Lord Skanda-Murugan
 

பண்டைய தமிழர்கள் பார்வையில் முருகன்

Kundrakudi Kumaran

பீ. தியாகராஜன்

Original article in English:
"God Murukan as viewed by the ancient Tamils" by P. Thiagarajan

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

பண்டைய கால தமிழ் குடி மக்களின் சமூக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அனைத்தும் 'முருக' வழிபாட்டு முறைகளுக்கு ஏற்பவே அமைந்து இருந்தன. தமிழ்நாட்டின் அடிகானல்லூர் என்ற இடத்தில் இருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகப் பழமையுமான மயானங்களில் இருந்த கல்லறைகளில் 'வேல்' மற்றும் 'சேவல்' சின்னங்கள் கிடைத்துள்ளன. பண்டைய காலத் தமிழர்களைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் மிக முக்கியமானவரும், பெரும் வல்லுரனுமான பேராசிரியர் 'பீ. டி. ஸ்ரீனிவாசன்' என்பவருடைய கூற்றின்படி, அடிகானல்லூரில் இருந்த அந்த கல்லறைகள் 7,000 ஆண்டுகளுக்கு முட்பட்டவை. ஆரியர்கள் வட நாட்டின் வழியாக இந்தியாவிற்கு வந்த பின் முன்னர் அவர்கள் பின்பற்றிய வழக்கத்தைப் போன்றே இறந்து போன பிணங்களை எரிக்கத் துவங்கினர். அதற்கு முன்னர் அந்த இடத்தில் பிணங்கள் எரிக்கப்பட்டன என்பதற்கான எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை . சரித்திர காலத்திற்கு முன்னரே 'வேல்' வழிபாடும், முருக வழிபாடும் தமிழர்களிடம் இருந்தது. அதில் அவர்கள் தீவிர அர்வமும் கொண்டு இருந்தனர். 'தொல்காப்பியம்', 'பாட்டுப்பட்டு' மற்றும் 'ஏட்டுத் தொகை' முதலிய நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளில் இருந்து அந்த காலத்தில் முருக வழிபாட்டு முறையைச் சார்ந்தே பண்டை தமிழ் குடி மக்களுடைய சமூக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அமைந்து இருந்தன எனத் தெரிய வருகின்றது.

போர் முனையில் வெற்றி கொள்ள முடியாத கடவுள்

பண்டைய தமிழர்களின் 'முருகன்' வழிபாட்டு முறைகளைப் பற்றி 'தொல்காப்பியமே' முதலில் நமக்கு எடுத்துக் காட்டியது. முருகனை 'சீயன்' என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சங்க இலக்கியங்களில் 'முருகனின்' பெயர்களை 'குடர்புன்சி', 'வேல்பொர்சி', 'பிம்புன்சி' ( cutarpuncey, vel porccey and piympuncey) என குறிப்பிட்டுள்ளன. முருகனின் உடல் சிவப்பு ஒளி போல ஜோலித்தபடிக் காட்சி தர, அவருடைய உடைகள், ஆபரணங்கள், மாலைகள் மற்றும் அவர் கைகளில் வைத்திருந்த 'வேல்' போன்ற அனைத்துமே சிவப்பு வண்ணங்களில் அமைந்து இருந்தன என்று பண்டைய தமிழ் குடி மக்கள் நம்பினர். 'திருமுருகாற்றுப்படையில்' கூட 'முருகன்' சிவப்புத் துணிகளை அணிந்திருந்தவர் எனவும், அவர் சிவப்பானவர் எனவும் கூறப்பட்டு உள்ளது. அரக்கர்களையும் அசுரர்களையும் அழித்த முருகப் பெருமான் கோபம் கொந்தளித்து, கண்கள் சிவப்பேற, ஆக்கிரோஷத்துடன் மனித குலத்தின் மேம்பாடுகளுக்கும் நன்மைக்காகவும் அவர்களை அழித்தார் என பண்டை தமிழ் குடி மக்கள் நம்பினர். மேலும் 'முருகனை' அருள் திருக்கடவுள் (aruntiRalkaTavuL) அதாவது அபாரமான சக்தி கொண்டவர், பராக்கிரமான செயல்களை செய்து முடிப்பவர் எனவும், அப்படிப்பட்ட அபார சக்தியும், பராக்கிரமத்தையும் கொண்ட அவரை யுத்தத்தில் எவராலும் வெல்ல முடியாது என்றும் நம்பினார்கள்.

