Lord Skanda-Murugan
 

இலங்கையில் முருகன் வழிபாடு தொல்பொருள் ஆராய்ச்சியில் புதிய பரிமாணம்

மூலக்கட்டுரை: பீ. புஷ்பரத்தினம்

Yaudheya coinage of Punjab (300-340 AD)

Read the original article in English in:
"Murukan Worship in Sri Lanka: New Archaeological Evidence"
by P. Pushparatnam

இந்தக் கட்டுரையின் தமிழாக்கம்: சாந்திப்பிரியா

சமீபகாலத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்து உள்ள செய்திகள் இலங்கையில் உள்ள தமிழர்களின் சரித்திரத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டியதின் அவசியத்தைக் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அந்த ஆராய்ச்சியில் கிடைத்து உள்ள தகவல்கள் இரண்டு கோணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன எனத் தெரிகின்றது.

முதலாவதாக சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்புக்களை தமிழ்நாட்டில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களுடன் மட்டுமே பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்த இலங்கை அரசு, பண்டைக் காலம் முதலே அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. இதற்குக் காரணம் பாலி புராணங்களில் இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ள செய்திகளின் காரணமாகவே அந்த நிலை உருவாகி இருந்தது. இதில் கசப்பான உண்மை என்ன என்றால், இப்படிப்பட்ட செய்திகளே உண்மை என நம்பப்பட்டு வந்து விட்டதினால் பண்டைக் காலம் முதலேயே அங்கு வாழ்ந்து வந்த இலங்கைா தமிழர்களின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் போயிற்று. இலங்கைா தமிழர்களின் வரலாறு தமிழ்நாட்டின் பெருமையை பறை சாற்றுவதாகவே அமைந்து உள்ளது என்று நம்பப்பட்டதின் விளைவே அது. ஆனால் தற்போது கிடைத்து உள்ள ஆராய்ச்சிகளின் கண்டு பிடிப்புக்கள் அந்த தவறான நிலைமையை மாற்றி அமைத்து உள்ளது.

இரண்டாவதாக சமீபகால ஆராய்ச்சியின் கண்டு பிடிப்புக்களின்படி இலங்கைாவின் தமிழர்களின் கலாச்சாரமும் வாழ்கை முறையும் தமிழ்நாட்டில் இருந்து அங்கு சென்று குடியேறிய தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டவை என்ற கூற்று தவறு எனவும், பண்டைக் காலம் முதலே இலங்கைாவின் தமிழர்கள் தமக்கென சில பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் கொண்டு இருந்தார்கள் என்ற உண்மையை தெரிவித்துள்ளது. ஆகவே இலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்து வந்திருந்த தமிழர்களைப் பற்றி உண்மையான வரலாற்று செய்திகளை விளக்க வேண்டியதின் அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் புதிய வரலாற்று செய்திகளினால் இலங்கைாவின் பண்டைய தமிழர்கள் கொண்டு இருந்த வழிபாட்டு முறைகளில் எந்த மாற்றமும் ஏற்படப் போவது இல்லை என்பது வேறு விஷயம் . தற்போது கிடைத்துள்ள புதிய பரிமாணத் தகவல்கள் அந்த காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயங்கள் மற்றும் உலோகங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டு உள்ளது.

முன்னர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருந்தவர்களின் பார்வை மற்ற விஷயங்களில் அதிகமாகவும், அங்கிருந்த நாணயங்கள் மற்றும் உலோகத்தின் மீது சற்று குறைந்தும் இருந்தது. குஷானா, சடவாஹனா போன்ற ஆராய்ச்சியாளர்களின் கூற்றுக்கள் மற்றும் சங்ககால செய்திகள் போன்றவற்றையும், ஆசியாவின் தென் பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் இலங்கைா போன்ற இடங்களின் வரலாற்று செய்திகளுடன் அந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் உலோகங்களையும் சேர்த்தே ஆராய்ந்தார்கள். ஆனால் இந்தக் கட்டுரையோ இலங்கையில் இருந்த பல்வேறு இனப்பிரிவுகள் பயன் படுத்திய நாணயங்களின் முக்கியத்துவத்தை மையமாக வைத்துக் கொண்டே எழுதப்பட்டு உள்ளது.

