Lord Skanda-Murugan
 

இசை மூலம் முருக வழிபாடு

டாக்டர் திருமதி N. ஜெயாவித்யா

Original article in English: "Murukan Worship through Musical Forms"

தமிழ் மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா

ஆஸ்தீக இந்து மதம் ஆறு வைதீகமான மதப் பிரிவுகளாக உள்ளன. அவை சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்யம், கௌமார்யம் மற்றும் சௌவ்ர்யம் என்பன. இவற்றில் குமாரா அல்லது முருக வழி மரபில் இசை வழிபாட்டை ஒரு வைதீக முறை வழிபாடாக அங்கீகரித்து உள்ளார்கள். முருக வழிபாடு சங்க காலத்தில் துவங்கியது என்கிறார்கள். இதற்கான குறிப்பு வேலன் வெறியாடலில் உள்ளது. அந்த பண்டைக்கால வெறியாடல் முருக வழிபாட்டு முறை ஆகி, பின்னர் ஆகம முறை வழிப்பாட்டைக் கைக் கொண்டுள்ளதாக மாறியது.

கடவுளை ஆராதிக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் மனதுக்கு இனிமையான இசை என்ற மார்கமே அவரை அடைய எளிதான வழியாகும். பக்தி மார்கத்தை பரப்புவதற்கு இசையே சிறந்த வழிமுறையாக உள்ளது. கடவுளை இசை மூலம் அடைய இரண்டு வழிமுறைகள் உள்ளன. அவை ஞான மார்க்கம் மற்றும் கீர்த்தனை மார்க்கம் என்பன. சாதாரண குடிமக்களுக்கு கீர்த்தனை மார்கமே எளிதான வழி முறை ஆகும்.

முருக வழிபாட்டை எடுத்துக் காட்டும் பல இலக்கியங்களில் தொல்காப்பியம், திருமுருகாற்றுப் படை, குறுந்தொகை, பரிபாடல், கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரம் போன்றவை உள்ளன.

அவற்றைத் தவிர அருணகிரிநாதரின் திருப்புகழ், வள்ளலாரின் தெய்வமணி மாலை மற்றும் கவி குஞ்சரபாரதியின் ஸ்கந்த புராண கீர்த்தனைகள் போன்றவைகளும் முருகனின் புகழ் குறித்து பாடி உள்ளன. இவற்றைத் தவிர அவரவர் பாணியில் செய்யப்பட்டு வந்த கிராமிய முறை வழிபாடுகளும் முருகனுக்கு உள்ளன. இலக்கியங்களில் மட்டும் அல்ல கிராமிய பாடல் கலை நிகழ்ச்சிகளான சிந்து, கும்மி போன்றவை மூலமும் முருக வழிபாடு இருந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை பல பாடகர்களும் , இசைக் கலைஞர்களும் இசைகள் மூலமான முருக வழிபாட்டை வளர்த்து வந்துள்ளனர். அவர்களில் அண்ணாமலை ரெட்டியார், பாபநாசம் சிவன், கோடீஸ்வர ஐயர், பாரதியார், பெரியசாமி தூரன் போன்றவர்கள் உண்டு. இந்தக் கட்டுரை மூலம் பத வர்ணம், கீர்த்தனைகள், தில்லானா மற்றும் காவடிச் சிந்து போன்றவை மூலம் முருக வழிபாடு எப்படி வளர்ந்துள்ளது என்பதை காட்டி உள்ளேன். இறைவனிடம் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியைப் போலவே, இசை மூலமும் கிடைக்கும் மகிழ்ச்சியை இந்தக் கட்டுரை ஆசிரியர் அனைவருடனும் பங்கு கொள்ள விரும்பியதினால் எழுந்ததே இந்தக் கட்டுரை. இதன் மூலம் முருக வழி மரபை பரப்பவும் எண்ணம் கொண்டுள்ளார்கள். இந்தக் கட்டுரை முருக மரபு என்பது இசைகள் மூலமும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை ஆராய்கின்றது.

