களில் கார்திகேயரைக் குறித்த குறிப்புக்கள் நிறையவே இருந்தன. 12 சைவ சமயத்தை சேர்ந்த பல பொருட்களும் சின்னங்களும் தமிழ் மன்னர்கள் ஆண்ட பகுதியின் நாணயங்களில் காணப்படுவதினால் கார்திகேயரைக் குறிப்பதே அந்த வேல் சின்னங்கள் என நம்ப முடிகின்றது. உதாரணத்திற்கு சங்ககால பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் வெளியான நாணயங்களில் காணப்பட்ட திரிசூலம், சிவலிங்கம், காளைமாடு, போன்றவற்றையும் , சங்க கால சோழர்கள் ஆட்சியில் வெளியான நாணயங்களில் காணப்பட்ட காளை மாட்டின் உருவங்களையும் கூறலாம்.

கர்நாடகாவின் பாதாமி சாளுக்கியர்களை சேர்ந்த விக்ரமாதித்யன் I (655-681 A.D) னின் காலத்து தங்க நாணயத்தின் பின் புறத்தில் கார்திகேயரின் உருவம் உள்ளது. 13 அதில் காணப்படும் உருவத்தில் உள்ள தெய்வம் இடது புறத்தில் நின்றிருக்க அவருடைய வலது கை இடுப்பில் இருக்க, இடது கை நீண்டு கீழ் நோக்கி உள்ளது. அவரது இரண்டு கால்களுக்கும் இடையே தொகை விரித்துள்ள மயிலின் உருவம் தெளிவற்று காணப்படுகிறது. அவர் அருகில் தலையை தூக்கி நிற்கும் பாம்பும் , ஒரு பன்றியும் காணப்படுகிறது. தானம் கொடுக்கப்பட்ட தாமிரத் தகடுகளில் கார்த்திகேயரை தமது குலதெய்வம் என பாத்மியை சேர்ந்த சாளுக்கிய மன்னர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யுத்தக் கடவுளான கார்த்திகேயரின் உருவங்களைக் கொண்ட மேலே குறிப்பிட்டுள்ள விசேஷமான நாணயங்கள் தமது படை காஞ்சியில் பல்லவ மன்னர்களை தோற்கடித்ததை கொண்டாடும் வகையில் சாளுக்கிய மன்னர்களால் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். மேலும் குப்தர்களின் முந்தைய ஆட்சியினரான குஷான் காலத்தை சேர்ந்த நாணயங்களின் அளவுகோலை அடிப்படையாக வைத்துக் கொண்டு அதன் எடையை 120 கிரைன் (grains) என வைத்து இருக்க வேண்டும். குஷான் மற்றதும் குப்த அரச ஆட்சியாளர்களிடம் இருந்தே கார்த்திகேய உருவங்களை நாணயங்களில் வெளியிடும் கருத்தை சாளுக்கிய மன்னர்கள் பெற்று இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. மயூர கட்யானா அதாவது மயில் உருவ தங்க நாணயம் எனும் வார்த்தை கர்நாடகத்தில் பிற்கால சில கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. 14 பின்னர் கர்னாடகாவில் உள்ள தார்வார் மாவட்டத்திலும் , மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள கோலாபூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீட் எனும் கிராமத்திலும் முன்புறத்தில் மயில்களின் பலவித தோற்றங்கள் உள்ள நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பீட் கிராமத்தில் கிடைத்த நாணயத்தின் பின் புறத்தில் ஆழமாக செதுக்கப்பட்டது போன்ற சிவ லிங்க உருவம் உள்ளது.