மூன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இருந்த இந்து மதப் பிரிவுகளான வைஷணவம், சைவம் பற்றும் புத்த மதப் பிரிவுகள் இந்த தீபகற்பத்தின் நடவடிக்கைகளில் முக்கியமான பங்கை வைத்துக் கொண்டு இருந்தன. ஆராய்ச்சியில் கிடைத்த மண் பாண்டங்கள், கலைப் பொருட்கள், லிங்கம், மற்றும் உலோகச் சிலைகள் போன்றவற்றில் காணப்பட்ட எழுத்துக்கள் கீ. மூ. 800 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்த மதப் பிரிவுகளைப் பற்றி எடுத்துக் காட்டின. மூன்றாம் நூற்றாண்டில் அங்கு புத்த மதம் தழைக்கத் துவங்கியப் பின் அந்த தீபகற்பத்தின் மதசார்ப்புக் கொள்கை முற்றிலும் மாறுபடத் துவங்கிற்று.

பாலி இலக்கியங்களான தீப வம்சா, மஹாவம்சா மற்றும் குலவம்சா போன்ற நூல்கள் புத்த மதத்தைப் பற்றி உயர்வாக எழுதி, இந்து பிரிவினை சார்ந்த மதங்களுக்கு தர வேண்டிய உரியப் பெருமையைத் தரவில்லை (மகாவம்சா X-102, XIX-37, XXI-1-21, XXII- 3-4). அதனால்தான் அனைத்தையும் அறிந்து கொள்ள அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த நாணயங்களின் ஆராய்ச்சி நல்ல பயனைத் தரும் என்பதினால் ஸ்கந்தன் என்ற குமரக் கடவுளின் முருக பக்தி இயக்கத்தைக் காட்டிடும் வகையில் புழக்கத்தில் இருந்த நாணயங்களை ஆராய்ந்ததில் பல புதிய செய்திகள் கிடைத்தன.

18 ஆம் நூற்றாண்டுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளை 19 ஆம் நூற்றாண்டில் ஆராய்ந்த இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரிந்த ஐரோப்பிய அதிகாரிகள், தமது ஆராய்ச்சியில் புதைப் பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த நாணயங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். 20 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆராய்ச்சியில் நாணயங்களில் பொறிக்கப்பட்டு இருந்தப் பெயர்கள், வார்த்தைகள் போன்றவை அந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களுடைய வம்சம், வரலாறு போன்றவற்றை வரிசைக்கிரமமாக விளக்கும் விதத்தில் அமைந்து இருந்தன.

அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த தமிழர்கள் வெளியிட்டு உள்ள நாணயங்களும் கிடைத்துள்ளன. அவை கி.மூ 3 ஆம் ஆண்டு முதல் கி.பி. 17 ஆம் ஆண்டுவரை இருந்த மொழிகள், மக்களின் வாழ்கை முறை, அயல்நாட்டு வர்த்தகம், வியாபாரம் போன்றவற்றை எடுத்துக் காட்டும் விதத்தில் இருந்தன. அந்த நாணயங்கள் மீது பிரம்மி அல்லது தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டு இருந்த எழுத்துக்கள் , சின்னங்கள் மற்றும் கடவுளின் பெயர்கள் போன்றவை அந்த காலங்களில் இருந்த சமூக, பொருளாதார நிலைகளை மட்டும் அல்ல மத சம்மந்தமான வரலாற்றுச் செய்திகளை சரியான முறையில் திருத்தி அமைக்க உதவியாக உள்ளன. இதுவரை கிடைத்துள்ள செய்திகள் அந்த தீப கற்பத்தில் இருந்த முருகன் வழிபாட்டு முறையை தெரிவிக்கின்றது. அந்த நாணயங்களில் முருகனின் பெயர், அவருடைய ஆயுதங்கள், வாஹனம், அவருக்கு இருந்த பெயர்கள் போன்றவற்றை குறிப்பிட்டு உள்ளதினால் இலங்கைாவின் முருக வழிபாடு எந்த அளவிற்கு விரிந்து இருந்தது என்பதை தெரிவிக்கின்றன.