தமிழ் குடி மக்கள் போர் கடவுளை 'கொறவை' (Korravai) என்ற பெயரில் வணங்கினர். தமிழில் 'கொறவை' என்றால் போரில் வெற்றி என்ற அர்த்தம் உண்டு. தொல்காப்பியத்தில் 'கொறவை' வழிபாட்டைக் பற்றிக் குறிப்பிடுகையில் 'கொறவை' நிலை, அல்லது 'கொறவை' என்ற போர் கடவுளின் வாயில் இருந்து காற்று போல வெளி வந்தவர் 'முருகப்' பெருமான் என்று அவரைக் குறித்துக் கூறப்பட்டு உள்ளது. 'பெரும்பாணர் படை' (Perumpanarruppatai) என்ற நூலில் 'முருகப்' பெருமான் 'கொறவையின்' புதல்வன் என்ற குறிப்புக் காணப்படுகின்றது. 'கமீல் ஸெல்பில்' என்பவர் எழுதி உள்ளபடி 'கொறவை' என்ற போர் கடவுளுடைய பிள்ளையே 'முருகன்' என எண்ணத் தோன்றுகின்றது. அவருக்குத் தந்தை கிடையாது. சமிஸ்கிருத நூல்களின்படி அவர் எந்த தாயாருக்கும் பிறக்கவில்லை . 'அகநானூறு' நூலின்படி தனக்கு அடிபணிந்து நடக்காதவர்களை அழித்து விடும் பராக்கிரமசாலியானவர் போர் கடவுள் என்றும், அவர் பெரும் திறமை மிக்கவர் எனவும் தெரிய வருகின்றது. 'இலவாண்டிகைடுன்சிய நன்மரம்' (Illavantikaitunciya Nanmaram) என்ற சோழ மன்னனைப் பற்றி கூறுகையில் அவரும் 'முருகனைப்' போலவே தான் நினைத்ததை வெற்றிகரமாக நடத்திக் கொள்பவர் என்று கூறுவார்கள்.

Kumarar

சங்ககால கவிஞரான 'கபிலரின்' கூற்றின்படி சங்க காலத்தை சேர்ந்த மன்னனான 'பரம்பு' மலையை சேர்ந்த 'வேல்பரம்பு' எனும் மன்னனும் 'முருகனைப்' போலவே பராக்கிரமசாலியாக இருந்தவர் என்றும் அவர் யுத்தத்தில் எதிரிகளை தோற்று ஓடச் செய்பவர் என்றும், ஆனால் அப்படி தோற்று ஓடும் எதிரிப் படைவீரர்களை துரத்திச் சென்று அழிப்பது தனது கௌரவத்திற்கு இழுக்கு என்று நினைத்தவராம். 'மதுரைக்காஞ்சி' (Maturaikkanci) என்ற சங்ககால பாட்டில் 'தலையலங்கநாட்டு சிறுவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்' (Talaiyalankanattuc Ceruvenra Pantiyan Netunceliyan) என்பவருடைய பராக்கிரமத்தைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. அதில் அந்த மன்னனின் பெருமையைக் குறித்துக் கூறுகையில் அவர் 'முருகனைப்' போலவே எதிரிகளை அடக்கி அழித்து, அவர்களின் கோட்டைகளைப் தன்வசமாக்கிக் கொண்டு, அவர்களை ஆதரிப்பவர்களையும் அழிப்பது மட்டும் அல்லாமல் அவர்களது பெயரையும் புகழையும் முற்றிலுமாக அழித்து விடுபவர் எனக் கூறி உள்ளது.

'மலியப்பட்டுக்கடம்' (Maliapatukatam ) என்ற மற்றுமொரு சங்க நூல் மலை பகுதியில் இருந்த ஒரு தலைவனின் பெருமை பற்றிக் கூறுகையில் அவன் 'முருகக்' கடவுளுக்கு இணையான பராக்கிரமசாலியாகவும், வீரனாகவும் விளங்கினான் என்று கூறியது. 'கபிலரின்' 'குறிஞ்சிப்பட்டு' பாடல்களில் 'முருகனின்' வேல் குறித்து கூறுகையில், அது மின்னலைப் போல் வெளிச் சென்று எதிரிகளை அழித்தது என எழுதினார். சங்க கால இலக்கியங்களில் வீரர்களும் மன்னர்களும் மட்டும் அல்ல, குடும்பத் தலைவர்களைக் கூட 'முருகனுடன்' ஒப்பிட்டுப் பார்த்தனர்.