சாளுக்கியர்களை அடுத்து விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலம்வரை கார்த்திகேயர் உருவங்களைக் கொண்ட நாணயங்களைக் காண முடியவில்லை. பல இந்துக் கடவுட்களின் உருவங்களைக் கொண்ட விஜயநகர மன்னர் காலத்து தங்க நாணயங்களில் கூட கார்திகேயரின் உருவம் உள்ள நாணயம் காணப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது. 16 இடைக் காலத்தில் தென் இந்திய ஆலயங்களில் கொடுக்கப்பட்ட அடையாள வில்லைகளில் கூட கார்திகேயரின் உருவங்களைக் கொண்ட வில்லைகள் கிடைத்ததான தகவல் இல்லை.17

17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரகுநாத நாயக்
மன்னனின் காலத்தை சேர்ந்த தாமிர உலோக
நாணயம். மயிலுடன் காணப்படுவது கார்த்திகேயர்
17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரகுநாத நாயக் மன்னனின் காலத்தை சேர்ந்த தாமிர உலோக நாணயம். மயிலுடன் காணப்படுவது கார்த்திகேயர்

17 ஆம் நூற்றாண்டின் முன் பகுதியை சேர்ந்த தஞ்சாவூர் மன்னனான ரகுநாத நாயக் என்பவர் காலத்தை சேர்ந்த வெளியிடப்படாத நாணயத்தில் முன்புறத்தில் கார்திகேயரின் உருவம் நின்றுள்ள நிலையிலும், அவருக்குப் பின்னால் ஓரளவு தெரியும் மயில் உருவத்துடனும் காணப்படுகின்றது . 18 அந்த நாணயத்தின் பின் பக்கத்தில் சிவலிங்கத்தின் அடியில் ஒரு நந்தி அமர்ந்து உள்ளது போன்ற உருவம் உள்ளது. 19 அதற்கு சிறிது காலத்துக்குப் பின்னர் மைசூரை சேர்ந்த காந்திரவ நரசராஜ உடையார் (1638-1656 A.D) காலத்தில் வெளியிடப்பட்ட நாணயத்தின் முன்புறத்தில் ஒரு மயில் மீது அமர்ந்துள்ள கார்திகேயரின் உருவம் காணப்படுகிறது. 20 உடையார்களின் காலத்தை சேர்ந்த தாமிர நாணயங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த கொங்கு நாட்டுப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

At a slightly later date, Kantirava Narasaraja Wodeyar (1638-1656 A.D) of Mysore issued 'Peacock-obverse' type and 'Kārttikeya-seated-on-peacock-obverse' type coins in copper.20 Coins of these two types are mostly reported from the Kongu region of Tamilnadu and are believed to be among the earliest copper coins of the Wodeyars.

சந்தர்ப்ப சூழ்நிலை சான்றுகளை பார்க்கும்போது , மயில் உருவங்களைக் கொண்ட நாணயங்கள் கார்திகேயரையே குறிக்கின்றது என்றே எண்ண வேண்டி உள்ளது. ஆனால் தேசியப் பறவையான மயில் உருவம் இந்த கண்டம் முழுவதிலும் காணப்படுகிறது. அது இந்தியக் கலை மற்றும் இலக்கியங்களில் தனி முத்திரைப் பதித்துக் கொண்டுள்ளது. அது மட்டும் அல்ல அந்தப் பறவை கிருஷ்ணர் போன்ற பிற தெய்வங்களுடனும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்திய வரலாற்றில் - மௌரியர் காலத்து நாணயங்கள் முதல் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாத சேதுபதி காலம் வரை வெளியிடப்பட்டுள்ள பல நாணயங்களில் மயில் காணப்படுகிறது. ஆகவே மயிலின் உருவைக் கொண்ட அனைத்து நாணயங்களும் கார்திகேய மரபை குறிப்பதாகவும் நினைக்க முடியவில்லை.

பின்னுரை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆராய்ச்சியின் முடிவுகள் கார்திகேயரின் உருவங்களைக் கொண்ட நாணயங்கள் இரண்டு முக்கியமான காலத்தை காட்டுவது மட்டும் அல்ல, அவை இரண்டு பகுதிகளை சேர்ந்தவை என்பதும், அந்த இரண்டு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று வெகு தொலைவில் (ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி) இருந்துள்ளது என்பதும் விளங்கும்:

  1. சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த குஷான் மற்றும் குப்தர்கள் காலங்களில் கார்த்திகேயர் உருவங்களைக் கொண்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.
  2. நாயகர்கள் மற்றும் உடையார் காலத்தில், அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்ட சில தென் இந்தியப் பகுதியில் கார்த்திகேய நாணயங்கள் குறைவான அளவில் புழக்கத்தில் இருந்துள்ளன.