ஸ்கந்த-கார்த்திகேய வழிபாட்டை ஆரியர்கள் கடைப் பிடிக்கத் துவங்கியதற்கு வெகு காலம் முன்னரே தமிழர்கள் முருக வழிபாட்டைக் தொடர்ந்து கொண்டு இருந்துள்ளனர். சங்க காலத்தில் குறிஞ்சி மலையில் இருந்த திணை எனக் கூறப்பட்ட நிலப்பரப்பில் முருகனே முதற் கடவுள் எனப் போற்றப்பட்டு வந்துள்ளார். (கலிதாசா 1976--58). அவருக்கு சூட்டப்பட்டு இருந்தப் பலவிதமான பெயர்கள் பல இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவரை முருகன் (அக நானூறு 22-11, புறநானூறு 56-11, நாறினை 47-10) எனவும், செவ்வேல் (மதுரை கன்சி 1.611, நாறினை 254, குறுந்தொகை 53.3) எனவும், மன்னையான் (திருமுருகாற்றுப் படை 1.201) எனவும், வீர மயில் மேல் நாயிறு அதாவது வீர மயில் மீது ஏறிய சூரியன் (பரிபாடல் 18-25) என்றும் அழைக்கும் பல குறிப்புக்கள் உள்ளன (காளிதாசா 1999: 73-96). சமஸ்கிரத ஸ்கந்த கார்த்திகேயர் வழிபாடு என்பது தமிழ் முருகன் பக்தி இயக்க வழிபாட்டுடன் ஒத்து இருந்தது என்றக் கருத்து (காளிதாசனின் குமார சம்பவம்) பல இலக்கியங்களில் (திருமுருகாற்றுப் படை) காணப்பட்டது. தமிழ் முருகன் வழிபாடு மற்றும் ஸ்கந்த கார்த்திகேய வழிபாட்டு முறைகள் என்ற இரண்டும் எப்படி அனைத்திலும் ஒத்து இருந்தன என்பதை கமில் ஸ்வெலபெல் (Kamil Zvelebil), பிரெட் க்லோத்தி (Fred Clothey) மற்றும் ராசு கலிதாஸ் (Raju Kalidos) என்பவர்கள் கோடிட்டுக் காட்டி உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் எப்போது முதல் முருக வழிபாடு துவங்கியதோ அப்போது முதலே இலங்கைாவிலும் முருக வழிபாடு துவங்கியது. ஆகவே இலங்கைாவிலும் தோன்றிய முருக வழிபாட்டிற்கு வழிகாட்டி தமிழ் நாடாகவே இருந்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அடிகானல்லூரில் கிடைத்த பொருட்களை இலங்கைாவின் பூப்பறிப்பு, அனுராதபுரா, பின்விவா, கந்தரோட்டை மற்றும் புனக்காரி (Pomparippu, Anuradhapura, Pinveva, Kantarotai and Punakari) போன்ற இடங்களில் கிடைத்தப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் அவை முருகனைக் குறிக்கும் வேல், சேவல் போன்றவற்றுடன் ஒத்து உள்ளது என்பது மட்டும் அல்லாமல் அந்தப் பொருட்கள் மூலம் தமிழ்நாட்டில் முருக வழிபாடு இலங்கையில் இருந்த முருக வழிபாட்டுக் காலத்துக்கு முற்பட்டவை (சிற்றம்பலம் 1995 - 182, புஷ்பரத்தினம் 1991 -38) என்பதையும் எடுத்துக் காட்டியது.

ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்த பாலி இலக்கியங்களில் பிரம்மி கல்வெட்டுக்களில் உள்ளது போலவே பெரும் மனிதர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவற்றில் வை.சுப்பராயுலு என்ற பேராசிரியர் (1989: 92-103) எழுதி உள்ளவற்றில் தனி மனிதர்களின் பெயர்களை கடவுள் பெயர் வருமாறு வைத்துக் கொள்வது சில இடங்களில் இருந்த இந்தியர்களின் பழக்கம் என்று கூறி உள்ளார். அது போல பீ . பரமவிதானா என்பவர் (Paranavitana 1970) இலங்கையில் பிரம்மி கல்வெட்டுக்களில் காணப்பட்ட முருகனின் பெயர்களை தனி மனிதர்களும் தமது பெயர்களாக வைத்துக் கொண்டு இருந்தார்கள் என்பதை கூறுகையில் உதாரணத்துக்காக வேல் என்றப பெயரை சுட்டிக் காட்டி உள்ளார். வேலப்பன் என்ற பெயர் சங்க இலக்கியங்களில் (காளிதாச சுப்ரா) காணப்பட்ட வேலன் என்பதை ஒத்து இருந்ததையும், அதைப் போல பல பெயர்கள் இலங்கைா மற்றும் தமிழ்நாட்டில் மனிதர்களின் பெயராக இருந்துள்ளன என்றும் எடுத்துக் காட்டி உள்ளார்.

சம்ஸ்கிருத ஸ்கந்த வழிபாட்டு முறை வளர்ந்ததில் குமாரா, மகாசேனா, விசாகா போன்றப் பெயர்கள் நடைமுறைக்கு வந்தன (அமரகோசாவில் காணப்படும் இவற்றை 1999 ஆம் ஆண்டில் கலிதோஸ் என்பவர் சுட்டிக் காட்டி உள்ளார்). இலங்கைாவின் வடக்குப் பகுதியை சேர்ந்த பெரிய புளியாங்குளம் என்ற இடத்தில் கிடைத்த (Paranavitana 1970: nos. 356-357) கீ.மூ. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் விசாகா என்பது ஒரு வணிகரின் பெயராக இருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் அப்போதே (Paranavitana 1970: CXXII) முருகன் - ஸ்கந்தன் வழிபாடு இருந்ததை உறுதிப் படுத்துகிறது. தமிழ் பல்கலைக் கழகத்தினர் கோடுமன்னால் என்ற இடத்தில் ஆராய்ச்சி செய்தபோது மேலே கூறியவைகளைப் போன்றப் பெயர் அங்கு கிடைத்த ஒரு மண் பாத்திரத்திலும் எழுதப்பட்டு இருந்தது தெரிய வந்தது (cf. Rajan 1994:82).

தென் ஸ்ரீலங்காப் பகுதியான அக்குரகோட்டாவில் கிடைத்த நாணயத்தில் பிரம்மியில் மகாகோட்டான் என எழுதப்பட்ட வார்த்தை ஒரு நாணயத்தின் பின்புறத்தில் இருக்க முன்புறத்தில் ஒரு மயிலின் வடிவம் காணப்படுகிறது {Bopearachchi 1999:54, Pushparatnam 2001: 43 (figure 1) }. அதைப் போல இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு நாணயம் வடக்கு இலங்கைாவின் கந்தரக் கோட்டை என்ற இடத்தில் கிடைத்தது. அதில் தமிழ் பிரம்மியில் உதிப்பான் என நாணயத்தின் பின்புறமும், ஸ்ரீ வத்ஸா என முன்புறத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளும் காணப்படுகின்றன {(Seyone 1998, Pusparatnam 2001) (figure 2)}.

