Lord Skanda-Murugan
 

மெல்போர்னில் முருக வழிபாடு

சிவசுப்ரமணியன் சத்சபேசன்

original article in English: "Murukan Worship in Melbourne"

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

முன்னுரை

குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள
சிவ - விஷ்ணு ஆலயத்தில் சூரா சம்ஹார விழா
குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள சிவ - விஷ்ணு ஆலயத்தில் சூரா சம்ஹார விழா
குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள
சிவ - விஷ்ணு ஆலயத்தில் தீர்த்த விழா
குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள சிவ - விஷ்ணு ஆலயத்தில் தீர்த்த விழா

உலகை சுற்றுவது தமிழர்களுக்கு இயல்பான ஒன்று ; கடல் வழிப்பயணத்தை தொன்று தொட்டு மேற்கொண்டு உள்ளார்கள் அவர்கள். பல இடங்களிலும் ஐரோப்பிய குடியேற்றம் துவங்கியப் பிறகு அல்லது அவர்களின் குடியேற்றத்தின் விளைவாக தமிழர்கள் இருந்தப் பகுதிகளில் பல மாற்றங்கள் உண்டாயிற்று. அரசியல், பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தினால் வேறு வழி இன்றி தமது பாராம்பரிய இடங்களை விட்டு வெளி இடங்களுக்குச் சென்று தமது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டார்கள்.

அழகு, சிறப்பு , இளமை போன்றவற்றை தவிர வேறு பல குணங்களையும் எடுத்துக் காட்டும் முருகன், நல்ல செயல்களைக் குறிக்கின்றார். இந்து மதத்தின் பல பிரிவுகளைப் போலவே முருக பக்தியும் உலகின் பல இடங்களிலும் மாறிக் கொண்டே உள்ளது. முருக பக்தி மார்கத்தில், பொதுக் கருத்துக் கொண்ட நுட்பமான பல வித உணர்ச்சி மிக்க கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் உள்ளன. அப்படியிருந்தாலும் அவை அனைத்தும் சமுதாயத்தில் பலப் பிரிவு மக்களையும் அந்த மார்கத்தில் பங்கு கொள்ள வைக்கின்றது. முருகன் கால சக்கரத்தை பிரதிபலிப்பவர், அவரே படைப்பவர், அழிப்பவர், இரவும் பகலுமானவர் மற்றும் இறப்பையும் படைப்பையும் தருபவர்.

முருக வழிபாடு என்பது பறந்து விரிந்தது. ஆகவே இந்தக் கட்டுரை அனைத்தை தன்மைகளையும் உள்ளடக்கியது அல்ல என்றாலும், இந்த ஆராய்ச்சியை மேலும் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்து இருக்கும்.

பின்னணி

ஆஸ்திரேலியாவில் பல்வேறு இனப்பிரிவுகள் உள்ளனர் என்பதினால் அங்குள்ள ஒவ்வொரு பிரிவினரின் நம்பிக்கைகள், பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் என அனைத்துமே மதிக்கப்படுகின்றன. மெல்போர்ன் என்பது ஆஸ்திரேலியாவின் தலை நகர். 1996 ஆம் ஆண்டு கணக்கின்படி அங்கு 6251 தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் சிட்னி மாகாணத்தில் அதை விட பெருமளவில் இருந்த தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 9072 ஆகும்.

ஆஸ்திரேலியாவில் இருந்த மொத்த தமிழர்களின் எண்ணிக்கை 18690 ஆகும். தற்போதைய செய்தியின்படி அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை 30000 க்கு மேல் உயர்ந்து உள்ளது என்றும், அது பெருகிக் கொண்டே உள்ளது என்றும் கூறுகிறார்கள். 1996 ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 76 தமிழர்களே இருந்த தாஸ்மேனியா மாகாணத்தைத் தவிர ஆஸ்திரேலியாவின் அனைத்து மாகாணங்களிலும் சைவ ஆலயங்கள் இருந்தன.