தென் இந்திய நாணயங்களில் மற்ற கடவுட்களுடன் ஒப்பிடும்போது தேவ வம்சத்தை சேர்ந்தவரும், யுத்தங்களில் தொடர்புற்றவருமான கார்திகேயரின் உருவ நாணயங்கள் மிகக் குறைவான அளவிலேயே புழக்கத்தில் இருந்துள்ளது. பண்டைக் காலம் முதலே இந்தியாவின் தென் பகுதிகளில் பெரும் அளவிற்கு முருக வழிபாட்டு மரபு இருந்திருந்தும், அவருடைய உருவங்கள் நாணயங்களில் காணப்படாதது ஏன் என்பதின் காரணம் விளங்காத புதிராகவே உள்ளது. மற்ற இடங்களில் வெளியிடப்பட்டுள்ள கார்திகேயரின் உருவங்கள் இருந்த நாணயங்கள் தங்க நாணயங்கள் அல்லது தாமிரத்திலான நாணயங்களே. தெய்வங்களின் பொருட்கள் மற்றும் அவர்களின் தன்மைகளைக் காட்டும் நாணயங்கள் பெரும் அளவில், ஏன் , வெள்ளி நாணயங்களிலும் இருந்துள்ளன. இந்த தெய்வத்தை ஒவ்வொரு காலத்திலும் ஆண்ட வம்சத்தினர் வெவேறு பெயர்களில் அழைத்துள்ளனர்.

கார்திகேயரின் உருவங்களைக் கொண்ட நாணயங்கள் முதலில் வெளியிடப்பட்டபோது அவை கல்வெட்டுக்களில் செதுக்கப்பட்டு இருந்த உருவங்களையே கொண்டிருந்தன என்றாலும் அவற்றில் சில குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருந்துள்ளன என்பது தெளிவு. இந்திய கண்டத்தின் நாணயங்களில் குப்தர்கள் காலத்து நாணயங்களையே மிகச் சிறந்த உதாரணமாகக் கூறக் கூடிய நாணயங்கள் என்று கூற முடியும். அவற்றில் காணப்படும் உருவ அமைப்புக்களின் முறையான அளவு பரிமாணங்கள் அந்தக் கலையில் அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த ஞானத்தை வெளிப்படுத்துகின்றது. உடையார் காலத்து நாணயங்களில் உள்ள உருவங்களின் தன்மைகள் - நீள ,அகல, உயரம் - போன்ற மூன்று நிலைகளும் முறையாக இல்லாமல் காகிதத்தில் நகத்தினால் செதுக்கி வரையப்பட்ட ஓவியம் போல காட்சி தருகிறது. குறைந்த நீள- அகல அளவுகளையே கொண்ட நாணயங்களில் உருவங்களை வடிவமைப்பது, சித்திரக் கலைஞர்களுக்கு எளிதான காரியம் அல்ல. அது செய் அல்லது செத்து மடி என்ற நிலையைப் போன்றது.

அதிகம் அறியப்படாத அரச வம்சத்தினர் வெளியிட்டுள்ள நாணயங்களின் ஆராய்ச்சியினை மேலும் மேற்கொள்வதின் மூலமே பண்டையக் கால அரச வரிசை முறை மற்றும் அவர்கள் கொண்டிருந்த சமூக கலாச்சார முறைகளை சரிவர புரிந்து கொள்ள முடியும்.