ஸ்ரீவத்சா மற்றும் மயில் போன்றவை தமிழர்களுடைய மத நம்பிக்கையைக் காட்டுகின்றது. சங்க இலக்கியங்களில் முருகப் பெருமானின் வாகனமே மயில் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உள்ளன (Puranaru 65, Tirumurukārruppatai 1.201). ஆக அந்த நாணயங்களின் மூலம் முருகனின் மீதான பக்தி எந்த அளவு பரவி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இரண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுவரை இலங்கையில் சதுர வடிவிலான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் பிரணவ எழுத்தான ஓம் என்ற வார்த்தை, ஸ்ரீவத்சா, லஷ்மி, யானை, தாமரை, திரிசூலம் , மாடு மற்றும் சிவலிங்கம் போன்றவை இருந்தன. (Parker 1981: 461-482, Peries 1919: 40-67, Bopearachchi 1999, Sitrampalam 1992: 151-158, Sivasamy 1970:1-10, Pusparatnam2001: 90-100). இவை அனைத்தும் இலங்கையில் இருந்த தமிழர்கள் தாம் வைத்துக் கொண்டு இருந்த மத வழிபாட்டை உணர்த்துகின்றன. மயில், சேவல் மற்றும் வேல் போன்றவை அங்கு நிச்சயமாக முருக வழிபாடு இருந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

அதே காலத்தை சேர்ந்த ஸ்கந்தன் மற்றும் முருகனின் அதே நாணயங்கள் இந்தியாவின் துணைக் கண்டத்திலும் (Gupta 1966:187) கிடைத்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் முருகனுடையப் பெயரை வடிவேலன் (Cilappatikāram 1:2, 49-50) என்றும், வேல்வேலவன் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது (Kalittokai 28: 26). தமிழர்கள் ஆரியர்களுடன் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொண்டப் பின்னர்தான் சேவல் என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் ,அது தமிழர்களின் வழிபாட்டில் ஆதிகாலம் தொன்றே இருந்துள்ளது (Gandhidasan 1988:120) என்பதே உண்மை.

மத்திய காலத்தை சேர்ந்த நாணயங்களில் முருகனுடைய சின்னங்களைத் தவிர அவருடையப் பெயர்களும் பொறிக்கப்பட்டு உள்ளதைக் காண முடிகின்றது. ஜாப்னாவில் ஆட்சியில் இருந்த நல்லூர் மன்னன் 13 மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட நாணயங்களை வெளியிட்டு உள்ளார். நாணயங்களின் முன் புறம் மன்னனின் தலையும், பின்புறத்தில் சிவனுடைய வாகனமான நந்தியும் அதை நோக்கி அமர்ந்து உள்ள மயிலும், சேது என்ற வார்த்தையும் காணப்படுகின்றது. மயில் என்பது முருகனின் வாகனம். நந்தியோ அவருடைய தந்தையான சிவபெருமானின் வாஹனம். ஆகவே இது தந்தைக்கும் மகனுக்கும் (சிவன்-முருகன்) இருந்த உறவை எடுத்துக் காட்டுவது போல அமைந்து உள்ளது.

அதுபோல சில நாணயங்களில் மயிலுக்குப் பதிலாக முருகனின் உருவமும் உள்ளது. சேது எனும் மன்னனைப் போலவே தமிழ் மன்னர்களும் வெளியிட்டு உள்ள நாணயங்களில் 'கன்' மற்றும் 'ஆ' என பொறிக்கப்பட்டு இருந்த நாணயங்களையும் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் கண்டுபிடித்து உள்ளார் (Pushparatnam 2001:147-159). அவை 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். மற்றொரு நாணயத்தில் மயில் ஒன்று வலது பக்கம் திரும்பிப் பார்த்தபடி இருக்க அதற்கு மேல் சந்திரன் உள்ளது. அதன் பின்புறத்தில் உள்ள சித்திரத்தில் மனிதன் ஒருவனும் ஈட்டியின் வடிவமும் இருக்க 'கன்' என்ற வார்த்தையும் உள்ளது. இன்னொரு வகையிலான நாணயத்தில் மயில், பாம்பு மற்றும் மனிதன் போன்ற மூவரின் சித்திரமும் உள்ளன. ஆகவே அந்த மனிதன் அந்த நாணயத்தை வெளியிட்டவராகவோ , அல்லது முருகப் பெருமானைக் குறிப்பதாகவோ கூட இருக்கலாம். அதே சமயத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்தப் பகுதிகளில் அவை வெளியிடப்பட்டு இருந்திருக்கலாம் (Seetharraman 1996: 89-97).