பதவர்ணா

இந்திய பண்பாட்டுக் கலையில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சிகள் மூலம் கடவுளை போற்றுகிறோம். அவற்றை வெளிப்படுத்துவதில் அபிநயம் முக்கியமானது. கீர்த்தனைகள் மூலம் கடவுளைப் போற்றிப் பாடி அவரது அருளை அடைவது போல, பதவர்ணங்களும் அதே நிலைக்கு நம்மை கொண்டு செல்லும். இதில் மூன்று வகைகள் உள்ளன. அவை நிருத்தா, நிருத்யா மற்றும் அபிநயம் என்பவை. நிருத்தா, நிருத்யா என்பவை காட்டும் பாவங்கள் பல்லவி மற்றும் அனுபல்லவி பிரிவை சேர்ந்தது. நிருத்தா மூலம் முக்தயீஸ்வராவையும், சரண நிருத்தாவை, நிருத்யா மற்றும் அபிநயம் என்ற இரண்டின் மூலமும் காட்டுகிறார்கள். அதுபோல வர்ணாக்கள் இரண்டு வகைப்படும்.

அவை தன வர்ணா மற்றும் பத வர்ணா என்பவை. பத வர்ணத்தை சுக வர்ணா மற்றும் அத வர்ணா என்றும் கூறுவார்கள். அவை நாட்டிய நாடகப் பாடல்களில் உள்ளது. நடனத்தின் கருத்தை முழுமையாக அடக்கிய சாஹித்யா எனப்படும் அது, பாடல்களின் இசை உணர்ச்சி வேகம் குறைந்து, ஆனால் நடன பாவங்களை முழுமையாக மற்றும் மேன்மையாக எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து இருக்கும். இந்த சாஹித்யத்தை பதவர்ண ஜடி என்று கூறுவதின் காரணம், அவை நாட்டியக் கருத்தை வெளிப்படுத்தும் பதங்களின் வேகத்தையும், உணர்ச்சியையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதே.

பதவர்ணாவின் கரு காதலின் இலக்கணம் ஆகும். பதவர்ணா மூலம் யங்கி-நாயகியின் பாத்திரங்களின் உறவு அற்புதமான வெளிப்படுத்தப்படுகிறது. பதவர்ணாக்களின் அனைத்து மையக் கருத்துக்களும் தத்துவங்களை உள்ளடக்கி அழகாக, கண்ணியமாக வெளிப்படுத்தப்படும் மதுர பக்தி என்பதின் அடிப்படையிலேயே அமைந்து உள்ளன. பாபநாசம் சிவன் என்பவரின் புகழ் பெற்ற பதவர்ணா ஆதிதாளத்தில், ஸ்ரீரஞ்சனி ராகத்தில் முருகன் மீதான காதலை அவள் வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

"ஸ்வாமி நான் உந்தன் அடிமை என்று உலகமெல்லாம் அறியுமே தாமதம் செய்யாது வந்தருள் மாதோர்பங்க புதிவே

இங்கு நாயகியானவள் பரிதாபமாக அவரைப் பார்த்துக் கேட்கிறாள் '' நீ ஏன் இன்னும் வரவில்லை? உன் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. உடனே நீ கிளம்பி என்னிடம் வா '' . அவருக்கு தன் மீது என்ன கோபம் இருந்தாலும், அதை தள்ளி வைத்து விட்டு தன்னுடன் மகிழ்ச்சியாக இருக்க உடனே கிளம்பி வரவேண்டும்''. ''தயவு செய்து என்னிடம் வா, வந்து என் துயரத்தை தீர்த்து வைப்பாய்'' என்று முருகனின் அருளை அவள் வேண்டுகிறாள். இந்தக் கருத்தை அற்புதமாக வெளிப்படுத்துவதே யங்கி-நாயகி பாத்திரங்கள் . பதவர்ணாவை இயற்றியவர் மேலும் பல நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறார்.

கீர்த்தனைகள்

பக்தி ஒன்பது வகைப்படும். அதில் கடவுளை போற்றிப் பாடுவதே கீர்த்தனைகள் என்பது. கீர்த்தனையிலும் பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணங்கள் போன்ற நிலைகள் உள்ளன. கீர்த்தனை என்ற பெயர் தோன்றுவதற்கு முன்னரே இந்த நிலைகள் அனைத்தும் தேவபாணி, தேவாரம், திருப்புகழ் மற்றும் கீர்த்தி திரு அகவல் போன்ற இசைப் பாடல்களில் பாடப்பட்டு உள்ளன.