Notes and References:

1. The Indira Gandhi National Centre for the Arts (IGNCA), New Delhi, attempted some such studies as part of a national research project entitled ‘Numismatic art of India: documentation of materials' (1991-94). Prof. B.N. Mukherjee, Caramichael Professor of Ancient Indian History and Culture, University of Calcutta, Calcutta was the Hon. Director and Dr. R.C. Sharma, formerly Director-General, National Museum, New Delhi was the Hon. Consultant for the project. As a full-time Research Fellow for the project, I studied the art in the coinage of various South Indian dynasties and also the foreign coins found in India. I examined the relevant coin collections in all the major museums in South India and in the National Museum, Oxford; Fitzwilliam Museum, Cambridge and the University Museum, Manchester (all in U.K)

The present paper too is based on my studies and observations during the project. I am thankful to Prof. Mukherjee and Dr. Rita Sharma, Keeper (Numismatics and Epigraphy) Kārttikeya National Museum, New Delhi, for their encouragement and help while preparing this paper.

I have earlier undertaken similar studies relating to Viśņu and Şiva in Indian coinage. See S. Suresh, "Vishnu in South Indian coinage" in G. Kamalakar ed., Vishnu in Art, Thought and Literature (Hyderabad, 1993) pp. 273-78; idem, (Murugan Temple, Eastham, London, 1994).

2. For instance, see F. L. Hernault, L'iconographic de Subrahmaņya and Tamilnad (French) (Pondicherry, 1978).

3. For further details about the Kārttikeya coins of the Kushana, see P.L. Gupta Coins (New Delhi, 1985) pp. 41-42, 1192-95. For general surveys of various aspects of the historical and artistic importance of Kushan coins, see P.L. Gupta and Sarojini Kulashreshtha, Kusāna Coins and History (New Delhi, 1994); S.K. Maity, Early Indian coins and Currency System (New Delhi, 1970): Pranabananda Jash, "Religious Significance of the Kushāna Coinage". The Journal of the Numismatic Society of India LIII 1 & 2 (1991) pp. 173-79, For numismatography and bibliography of Kushan coins, see Biswajeet Rath, "Numismatics: The changing Face V - Studies on Kushana Coinage" IIRNS Newsline 14 (1997) p. 4.

4. P.L. Gupta 1969 (Supra n.3) pp 30-31; Pranabananda Jash 1991 (Supra n.3) pp 173-79.

5. B.N. Mukherjee "Impact of the Kushān coinage on Early Indian Indigenous Coins" in Ajay Mitra Shastri ed., Foreign Elements in Indian Indigenous Coins (Varanasi,1982) pp. 13-26. I had a long discussion on this topic with Prof. Mukherjee when he visited my residence at Madras in December, 1996.

6. For more details about the export of Roman coins and other Roman antiquities to India see S. Suresh, "Roman Vestiges in Kanchipuram" in Nanditha Krishna ed., Kanchi-A Heritage of Art and Religion (Madras, 1992a) pp. 56-61; idem, A study of the Roman Coins and other Antiquities in India with special reference to South India (unpublished Ph.D. thesis, Jawahrlal Nehru University, New Delhi, 1993); idem, "early Roman finds in Madras city' in G.J. Sudhakar ed., Aspects of Madras-A Historical perspective (Madras, 1993a) pp. 13-16; idem, "Recent Archaeological discoveries and Studies in Tamil Nadu ", quarterly Bulletin of the School of Historical and Cultural Studies I 3 & 4 (1994-95) pp. 11-16; idem, " Countermarks of Buddhist symbols on the Roman coins found in Andhra Desa (synopsis of the paper)" in contribution of Andhra Desa to Buddhism-souvenir (Hyderabad, 1997) pp. 51-52.

7. For a very brief discussion of Kārttikeyaor Muruga as the ‘god of the battlefield' see S. Suresh, "Defence Architecture in the Early Tamil country", Indian History Congress - Proceedings of the Forty-ninth Session (Delhi, 1989) pp. 657-61.

8. P.L. Gupta 1969 (Supra n.3) p.35.

9. For discussions on these coins, see Bhaskar Chattopadhyay, Coins and Icons: A Study of Myths and Symbols in Indian Numismatic Art (Calcutta, 1977) pp. 221-25;  Jai Prakash "Observations on the Tribal Coinages of Ancient India", The Journal of the Numismatic society of India XXVII 2 (1965) pp. 123-41; B.N. Mukherjee, 1982 (Supra n.5) pp. 13-26; Satya Shrava 1985 (Supra n.3) p. 14.