ஆஸ்திரேலியாவில் சிலோன், இந்தியா, மலைஷியா, சிங்கப்பூர், மௌருஷியஸ் மற்றும் பிஜி தீவு போன்ற நாடுகளை சேர்ந்த தமிழர்களே முருக வழிபாட்டைக் கொண்டு உள்ளார்கள். அங்குள்ள வெள்ளையர்களின் வரலாறு 200 ஆண்டுகளைக் கொண்டது என்றாலும் தமிழர்களின் வரலாறு 25 ஆண்டுகளைக் கூட கொண்டது அல்ல. முருகனை திராவிடர் அல்லது தமிழ் கடவுள் என்று கூறினாலும், அங்குள்ள பழங்குடி மக்கள் தொடர்ந்து கொண்டிருந்த பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவை திராவிடர்களிடம் இருந்து மாறுபட்டுள்ளது என்று கூறினாலும் அது நன்கு ஆராயப்பட வேண்டும். ஆகவே 1970 ஆண்டுகளில் அங்கு இடம் பெயர்ந்து வந்த தமிழ் மொழி பேசும் இனத்தினர் மூலமே முருக வழிபாடு துவங்கி இருக்க வேண்டும்.

1980 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 3,000 முதல் 3,500 வரை இருக்கலாம். ஆகவே பெரும் அளவிலான தமிழர்கள் அங்கு வந்து குடியேறத் துவங்கியதற்குப் பிறகே சமய வழிபாட்டு முறை துவங்கி உள்ளது. அவர்களால் கூட்டு வழிபாட்டு முறை துவக்கப்பட்டு அதற்குப் பிறகு ஆலயங்கள் கட்டப்படத் துவங்கின. முருகனின் ஆலயங்கள் மெல்போர்னில் உள்ள விக்டோரியா, சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், பெர்த் மற்றும் கான்பெர்ரா போன்ற இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆலயங்கள்

முன்னுரை

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள பல்வேறு இந்து பிரிவினருக்கும் இணைப்புப் பாலம் போல உள்ளது ஆலயங்கள். அங்கு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆலயங்கள் முருக வழிபாடுகளுக்காக மட்டும் அமைக்கப்படவில்லை, ஆனால் அது அனைத்து சைவ மதத்தினரையும் ஒன்றிணைக்கும் வகையில் இருந்தன. அந் நாட்டு சமூக மற்றும் சுற்று சூழ்நிலை கட்டுப்பாட்டு விதி முறைகளை மீறாமல், ஆகம முறையில் மெல்போர்னில் மூன்று ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அங்குள்ள முருகனின் ஆலயத்தில் தனது மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகன் காணப்படுகிறார். மற்ற இரண்டு ஆலயங்கள், குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள சிவ - விஷ்ணு ஆலயம் மற்றும், பேசின் எனுமிடத்தில் உள்ள ஸ்ரீ வக்கிர துண்ட வினாயகரின் ஆலயம் ஆகும். 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த வினாயகரின் ஆலயம் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கொண்ட இடத்தில், நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேசின் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த வினாயகரின் ஆலயத்திலும் தனித் தனி சன்னதிகளில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் உள்ள முருகன், துர்க்கை, அபிராமி, நவக்கிரகம் போன்றவைகள் உள்ளன. மெல்போர்ன் வினாயகர் இந்து சங்கம் இதை இன்னும் விரிவு படுத்த எண்ணி உள்ளது. இந்த ஆலயம் செய்தி மடல் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. ஆங்கிலம் மற்றும் தமிழில் வாரம் இரண்டு மணி நேரம் ரேடியோ அலைவரிசை மூலம் பல நிகழ்ச்சிகளை நடத்தியவாறும், இந்து மதத்தைப் பற்றி அனைவரும் கற்றறிந்திடும் வகையில் இருக்குமாறும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றது.

குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள
சிவ - விஷ்ணு ஆலய தோற்றம்
குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள சிவ - விஷ்ணு ஆலய தோற்றம்

சிவா விஷ்ணு ஆலயம்

குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில், 1994 ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள சிவ - விஷ்ணு ஆலயம் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கடல் பகுதியின் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயம் இந்துக்களின் இரண்டு பெரிய பிரிவுகளான சைவம் மற்றும் வைஷ்ணவத்தை இணைத்து கட்டப்பட்டு உள்ளது. அந்த இரண்டு ஆலயங்களும் ஒரே கூரையின் கீழ் அமைந்துள்ளன. ஒரே கீழ் அமைந்துள்ள அந்த இரண்டு ஆலயங்களுக்கும் இடையில், அவை இரண்டும் பிரியும் வெற்று இடத்தில், இரண்டையும் இணைக்கும் வகையில் ஒரு ஐயப்பன் ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த இரண்டு ஆலயங்களையும் பிரதர்ஷனம் செய்ய வசதியாக பெரிய அளவிலான பிராகாரப் பாதை உள்ளது. தனித் தனி கோபுரங்களைக் கொண்ட அந்த இரண்டு ஆலயங்களில் உள்ள கோபுரத்தில் இந்துப் புராணக் காட்சிகள் பலவும், எப்போதும் தெய்வ சிந்தனையோடு உள்ளவர்களை கவரும் வண்ணம், சிலை வடிவங்களில் அமைக்கபட்டு உள்ளன. அதில் காணப்படும் சிற்பங்கள் எல்லையற்ற அழகைக் கொண்ட கடவுட்களை அற்புதமான கற்களிலும், உலோகங்களிலும் வடிவமைத்து உள்ளார்கள். அந்த சிற்பக் கலைவண்ணம் சிற்பக் எல்லையற்ற அழகைக் கொண்டு உள்ளது.

இந்த ஆலயங்களே தென் பகுதியின் அரைகோணத்தில் உள்ள மிகப் பெரிய ஆலயம் என்பது மட்டும் அல்ல , சுமார் 1500 சதுர மீட்டர் நிலப்பரப்பில், ஒரே கூரையின் கீழ், 39 தெய்வங்களை உள்ளடக்கிய சன்னதிகளைக் கொண்டது. விக்டோரியாவின் இந்து சமூக அமைப்பு அதை நிர்வாகித்து வருகின்றது . ஒதுக்குப்புறமாக உள்ள இந்த ஆலயத்தை சுற்றி நிறைய வெற்றிடங்கள் உள்ளன. அந்த இடத்தை பின் வரும் காலத்தில் சமய காலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தும்வண்ணம் விரிவாக்க எண்ணி உள்ளார்கள். இந்த ஆலயத்தின் செய்தி மடலும் வெளியிடப்படுகின்றது.

மெல்போர்ன் முருகன் ஆலயம்

மெல்போர்னின் மேற்குப் பகுதியில் சன்ஷைன் எனும் இடத்தில் உள்ளது முருகனின் ஆலயம். முருகன் மீதான பக்தியில் அவருக்கு இங்கு ஒரு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்று எண்ணிய முருக பக்தர்களின் முயற்சியினால் எழுந்ததே இந்த ஆலயம். இங்கொரு ஆலயம் அமைக்க வேண்டும் என்று 1995 ஆம் ஆண்டு திட்டமிட்டு துவக்கப்பட்ட ஆலயப் பணி, 1995 ஆம் ஆண்டு அந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. தற்போது ஒரு கூடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வள்ளி - தெய்வானையுடன் கூடிய முருகன் மற்றும் வினாயகரின் சிலைகளுக்கு அங்குள்ள பண்டிதர் தினப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்களை செய்து வருகிறார்.