இறைவனின் கருணையை வேண்டி அல்லது அவரைப் போற்றிப் பாடப்படும் சாஹித்யா எனப்படும் இசைப் பாடல்கள் புனிதமானவை . சில சமயங்களில் அது புராணக் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். பல கீர்த்தனைகள் தத்துவ ஞான வாதங்களை இயல்பாக வெளிப்படுத்துபவையாக இருக்கும். கீர்த்தனைகளின் பாடல்களும் அவற்றின் வர்ணனைகளும் எளிமையானவை. அவை இசைக்கப்படும் இசைக்கு ஏற்ற வகையில் அமைந்து இருக்கும். கடவுளைப் போற்றி பாடப்படுபவற்றை இசை மூலம் வெளிப்படுத்த வேண்டி உள்ளதினால் அவற்றை வெளிப்படுத்தும் இசை என்பது அதற்கான ஒரு மாத்யமே . சூளுரை வார்த்தைகளையும் இசையாகவே வெளிப்படுத்தும் இசை எளிமையானவை. கீர்த்தனைகளின் நோக்கமே பக்தி சாரத்தை வெளிப்படுத்துவதும், உண்மையான பக்தியின் உள் உணர்வை வெளிப்படுத்துவதுமே.

16 ஆம் நூற்றாண்டுகளிலேயே முருகனைப் போற்றிப் பாடும் கீர்த்தனைகளை இயற்றியவர்களில் முக்கியமானவர்கள் கோடீஸ்வர ஐயர், பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன், முத்துச்வாமி தீக்ஷதர் மற்றும் கவி குஞ்சரபாரதி போன்றவர்கள். 20 ஆம் நூற்றாண்டில் கோட்டீஸ்வர ஐயர் என்பவர் குமார அல்லது முருக மரபைத் தழுவி பல கீர்த்தனைகளை இயற்றி உள்ளார். முருகன் மீது அவர் 72 மேளகர்த்தா ராக கீர்த்தனைகளை இயற்றி உள்ளார். இரண்டு பாகங்களாக உள்ள அவை கந்தகானமுதம் எனும் முருக கீர்த்தனைகள். இதில் அவர் முருகனின் அழகை விவரித்தும், அவருடைய அருளைப் பெற அவரை எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டி உள்ளார். முருகனைத் தவிர அவர் சிவன், பார்வதி, நந்தி, பதஞ்சலி முனிவர், சம்மந்தர், நக்கீரர், அருணகிரி போன்றவர்களையும் அதில் சேர்த்து இயற்றி உள்ளார்

"அம்பிகை அரணும் செந்திருமருளும் அங்கலைவாணி அம்புயனும்
தும்புரு நாரதரும் நந்தி தேவரும் துதி பதஞ்சலி புலிமுனியனும்
கும்ப மாமுனி சம்மந்தர் நக்கீரர் குரக்குனையன்கிரி முதலும்
இன்பநாள் அடியார் அனைவரும் கந்தன் இசையிதாற்குரிய கப்பினரே

அவர் இசையின் முமூர்த்திகளைப் போன்ற, பாடல்களின் மூன்று பிரிவுகளையும் உபோயோகித்து பாடல்களை இயற்றினார். தனது குலதெய்வம் மற்றும் மூதாதையரான கவி குஞ்சரதாசரின் பெயரையும் முத்ராவாக இணைத்துக் கொண்டு ராகா முத்ரா ராகங்களையும் சேர்த்தார். அவற்றின் மூலம் அவர் தத்துவ ஞானம் சார்ந்த எண்ணங்களையும், தியானிப்பதின் வழிமுறைகளையும் எடுத்துக் கூறி உள்ளார். உதாரணங்கள்:

''கந்த கணமுத்தப்பனாம் ஜ்யோதிஸ்வரூபிணி - ஆதி அருள் செய்ய வேணும் - ராக்கியப்ரிய -ஆதி

முருகனைக் குறித்து பாடல்களை இயற்றி உள்ள மற்றவர்கள் பாபனாசம் சிவன் மற்றும் பெரியசாமி தூரன் போன்றவர்கள். பாபநாசம் சிவன் தனது பாடல்கள் மூலம் மக்களைக் கவர்ந்தார். அவருடைய கீர்த்தனைகள் முழுவதுமே பக்தியால் நிறைந்து யதி மற்றும் ப்ரஸ்தரா போன்றவையும் சேர்க்கப்பட்டு இருந்தன. அவர் ஒவ்வொரு இடமாகச் சென்று ஹரிகதா மற்றும் பஜனைகளை செய்து வந்தார். அவருடைய பாடல்கள் கரகரப்பிரியா, தோடி மற்றும் ஷண்முகப் ப்ரியா போன்ற ஜனரங்க ராகங்களில் தத்துவ ஞானம் சார்ந்த அர்த்தங்களுடன் அமைந்து இருந்தன. அவர் பக்தியின் ஒன்பது வழிமுறைகளையும் உட்கொண்டிருந்த ராக ஷண்முகப் ப்ரியாவில் இருபது பாடல்களை இயற்றி உள்ளார்.