முருகனும் வள்ளியும்
முருகனும் வள்ளியும்

அழிக்கப்பட்ட தீய சக்திகள்

சங்க கால இலக்கியங்களில் 'சூர்' அல்லது 'சூரபத்மனையும்' அழித்த முருகனின் பராக்கிரமங்களைக் குறித்து எழுதப்பட்டு உள்ளன. அது பற்றிய செய்திகள் அவற்றில் நிறையவே உண்டு. பண்டைய மக்கள் 'சூர்' மற்றும் 'சூரபத்மனை' தீய சக்திகள் என்று கருதினார்கள் . அவர்களை அழித்தவர் 'முருகன்' என்றும் அதனால் மனித குலம் மேன்னை அடைய அவர் அவசியம் தேவை என்றும், விவசாயி ஒருவன் எப்படி நிலங்களில் இருந்து விஷ விதைச் செடிகளைக் களைந்து எடுத்து எறிந்து விடுகின்றானோ அது போல ஒரு மாவீரனும் சமூகத்தில் அப்படிப் பட்ட செயல்களை செய்வதற்கு வேண்டும் எனவும் பண்டைய தமிழ் குடி மக்கள் நினைத்தார்கள். அதற்கு உதாரணமாக "நிலத்தில் இருந்து விஷ விதைகளைக் களைந்து எறிவது போன்றதுதான் ஒரு மன்னன் கடுமையான தண்டனையை ஒரு கொடுமையான கொலைகாரனுக்குக் கொடுப்பதும்" என்று 'திருவள்ளுவர்' எழுதி உள்ளதைக் காண வேண்டும்.

முருகு மற்றும் முருகன் - இயற்கையாக அமைந்த அழகான பெயர்கள்

தமிழில் பல வார்த்தைகள் மற்றும் இருந்தாலும் சொல்தொடர்கள் இருந்தாலும், பண்டையக் கால மக்கள் 'முருகனைப்' பற்றிக் கூறுகையில் அவரை 'முருகு' மற்றும் 'முருகன்' என்ற அடைமொழிப் பெயர்களினாலேயே அழைத்தார்கள். 'முருகு' என்றால் எளிமை, அழகு, இளமை, உண்மையிலேயே துடிப்பு, புறச்செவிமடிப்பில் காதணி மற்றும் நல்ல மணம் என்ற பொருட்கள் உண்டு. 'சென்டன் திவாகரம்' (Centan Tivakaram) என்ற தமிழ் இலக்கியம் இந்தக் கடவுளுக்கு இருபத்தி ஏழு பெயர்களைக் கொடுத்துள்ளது. 'முருகு' மற்றும் 'முருகன்' என்றப பெயர்கள் சங்க கால இலக்கியங்களில் காணப்படுபவை. இந்த வார்த்தைகள் மூலம் மூலம் பண்டைய காலத் தமிழர்கள் எந்த அளவு எளிமையான வாழ்கையை கொண்டு வாழ்ந்து இருந்தார்கள் என்பதும், அவர்கள் 'முருகனின்' மீது பெரும் மதிப்பை வைத்து இருந்தார்கள் என்பதும் புலனாகும். 'முருகனுக்கு' இயற்கையிலேயே மணம் உண்டு என்றும், ஜொலிக்கும் உடலமைப்பும், கவர்ச்சி மிக்க தோற்றமும் கொண்டவர் என்றும் அவரைப் பற்றிக் கருதினார்கள்.

புகழ் பெற்ற தமிழ் கவிஞர் 'வீ. கல்யாண சுந்தரனார்' என்பவர் ''முருகு என்பது பல அர்த்தங்களை உள்ளடக்கிய சொல், அது 'முருகனுக்கு' இயற்கையாக அமைந்து இருந்த உடல் அழகையும், இளமையையும், தோற்றத்தையும் விவரிக்கின்றது" என்று கூறி உள்ளார்.