அங்கு நவக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. மெல்போர்னை சேர்ந்த மெல்போர்ன் முருக கலாச்சார மையம் அதை நிர்வாகித்து வருகின்றது மட்டும் அல்ல கூடிய விரைவில் பாராம்பரிய முறையில் ஆலய நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆலயமாக உருமாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலயத்துக்கு தொலைதூர இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள
சிவ - விஷ்ணு ஆலயத்தில் தீர்த்த  விழா
- இன்னொரு காட்சி
குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள சிவ - விஷ்ணு ஆலயத்தில் தீர்த்த விழா - இன்னொரு காட்சி
குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள
சிவ - விஷ்ணு ஆலயத்தில் சூரா சம்ஹார
விழாவில் சூரபத்மன்
குர்ரம் டவுன்ஸ் எனும் இடத்தில் உள்ள சிவ - விஷ்ணு ஆலயத்தில் சூரா சம்ஹார விழாவில் சூரபத்மன்

ஆலயப் பண்டிகைகள்

முருகனை சூரியன், சந்திரன் மற்றும் மழையுடன் ஒப்பிடுகிறார்கள். அவரே மழையை தக்க சமயத்தில் பொழிய வைத்து, மரங்கள் செழிப்பாக வளர வழி வகுக்கின்றார். பரிபாடல் என்பது மழையைத் தொடர்ந்து வரும் வெள்ளம் பூமியுடன் ஒன்று சேருவதைப் போல முருகன் தனது பெரும் படையுடனும், யானைகளுடனும் வருவதைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளப் பாடலாகும். கிழக்கத்திய சமயங்கள் அம்மாவாசையில் இருந்து பௌர்ணமி வரை உள்ள காலத்தில் தோன்றும் மூன்று கட்டங்கள் மிகவும் முக்கியமானவை என்று கருதுகிறார்கள். பௌர்ணமியில் வரும் முதலாம் திதி முருகனின் பிறப்பைக் குறிக்குமாம், அடுத்த திதி சஷ்டியையும், மூன்றாவது திதி பௌர்ணமியையும் குறிக்குமாம்.

ஆகவே பௌர்ணமி என்பது அகண்டத்தின் உச்சி நிலை, அதாவது கடவுளின் பூரணத்துவத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியாகக் கருதுகிறார்கள். இந்த ஆலயத்தில் நம்முடைய வருடாந்தர காலக் கோளில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து முக்கியமான சமய நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது மட்டும் அல்ல, மாதாந்திர கார்த்திகை, சஷ்டி போன்றவற்றையும், வருடாந்தர கந்தர் ஷஷ்டி, வைகாசி விசாகாம், தைபூசம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ பண்டிகைகளையும் இந்த ஆலயத்தில் கொண்டாடுகிறார்கள்.

அபிஷேகம் செய்வது, ஆலய பிராகாரத்தில் ஊர்வலமாக தெய்வங்களை எடுத்துச் செல்வது போன்று ஒவ்வொரு ஆலயங்களிலும் வேறுபாடான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் மெல்போர்னில் உள்ள ஆலயத்தில் உள்ளூர் நிலைமையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கார்த்திகை

ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினம் கந்தன் என்ற கார்திகேயரின் பிறந்த நாளுக்கு சமமான நாளாக கருதப்பட்டு அவர் எடுத்து வளர்க்கப்பட்டு படைத்தலைவராக ஆனதைக் குறிக்கும் வண்ணம் புனிதமாக கொண்டாடப்படுகிறது.

அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகளை நடத்தி முடித்தப் பின் அந்த ஆலய மூர்த்தியின் வெண்கலத்திலான உற்சவ மூர்த்தியை ஆலயத்திற்குள்ளேயே உள்ள பிராகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், கார்த்திகை தினத்தை மூன்று ஆலயங்களிலும் விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். முக்கியமாக கார்த்திகை மாத நட்சத்திரம் வரும் தினத்தை திருக்கார்த்திகை என்ற பெயரில் கொண்டாடி அன்று விசேஷ பூஜைகளை செய்கிறார்கள். அந்த புனித நாளைக் கொண்டாடும் விதத்தில் வீடுகளின் வாயிலிலும், ஆலயத்திலும் விளக்குகளையும் ஏற்றுகிறார்கள்.

