Lord Skanda-Murugan
 

கௌமார சிலைகளின் முக்கியத்துவங்கள்

வள்ளி-தேவசேனாவுடன் நான்கு கைகளைக் கொண்ட முருகன்
வள்ளி-தேவசேனாவுடன் நான்கு கைகளைக் கொண்ட முருகன்

பீ. சுயம்பு

Original article in English: "Significance of Kaumara Icons"

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

இந்துக்கள் இருவிதமான சமய வழிபாட்டு முறைகளை வைத்துக் கொண்டு உள்ளனர். முதலாவது 'பக்தி யோகம்', அதாவது சடங்குகள் செய்தபடி பக்தி செலுத்துவது. இரண்டாவதாக 'ஆத்ம வித்யா', அதாவது தனக்குள் தானே ஞானத்தினால் ஆத்மார்த்தமாக அறிவை வளர்த்துக் கொண்டு பக்தி செலுத்துவது போன்றவை. பக்தி யோகத்தில் சிலை வழிபாடு மிகவும் முக்கியமானது.

பொதுவாக உள்ள ஆறு பிரிவு சமயக் கொள்கைகளில் - 'சைவ', 'வைஷ்ணவ', 'சாக்த', 'குமார', க'ணபத்திய' மற்றும் 'சௌரியம்' (Saivism, Vaisnavism, Śāktam, Kaumāram, Gānapatyam, Sauryam) போன்ற பிரிவினர் தமது சமய மார்கத்திற்கான வழி முறைக்கு குறிப்பிட்ட சிலை வடிவங்களைக் கொண்டு உள்ளனர். தாங்கள் வழிபடும் சிலைகள் கண்களுக்குப் புலப்படாமல் உலகமெங்கும் வியாபித்து இருக்கும் 'விஸ்வஷரீரா' போன்ற தெய்வங்கள் என எண்ணுகின்றனர்.

சிற்ப சாஸ்திரங்களில் அந்த சிலை வடிமங்களின் அர்த்தங்கள் தரப்பட்டு உள்ளன. ஒவ் ஒரு தெய்வத்தையும் சுற்றியும் பலவிதமான புராணக் கதைகள் உண்டு. ஆக அந்த ஆறு பிரிவு வழிபாடுகளில் உள்ள முறைகளையும், புராணக் கதைகளின் மீதான நம்பிக்கைகளையும் பார்க்கும்போது அவை ஒன்றுக்கொன்று எந்த அளவில் சமய, மற்றும் கலாசாரத்தில் மாறுபட்டு உள்ளன எனத் தெரியும்.

கௌமார சிலைகள்

பல ஆராய்ச்சியாளர்களின் எண்ணப்படி குமரன் பக்தி இயக்கம் என்பது ஆரிய ஸ்கந்தன் மற்றும் தமிழக முருகன் பக்தி இயக்கங்களின் கலப்பே ஆகும். அவை இரண்டிலும் உள்ள தன்மைகளைப் பிரித்துப் பார்ப்பது கடினமானது. ஆனாலும் அவர்களுடைய பக்தி மார்கத்தில் பயன்படுத்தப்படும் சிலை அமைப்புக்களையும், புராணங்களையும் சேர்த்து படிக்கும் பொழுது அவற்றின் மகத்துவங்களைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

பழனி ஆண்டவராக முருகன்
பழனி ஆண்டவராக முருகன்
கஜவாகனனாக முருகன்
கஜவாகனனாக முருகன்
பிரும்ம சாஸ்தா எனும் முருகன்
வலதுபுறத்தில் வள்ளி இருக்க
இடது புறத்தில் பிரும்மா உள்ளார்
பிரும்ம சாஸ்தா எனும் முருகன் வலதுபுறத்தில் வள்ளி இருக்க இடது புறத்தில் பிரும்மா உள்ளார்
வள்ளியுடன் கல்யாணசுந்தரராக முருகன்
அவர்கள் முன் அமர்ந்து உள்ளது பிரும்மா
வள்ளியுடன் கல்யாணசுந்தரராக முருகன் அவர்கள் முன் அமர்ந்து உள்ளது பிரும்மா
தேவசேனாபதியாக முருகன்
தேவசேனாபதியாக முருகன்
சரவணபவராக முருகன்
சரவணபவராக முருகன்
ஷன்முகராக முருகன்
ஷன்முகராக முருகன்
குருன்சபேதாவாக முருகன்
குருன்சபேதாவாக முருகன்