'திருமுறுகாற்றுப்படை' எனும் பாடலிலோ 'முருகனை' ஜொலித்தபடி இருக்கும் 'சூரியனுடன்' ஒப்பிட்டு, கடலில் இருந்து வெளிச் சிதறியபடிக் காட்சி தரும் 'சூரிய' ஒளி போல 'முருகனின்' உடலும் ஜொலித்தது என்று அவரைக் குறித்து வர்ணிக்கன்றது. 'முருகன்' இயற்கையிலேயே மிக அழகானவர், இளமைத் ததும்பியவர், உண்மையிலேயே துடிப்பு மிக்கவர் என்பதாக பழங்குடி தமிழ் மக்கள் கருதியது உண்மையே என்பதை உறுதி செய்வது போல அதில் உள்ளப் பாடல் அமைந்து உள்ளது.

Śakti Dharar

பழங்குடி தமிழ் இனத்தனர் பார்வையில் வெறியாடல்

'தொல்காப்பியம்' எனும் தமிழ் 'நவவியாகரண' நூலில் கூறப்பட்டு உள்ள 'வேலன் வெறியாடல்கள்' என்ற நடன நிகழ்ச்சி 'முருக' பக்தர்களான பழங்குடி மக்களின் சமூக கலாசாரங்களுடனும் பெரிதும் சம்மந்தப்பட்டு இருந்தது. 'வேலன் வெறியாடல்' என்ற நடன நிகழ்ச்சி 'அகம்' மற்றும் 'புறத்தைக்' காட்டும் முறையில் அமைந்து இருந்தாலும் 'குறிஞ்சி' என்பதில் அவர் 'குறிஞ்சிப்' பூக்களை அணிபவராகவே காட்டப்பட்டு உள்ளார். இந்த வெறியாடல் நிகழ்ச்சி 'பழங்கள்' மற்றும் 'மலர்களால்' அலங்கரிக்கப்பட்ட 'ஆடுகளம்' என அழைக்கப்படும் நாட்டிய மேடை மீது நடைபெறும். அப்போது அந்த நடனமாடுவோருக்கு வண்ணமிக்க அரிசி உணவும் இறைச்சியும் தரப்படும். 'முருகனைப்' போலவே நடனமாடுபவரும் தன் கையில் 'வேல்' ஒன்றை வைத்து இருப்பார். ஆகவே அவரை அங்குள்ளவர்கள் அவரை 'முருகனின்' அவதாரம் என்றே நினைத்தார்கள். இந்த நடன நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புக்கள் 'எட்டுடோகை' மற்றும் 'பட்டுப்பட்டு' (Ettutokai and Pattupattu) போன்றவற்றில் நிறையவே காணப்படுகின்றன.

'புறம்' எனும் தலைப்பில் நடைபெறும் ஆட்ட நிகழ்ச்சியின்போது யுத்தகளத்தில் கிடைக்க உள்ள வெற்றியைக் குறித்து 'வேலன்' முன்னதாகவே ஆரூடம் கூறி விடுவார். இந்த நடன நிகழ்ச்சியின்போது 'குறிஞ்சிப்' பூக்களுக்குப் பதிலாக நடனமாடுபவர்கள் 'கண்டல்' பூக்களைக் கொண்ட மாலைகளை அணிந்து கொண்டு இருப்பார்கள். அங்குள்ள படைவீரர்கள் (நடன நிகழ்ச்சியில்) 'முருகனின்' ஆரூடத்தை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

'வேலன் வெறியாடலில்' அகம் என்ற தலைப்பின் கீழ் காதல் வயப்படும் திருமணம் ஆகாத வயதுக்கு வந்தப் பெண்களின் மன நிலை மற்றும் உடல் நிலையை பற்றி தெளிவாகக் கூறுவார்கள். அதனால் கவலையுறும் செவிலித் தாயர்களும் தங்களுடைய சொந்தப் பிரச்சனைகளை அந்த 'வேலன்' வேடத்தில் உள்ள பண்டிதரிடம் கூறி அதற்கான பரிகாரம் கேட்டு நிற்பார்கள். தாய்மார்கள் அங்கு உள்ள 'வேலனின்' உதவியை நாடுவார்கள். அவரே அவற்றுக்கான தீர்வைத் தர வல்லவர் என்றே நம்பினார்கள். பழங்குடி தமிழர்கள் தங்களுக்கு ஏற்பபட்டு இருக்கும் மனத் துயரங்களுக்கு 'வேலனின்' அருளினால் தீர்வு கிடைக்கும் என நம்பினர்.