கந்த ஷஷ்டி

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும் பௌர்ணமியின் ஆறாவது நாள் கந்த ஷஷ்டியாகக் கொண்டாடப்படுகின்றது. அது அசுரர்களை அழித்த நாளாக கொண்டாடப்படுகின்றது.

சிங்கமுகன், சூரபத்மன் மற்றும் தாரகாசூரன் போன்றவர்களுடன் ஆறு நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் முருகன் அவர்களை ஆறாவது நாள் அன்று அழித்தார். அந்த நிகழ்ச்சிகளை நாடகமாகவும் போட்டு மகிழ்கிறார்கள். அந்த யுத்தத்தில் அசுரர்கள் கொல்லப்பட்டு தேவர்கள் விடுதலை அடைகிறார்கள்.

அதை சூரசம்ஹாரம் என்கிறார்கள். ஆகவே இந்த பண்டிகையை மெல்போர்னில் உள்ள மூன்று ஆலயங்களிலும் முக்கியமானப் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

கந்த ஷஷ்டியின்போது போது தினப் பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. ஆறாவது நாளன்று சூரசம்ஹாரத்தைக் குறிக்கும் வகையில் பெரிய அளவில் அதைக் கொண்டாடுகிறார்கள். சிவ-விஷ்ணு ஆலயம் மற்றும் வக்ரதுண்ட வினாயகர் ஆலயங்களில் அந்த நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் பெரிய காட்சிகள் உள்ளன. அசுரன் பல முகங்களை மாற்றி மாற்றிக் கொண்டவனைப் போல காட்டப்பட்டு விழா நடைபெறுகின்றது.

அந்த அசுரர்களைக் கொன்ற ஆறு நாட்களிலும் பக்தர்கள் விரதங்கள் பூண்டு, முருகன் மீதான பஜனை பாடல்களைப் பாடியவாறும், பிராத்தனைகளை தொடர்ந்து கொண்டும் உள்ளனர். அந்த ஆறு நாட்களிலும் ஒரே வேளை மட்டுமே பால் அல்லது பழங்களை மட்டுமே உண்டவண்ணம் விரதம் இருந்தப் பின் ஏழாம் நாளன்று சூரிய உதயத்திற்கு முன்னால் விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

வைகாசி விசாகம்: வைகாசி மாததன்று வைகாசி நட்சத்திரம் தோன்றும் நாளன்று அனைத்துக் கடவுளுக்கும் உயர்ந்தவரான முருகனின் பிறப்பை எடுத்துக் காட்டும் நாளாக கொண்டாடி பூஜைகள் மற்றும் அபிஷேகங்களை செய்கிறார்கள்.

தைபூசம்: தைமாதம் வரும் பூச நட்சத்திர தினத்தன்று தைபூச விழா எடுக்கின்றார்கள். அன்றுதான் அசுரர்களின் தலைவனான சூரபத்மனைக் கொல்வதற்காக முருகனுடையத் தாயாரான பார்வதி அவருக்கு வேல் ஒன்றைக் கொடுத்தாராம். அன்று பால் குடம் ஏந்தியும், காவடி எடுத்தும் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைபூச விழாவில் காவடி எடுப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. மனித உடலை சுமப்பது போல காட்டப்படும் அது தோளின் மீது வைத்தபடி செல்லும் நீண்ட கட்டை ஆகும். அதன் இரு முனைகளிலும் கட்டப்பட்டு உள்ள துணியில் குடங்களை வைத்து தோளில் சுமந்தபடி செல்வார்கள். அந்தக் கட்டை எலும்புகளைக் குறிக்க, அதை சுற்றி உள்ள துணி மூட்டை மனித உடலின் தோலைக் குறிக்க, துணி மூட்டையை கட்டி தொங்க விடப்பட்டு உள்ள கயிறு நரம்புகளையும், அந்த துணி மூட்டைக்குள் வைக்கப்பட்டு உள்ள பால் குடத்தில் உள்ள பாலானது ரத்தத்தையும் குறிக்கின்றது. ஆகவே காவடி எடுப்பது என்பது ஒருவர் தன்னையே முருகனின் காலடியில் சமர்ப்பிப்பதைக் குறிக்கின்றது.