உதாரணங்கள்:
சரவணபவா எனும் -ஷண்முகப்ரியா- ஆதி
விளையாட இது நேரமா -ஷண்முகப்ரியா - ஆதி
பார்வதி நாயகனே -ஷண்முகப்ரியா -ஆதி

கரகரப்பிரியா ராகத்தில் செந்திலாண்டவன், தோடி ராகத்தில் கார்த்திகேய காங்கேயா, வாலாஜி ராகத்தில் குவியலாட்டல், ஜோன்பூரி ராகத்தில் முருகனை பஜே மனமே போன்றவை அவர் இயற்றிய மற்ற பிரபலமான பாடல்கள். இந்தப் பாடல்களில் பாடலாசிரியர் கூறுவது என்ன என்றால் எப்போதுமே முருகனை துதித்துக் கொண்டு இருந்தால் முடிவாக நமக்கு முக்தி கிடைக்கும் என்பதே.

பெரியசாமி தூரன் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். அவர் இசை மணி மஞ்சரி, தமிழிசைப்பாடல்,கீர்த்தனை அமுதம், நவமணி இசை மாலை அருள்மணி மாலை போன்றவற்றை இசையாக இயற்றி உள்ளார். அவை அனைத்துமே முழுமையான பக்திப் பாடல்கள் ஆகும்.

"இறைவனை நோக்கி நடக்கும் முயற்சியில் எழுந்தவை என்னுடைய கீர்த்தனைகள்'' என்றார் பெரியஸ்வாமி தூரன்3 . முருகனைத் தவிர அவர் சிவன், பார்வதி மற்றும் கண்ணனைப் பற்றியும் பாடல்களை இயற்றி உள்ளார்."

உதாரணங்கள்: முருகன் முருகன் - காவேரி வேலும் மயிலும் - சாருகேசி கலியுகவரதன் - பிருந்தாவன சாரங்க - ஆதி வேலவனை நினையேன் - ராமப்ரிய - ஜம்போ முருகன் துணை - புர்விகல்யாணி - ஆதி முருகனே - பிலஹரி சரவண பொய்கையிலே - ராகமாலிக – ஆதி

மேலே உள்ள அனைத்துமே தூரனின் ஜனரங்கமான பாடல்கள் . அவர் இந்து சமயத்தின் அனைத்து கடவுட்களையும் வழிபட்டாலும், அவர் இதயபூர்வமான முருக பக்தர் ஆவார். பழனி முருகன் மீது பல பாடல்களை இயற்றி உள்ளார். அவர் கூறினார் ' மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் எனக்குப் பிடித்த ஒரு உருவமே, முருகனின் உருவம்'4. இசை மூலம் முருகனை துதித்த பல பாடகர்களும் இசைக் கலைஞர்களும் உள்ளனர். இன்று தமிழ் பாடகர்கள் முருகன் மீதான கீர்த்தனைகளை இயற்றுகிறார்கள்.

தில்லானா

தில்லானா என்பது சாதாரணமாக கீழ்கண்ட ஜடி எனப்படும் வார்த்தைகள் மூலமே துவங்குகின்றது:

"தீம் த தீம்த தீம்த
தீம்த தன திரனா - தன "

இது மிக அற்புதமான இசை உருவமாகும். தில்லானாக்கள் பெரும்பாலும் கடவுளை துதிக்கும் விதத்திலேயே அமைந்து இருக்கும். அவை பெரும்பாலும் பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் போன்றவற்றைக் கொண்டு அமைந்து இருக்கும். தில்லானாக்களில் நான்கு வரி சாஹித்தமும் ஒரே ஒரு சரணம் மட்டுமே இருக்கும். அந்த சரண சாஹித்யங்கள் மூலம் அந்தப் பாடலின் மொழி மற்றும் துதிக்கப்படும் தெய்வத்தைப் புரிந்து கொள்ள முடியும். இன்னும் பல பாடகர்களும் முருகனைத் துதிக்கும் தில்லானாக்களை இயற்றி உள்ளார்கள். ஆதி தாளத்தில், ரேவதி ராகத்தில் முருகனைப் போற்றிப் பாடப்படும் ஜெயராமனின் ''தீம் தீம்'' என்ற தில்லானா பிரபலமானது. இந்த வரிகள் மூலம் முருகன் மீதான அன்பை அவர் வெளிப்படுத்துகிறார்.