காதலர்களின் முன்னோடியானவர்

'முருகன்' யுத்தக் கடவுள் மட்டும் அல்ல காதலிலும் வல்லவர் என்றே அவரைக் குறித்துக் கருதினார்கள். திருமணத்துக்கு முன்னர் காதலித்து மணம் செய்து கொண்டதினால் 'முருகனை' மாபெரும் வீரன் என்றே நினைத்தார்கள். 'நாரிணை' 82 என்பதில் 'முருகன்' திருமணத்துக்கு முன்னரே 'வள்ளி'யுடன் நெருங்கியத் தொடர்ப்பு வைத்துக் கொண்டு இருந்தார் எனக் குறிப்பிட்டு உள்ளது. மருத்துவ வல்லுனர்கள் கூட 'திருமணத்துக்கு முன்னரே தான் விரும்புவருடன் தொடர்ந்து பல நாட்கள் நெருங்கிப் பழகுவதின் மூலம் ஒரு பெண் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பக்குவத்தைப் அடைந்து அவரை பூரணமாக காதலிக்கத் துவங்குகிறாள்" என்கிறார்கள்.

பண்டைக் காலத்தில் இருந்து வந்த பழக்க வழக்கங்களை நோக்கும் பொழுது 'ஒரு மகிழ்சிகரமான மண வாழ்க்கை அமையவும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளவும், திருமணத்துக்கு முன் இருவரும் நெருக்கமாகப் பழக வேண்டியது அவசியம்' என அவர்கள் கருதினர் என்பது புரியும். பழங்குடி தமிழர்கள் சமூக காதல் கதைகளுக்கும் திருமணத்துக்கு முன்னர் இணைந்து இருந்த 'முருகன்-வள்ளி' இருவரின் காதல் வாழ்க்கையே முன்னோடியாக விளங்கியது. 'தொல்காப்பியத்திலும்' 'முருகன்- வள்ளி'யின் திருமணத்திற்கு முன்பான தொடர்பு பற்றி கூறப்பட்டு உள்ளது. 'தொல்காப்பியத்தில்' அது 'வள்ளிக் கூட்டு' என்ற பெயரில் கூறப்பட்டு உள்ளது. 'வள்ளி' என்றால் மிருதுவான 'வள்ளி செடியையும்' மற்றும் 'முருகனின்' மனைவியுமான 'வள்ளியை'யும் குறிக்கும். 'தொல்காப்பியர்' அவளைக் குறித்துக் கூறுகையில் அவளை 'வாடாவள்ளி' என்றார். வாடா என்றால் வாடிவிடும் வள்ளிச் செடியை போல அல்லாமல் பொலிவோடு இருக்கும் 'வள்ளியை' குறிக்கும்.

பழங்குடித் தமிழர்கள் 'வள்ளிக் கூத்து' எனும் நடன நிகழ்சியை நடத்தி வந்தனர். முக்கிய கதானாயகி பாத்திரமாக இருப்பது 'வள்ளியே' எனும் விதத்தில் அது அமைந்து இருந்தது. ஆகவே பண்டை காலத்தில் 'வள்ளி-முருகனின்' காதலை உத்தமமான காதல் என்று ஒரு மேற்காட்டி, அதை ஒரு உதாரணமாக வைத்து இருந்தனர். சங்க நூல்களில் 'வெற்றிவேல்', 'செவ்வேல்', 'வீரவேல்' என 'முருகனை' குறிப்பிட்டு உள்ளனர். பழங்குடித் தமிழர்களுக்கு 'முருகனிடம்' அளவு கடந்த மோகம் இருந்தது. ஏன் எனில் திருமணத்திற்கு முன் நெருக்கமாக இணைந்து இருந்து அதன் பின் இணைந்த அவதார புருடர்களாகவே அவரை கண்டனர். ஒரு காதல் தோற்றால் அது வாடிவிடும் 'வள்ளிச் செடி' போலவும் வெற்றி பெற்றால் காதலினால் இணைந்த அந்த 'வள்ளி' தெய்வத்தைப் போலவும் என அவர்கள் கருதியதில் வியப்பு ஏது?


Contact the author:

Dr. P. Thiagarajan
Institute of Asian Studies
Chemmancherry
Sholinganallur, Chennai - 600 119 India
E-mail: ias@xlweb.com

More research articles about Skanda-Murukan