10. For detailed descriptions of these coins, see P.L. Gupta 1969 (Supra n.3) pp. 53-58 and C.S. Roy, "Foreign Elements in the Coinage of the Guptas" in Ajay Mitra Shastri ed., Foreign Elements in Indian Indigenous Coins (Varanasi, 1982) pp. 144-52. For numismatography and bibliography of Gupta coins, see Biswajeet Rath "Numismatics: the Changing Face VII - Studies on Gupta Coinages" IIRNA Newsline 15, (1997) p. 4.

11. Most of these coins are, on date, in private collections. I am thankful to Mr. A. Seetharaman of Tanjavur for permitting me to study his collections.

12. The bibliography for the references to the deity in early Tamil literature is vast. See R. Champakalakshmi, Trade, Ideology and Urbanization-South India, 300 BC to AD 1300 (New Delhi, 1996), pp. 60, 101.

13. Ramayya, "On an Unique Gold Coin of Vikramaditya-I of the Western Chalukya Dynasty of Badami". The Journal of the Numismatic Society of India XXVII 1 (1965) pp 46-52.

14. For epigraphical references to ‘mayūra gadyāna' see Brajadulal Chattopadhyaya,  Coins and Currency Systems in South India Ad 225-1300 (New Delhi, 1977) pp. 129,170; S.J. Mangalam, " Some Medieval Gold Coins of the Deccan" Studies in South Indian coins IV (1994) pp. 101-09.

15. S.J. Mangalam 1994 (Supra n.14) pp. 101-09.

16. For lists and descriptions of Vijayanagar coins see A.V. Narasimhamurthy, Coins and Currency system in Vijayanagara Empire (Varanasi, 1991); N. Ramesan, A Catalogue of the Vijayanagar coins of the Andhra Pradesh government Museum (Hyderabad, 1979); N. Sankara Narayana. Catalogue of Vijayanagar Coins in the Madras Government Museum (Madras, 1977); S. Suresh 1993 (Supra n.1) pp 273-78.

17. For more details about the temple-tokens, see S. Suresh, ‘A Note on the Temple tokens of Late Medieval South India", Paper presented at the Vth Annual Conference of the South Indian Numismatic Society (Tiruchirappalli, 1995)

18. The coin is in the collection of Mr. A. Seetharaman, Tanjavur.

19. For more details about this sub-shrine, see J.M. Somasundaram. The Great Temple at Tanjore (Madras, 1935) pp 10-11; S. Suresh, Conservation of Brihadisvara Temple, Tanjore-A Historical Study (unpublished M.Phil. dissertation, University of Madras, Madras, 1986).

20. A. Seetharaman and N. Jayanthi, Unpublished Copper coins of Kanthirava Narasaraja Wodeyar, Studies in South Indian Coins VII (1997) pp. 125-27.


Dr. ஈஸ். சுரேஷ் பண்டைய கால உலோக நாணயங்கள் மற்றும் வரலாற்றுக் கலை என்பதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் PhD பட்டம் பெற்றுள்ள திரு S சுரஷ், 1992 ஆம் ஆண்டில் அவர் எழுதிய 'தமிழ்நாட்டில் ரோமர்களின் பழமை சின்னங்கள் ' என்ற நூலையும் சேர்த்து ஐரோப்பா மற்றும் இந்தியாவில் எழுபதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார். தற்போது அவர் INTACH மற்றும் TVS கல்வி நிறுவனங்களில் ஆலோசனையாளராகவும் இருந்து வருகிறார். அவருடைய விலாசம்:
45, IV Street
Padmanabha Nagar
Adyar, Chennai-600 020 India
Phone: 0091 44 4918479
Fax : 0091 44 4919402
Email: jswamimd2.vsnl.net.in


This paper was presented at the First International Conference Seminar on Skanda-Murukan, December 1998

See also these related research articles about the cult of Skanda-Kumāra in Sanskrit sources:

Other articles from International Conferences on Skanda-Murukan