'கன்' மற்றும் 'ஏ ' என்ற எழுத்துக்கள் மற்றும் மயில், பாம்பு போன்ற உருவங்கள் முருக பக்தி எந்த அளவு இருந்துள்ளது என்ற நிலையை எடுத்துக் காட்டுகின்றது. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருஞான சம்மந்தர் முருகனை கந்தன் என்ற பெயரில் அழைத்தார் (Tēvāram 1.19). ஏறக்குறிய அதே காலத்தில் ஜாப்னாவை ஆண்டு வந்த மன்னன் தனது பெயரை 'கந்தர்மலைமலையாரியர்கோன்' (Pathmanathan 1980:409-417) என வைத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆகவே 'கன்' என்றும் 'ஏ' என்பதும் அவரைக் குறித்து இருந்திருக்கலாம். அவர் தன்னை ஜாப்னாவின் ஆரிய சக்தி எனக் கூறிக் கொண்டவர். அதையே 'ஆ' என்றும் குறிப்பிட்டு இருந்திருக்கலாம். தமிழர்கள் இருந்த இடங்களில் முருகன் பிரபலமாக இருந்துள்ளார். மயில், பாம்பு மற்றும் வேல் போன்ற உருவங்கள் அதை உறுதி செய்கின்றன. இந்த ஆராய்ச்சியின் மூலம் 14 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் முருகனின் வழிபாடு எந்த அளவில் இருந்திருக்கும் என்பது புலனாகும்.

ஆனால் பல்வேறு நிகழ்வுகளின் காரணமாக இலங்கையில் முருக வழிபாட்டுத் தலங்கள் பல இடங்களில் தோன்றின. அவற்றில் ஒன்றான கதிர்காமத்தில் இந்துக்களைத் தவிர புத்த மதத்தினரும் முருகனை கதிர்காமன் என்ற பெயரில் வணங்குகிறார்கள். இரண்டு மதங்களுக்கு இடையே நிலவும் வேற்றுமையிலும் ஒற்றுமையை அது எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது. கந்தர் சஷ்டி கவசத்திலும் கதிர்காமனைக் குறிக்கும் விதத்தில் அவரை கதிர்வேல் முருகன் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூலில் இலங்கையில் உள்ள தெற்கு திரிகோண மலை, ஜாப்னா மற்றும் கதிர்காமன் என்ற மூன்று இடங்கள் முருக வழிபாட்டில் சிறந்து விளங்கியவை என்று குறிப்பிட்டு உள்ளார். இலங்கையில் முருகன் ஆலயங்களை கந்தன் ஆலயம் என்கிறார்கள். இலங்கைா பெரும்பாலான கலாச்சாரப் பண்புகளை இந்தியாவில் இருந்தே கற்றுக் கொண்டு இருந்தாலும், அந்த தீபகற்பத்திற்கென அது சில கலாச்சார பண்புகளையும் வளர்த்துக் கொண்டு வந்துள்ளது என்பதில் ஐயம் இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக முருகன் பக்தி இயக்கத்தை தன் நாட்டில் வளர்த்துக் கொண்டு உள்ளதைக் கூறலாம்.


See also these related articles:
"Karttikeya in Early Indian Coinage"
"Skanda-Murukan cult in Batticaloa, Eastern Sri Lanka"
Related research articles about Skanda-Murukan