காவடி எடுத்து முடிந்ததும் முருகனின் சன்னதியில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. அத்தனைக் கடினமான யாத்திரையை மேற்கொண்ட பக்தர்கள் முருகப் பெருமானுக்கு தாம் சுமந்து வந்த பாலினால் அபிஷேகம் செய்ய விரும்புவார்கள். சிங்கப்பூர், மலேஷியா, மௌருஷியஸ், சிசெல்லிஸ் போன்ற இடங்களில் காவடிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை மெல்போர்னில் உள்ள ஆலயங்கள் கொடுப்பது இல்லை என்றாலும் அது முக்கியமான பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரம்:  மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வரும் பண்டிகையான பங்குனி உத்திரம் என்பது முருகனின் திருமணத்தைக் குறிக்கும் நாளாகும். அவருடைய திருமணம் மற்றும் அதன் தாத்பர்யம் குறித்த ஆராய்ச்சிகள் முழுமையாக முடிவடையவில்லை. தெய்வானை மற்றும் வள்ளியின் காதல் இருவகையான நிலைகளைக் குறிக்கின்றதாம். தெய்வானை என்பது கற்பு நிலை அதாவது சம்பிராதய முறைப்படி அமைந்த திருமணம் என்பதைக் குறிக்க, திருமணத்துக்கு அப்பாற்பட்ட காதலைக் குறிக்கும் வள்ளியின் திருமணத்தைக் களவுநிலை என்கிறார்கள். பங்குனி உத்திரம் என்பது வடக்கில் குளிர்காலம் முடிந்து கோடைகாலம் துவங்குவதையும் , தெற்கில் அதற்கு மாறான நிலை ஏற்படுவதையும் குறிப்பதாக அந்த அரைகோளகற்பத்தில் உள்ளவர்கள் கருதினாலும், மெல்போர்னைப் பொறுத்தவரை அந்தப் பண்டிகை தினம் என்பது முக்கியமான தினமாகும்.

முடிவுரை

இந்து சமயமும், முருக வழிபாடும் எந்த அளவு மெல்போர்னில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அனைவரும் ஒன்று கூடும் இடங்கள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் அங்கு வந்து ஒன்றிணைந்து, வாராந்தர மற்றும் முக்கியமான நாட்களில் பிராத்தனைகளை செய்து வந்தபோது வழிபாட்டு ஆலயத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. இருபதே ஆண்டுகளில் இரண்டு ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அங்குள்ள எழுந்துள்ள அனைத்து ஆலயங்களிலும் முருகனின் சன்னதிகள் உள்ளன என்பதைப் பார்க்கும்போது முருக பக்தி எந்த அளவிற்கு ஆண்டு பரவி இருந்துள்ளது என்பது புலனாகும். வருடாந்தர விழாக்களில், முக்கியமாக முருகனின் பண்டிகைகளை கொண்டாடும் நாட்களில் அங்கு வந்து கூடும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதற்கு சான்றாக உள்ளது.

References

  1. Australian Census 1996
  2. Australian Information and Statistics
  3. Information on City of Greater Dandenong
  4. Paripatal
  5. Kanta Puranam
  6. Religious Publications of Śrī Kanta Press, Jaffna and Kantalakam, Chennai
  7. Souvenir, Newsletters and Publications of Siva Vishnu Temple, Carrum Downs
  8. Souvenirs, Newsletters and Publications of Sri Vakratunda Vinayakar Temple, The Basin
  9. Information on Melbourne Murukan Cultural Centre
  10. Encyclopaedia Britannica

"Murukan worship in Australia" by Dr Arumugam Kandiah
Murugan.org