"கோல முருகனைக்காண எண்ணிக்
கால மெல்லாம் காத்திருந்தேன்
வேலனோ எனை ஏனோ மறந்திருந்தான்
ஜாலமோ என் காலமோ அறியேன்"

இன்னொரு தில்லானாவான ஆதி தாளத்தில் இந்த்ரவன சாரங்க ராகாவில் இசைக்கப்படும் "தீம்த தீம்த " எனும் தில்லானா மூலம் முருகனிடம் தனது கனவுகளை பலிக்க வைக்குமாறு வேண்டுகிறார். அது மட்டும் அல்ல அந்த ஆசிரியர் மேலும் வேண்டுகிறார் ' உன்னைப் போல வேறு யாரையும் எனக்குத் தெரியாது , ஆகவே முருகா, நீயே எனக்கு அருள் புரிய வேண்டும்."

நான் வேண்டும் வரந்தந்து அருள்வாய் நீ மால்மருகா உன்னை இன்றி ஒருதுணையும் அறியேனையா உனைக்காண ஓடோடி வந்தேனே வேல்முருகா எனையாள வருவாய் நீ குமார குஹா

மேலே உள்ளவற்றில் இருந்து நமக்குத் தெரிவது என்ன என்றால் தில்லானா என்ற இசை மூலமும் முருகன் மீது அன்பைக் காட்டி , அவரை வழிபட முடியும் என்பதே.

காவடி சிந்து

கீழுள்ள பாடல் காவடி சிந்துவில் உள்ளது. 5

"தீராத பிணியகற்றும் கந்தா- உன்
சிந்து தனை என்ன சொல்வேன் வேண்ட அந்த
தென்பொதிகை முனிவருக்கு அன்புடனே உபசரித்த
திருவே வேத கருவே."

நமது எண்ணங்கள் வெற்றி அடைய முருகனை வேண்டிக் கொண்டு செய்யப்படும் ஒரு சடங்கு முறையே காவடி எடுத்தல் என்பதும். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அண்ணாமலை ரெட்டியார் என்பவர் காவடியை தோளில் தூக்கிக் கொண்டு போகும்போது பாடும் துதிப்பாடலாக இதை இயற்றி உள்ளார். காவடி சிந்து என்பது முருக ஆலயங்களின் அழகை வெளிப்படுத்துவது. இதில் ஆறுபடைவீடுகளின் அழகுகள் காட்டப்படுகின்றன. காவடி சிந்துவை யங்கி நாயகி பாவத்திலும் இயற்றி உள்ளார்.

முடிவுரை

இசை மூலமான முருக பக்தி கிராமிய இசைகளில் துவங்கி, தேவாரம், திருப்புகழ் போன்றவற்றின் மூலம் வளர்ந்து, பதவர்ணம், வர்ணம், கீர்த்தனை,தில்லானா போன்ற நிலையை எட்டி உள்ளன. இந்த வகையிலான இசை நிகழ்ச்சிகளுக்காக பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் மற்றும் கோடீஸ்வர ஐயர் போன்றவர்கள் பல கீர்த்தனைகளை இயற்றி உள்ளார்கள். அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்துவை இயற்றி உள்ளார். இவர்கள் அனைவரும் முருக வழிபாட்டை இசைகள் மூலம் பரப்பி உள்ளனர் என்றாலும் அவர்களது இசை வழி முறைகள் தனித் தனியானவை.

முருகன் பாடல்கள் - கீர்த்தனைகள்

 1. கோடீஸ்வர ஐயர் கந்தகானாம்ருதம் -பாடல்கள்-72 ராகங்கள்
 2. பெரியசாமி தூரன் முருகன் அருள் மணிமாலை - புத்தகம்
 3. பாபநாசம் சிவன்
  1. தணிகை வேலர் -தோடி- கண்ட சாபு
  2. ஜெயா ஜெயா குஹா - சுத்த தன்யாசி - ஆதி
  3. முருகன் முழுமதி - சவேரி - ஆதி
  4. உலக வாழ்விலும் - அதனா - ஆதி
  5. பழனியப்பனின் படம் - சிம்மேந்திர மத்யமம் - ஆதி
  6. மால்மருகா - வசந்தா - ஆதி
  7. வடலூர்வாழ் முருகன் - தேவமனோஹரி - ஆதி
  8. சரவணபவ குகனே - கானடா - ஆதி
  9. சரவணபவ என்னும் - ஷண்முகப்பிரியா - ஆதி
  10. மதியை நிதியேனும் - வசந்தா - ஆதி
  11. சித்தம் இறங்காதேனைய்யா - சஹானா - மிஸ்ர சாபு
  12. ஸ்ரீ வள்ளி தேவசேனாபதி - நடபைரவி - ஆதி (சமஸ்கிருதம்)
  13. கந்தா வந்தருள் - அபேரி - ஆதி
  14. கதிர்காம கந்தன் - கம்போடி - திஸ்ரற்றிபுட
  15. நெக்குருகி உனை - அப்ஹோகி - ஆதி
  16. சோதனை - காப்பி - ஆதி
  17. முருகனை பஜே மனமே - ஜோன்புரி - ஆதி
  18. செந்தில் வேலர் - கமாஸ் - ஆதி
  19. கொஞ்சம் - சங்கராபரணம் - மிஸ்ர சாபு
  20. அடித்தாலும் - நடை -ஆதி
  21. ஆறுமுக - சுத்த சவேரி - ஆதி
  22. உள்ளமிறங்கி - ஹம்சவாணி - ஆதி
  23. உன்பதம் - ரிடிகுல - ஆதி
  24. செந்திலாண்டவன் - கரஹரப்பிரியா - ரூபகம்
  25. தண்டபாணி - மணிரங்கு - ஆதி
  26. தந்தை தாய் - தேவமனோஹரி
  27. மயில் வாகனனே - கல்யாணி- ஆதி
  28. பரிபாலனை - ஹெமவடி - ஆதி
  29. மயில் வாகனனே - கல்யாணி - ஆதி
  30. வந்தருள்வாய் - பண்டுவரலி - ஆதி
  31. வள்ளிகண்ட - சிம்ஹேந்திரமத்யமம் - ஆதி
  32. கூவி அழைக்கக் கொட்ட - சிந்துபைரவி - ஆதி
  33. தாமதமேன் - தோடி - ஆதி
  34. மலை சுத்துவேன் - ராகமாலிக - ஆதி

காவடி சிந்து

 1. பெரியசாமி தூரன் : அழகு தெய்வமாக வந்து -ஆதி
 2. அண்ணாமலை ரெட்டியார்
  1. சீர்வாளர் பசுன்தோதை - நடனமக்கிரியா - காப்பு
  2. தெல்லுட்டமலிக்கு - காப்பி - ஆதி
  3. சென்னிகுலனகர்வாசன் - க்ஹமாஸ் - ரூபகம்
  4. பொன்னுலவு - காப்பி - காப்பு
  5. புல்லிகலபா - ஆனந்த பைரவி- அத
  6. மர்கட விகசிட - பெஹாஹ் - ஆதி
  7. பாவனா கிரியடனுல் - ஆனந்த பைரவி- காப்பு
  8. செந்தில் மாநகர் - கானடா - ரூபகம்
  9. பாதி ராத்திரி - பைரவி - அட
  10. நேமமைப்பணி - சவேரி - அட
  11. ஆறுமுக வடிவேலனே - தேசிக தோடி - ரூபகம்
  12. கண்ணாயிரம் - ஆனந்த பைரவி- ஆதி
  13. பூமி மெச்சிடும் - தேசிக முக்ஹாரி - அட
  14. கந்த வாரை -கல்யாணி- காப்பு
  15. வண்ணத்தினை மாவை - பைரவி - ஆதி
  16. செந்தில் மானகர் - பைரவி - ஆதி
  17. கண்ணை சுல்பலனம்
  18. செந்தூர் வேலன் முருகன்
  19. பாளைவாய் காமுகில்
  20. என்னடி நான் பெற்றிர
  21. மன்சூனிகர்
  22. அங்கத்தில் பசப்பாஸீ
  23. கண்டம் சேர்தாறு

End Notes

 1. Sambamoorthy, P., South Indian Music, Book III, (Madras: Indian Music Publishing House)
 2. Kanta Kānāmutam, Vol. I Madras, 1932.
 3. Periyasami Tooran, Murukan Arul Mani Mālai, (Madras: Tamilicai Sanga edition).
 4. ibid.
 5. Kāvati Cintu, (Madras: Aintinai Padippakam).

Dr. (Mrs) N. Jayavidhya,
M.A., M.Phil, Ph.D., D.A. (Astro)
Music Department,
Tamil University,
Tanjore - 5, Tamil Nadu, India

Index of research articles on Skanda-Murukan