சாத்வீக குணத்தைக் காட்டும் சிலைகள்

குமரனின் சிலை அமைப்புக்கள் மூன்று வகைப்படும். அவை 'சாத்வீக', 'ரஜஸ்' மற்றும் 'தமஸ்' குணங்கள் என்ற அமைப்பில் உள்ளன. இரண்டு கைகளையும் ஒரு முகத்தையும் கொண்ட முருகன் தனியாக அமர்ந்த நிலையில் உள்ளவாறு அமைக்கப்பட்டு உள்ள சிலைகள் சாத்வீக வடிவம் கொண்டவை. அந்த சிற்பங்கள் வலது கையில் தாமரை மலர் அல்லது சக்தி வேல் ஒன்றை ஏந்தியபடி காட்டப்பட்டு இருக்கும்.

இடது கை இடுப்பின் மீது வைக்கப்பட்டு இருக்கும். 'சில்பரத்தின' என்பதின் கூற்றின்படி சாத்விக குணத்தைக் காட்டும் சிலைகள் கிராம வழிபாட்டிற்கு சிறந்தவை. அவற்றை எளிதாகவும் செய்ய முடியும். 'தண்டபாணிக் கடவுள்' (பழனி), 'பாலஸ்வாமி' போன்றவை அந்த பிரிவை சார்ந்தவை. அனேகமாக நிர்வாண நிலையில் ஒரு மெல்லிய துணி மட்டுமே அணிந்தபடி காட்சி தரும் வகையில் அவை அமைந்து உள்ளன.

சரித்திர காலத்திற்கு முந்தைய அதாவது மிகப் பழைய கால மக்கள் தம்மை சுற்றி பராக்கிரமசாலிகளையும் வேல் போன்ற ஆயுதங்களையும் வைத்து இருந்தனர். சங்க காலத்தில் வேல் வழிபாடும் இருந்தது. தங்கள் வணங்கிய தெய்வத்திற்கு முருகன் எனப் பெயர் சூட்டி இருந்தனர். அவர் அழகு, அறிவு மற்றும் மிகப் பெரிய சக்தி படைத்தவர் என்ற எண்ணமும் அவர்கள் மனதில் இருந்தது. ஆக முருக வழிபாடு முந்தைய காலத்திலேயே இருந்துள்ளது என்பது தெரிகிறது. சக்தி வேல் என்பது பின்னர் அதாவது வைதீக பக்தி முறை மற்றும் தமிழர் வணங்கி வந்த தனி வழிபாட்டு முறை என்ற இரண்டும் கலந்த நிலையில் பிற் காலத்தில் தோன்றியது.

இராஜஸ் குணத்தைக் காட்டும் உருவச் சிலைகள்

இராஜஸ் குணம் படைத்த சிலை அமைப்புக்களில் முருகன் ஒரு யானை அல்லது மயில் வாகனத்தின் மீது அமர்ந்து உள்ளபடியும், ஒரு தலை மற்றும் நான்கு கைகளைக் கொண்ட அமைப்பிலும் உள்ளன. கீழே நீட்டியபடி உள்ள இரண்டாவது வலது கை அபய முத்திரையை காட்டியபடியும் (பாதுகாப்பது), மேலே உள்ள வலது கை சக்தி வேல் அல்லது மணி மாலை ஒன்றை கையில் பிடித்தபடி இருக்க, இடது பக்க கீழ் பகுதிக் கை அருள் பாலிக்கும் வராத முத்திரையைக் காட்டியவாறும், மேல் பக்க இடது கை வஜ்ரா அல்லது கும்பத்தை ஏந்தியபடியும் அல்லது இடுப்பில் கை வைத்துக் கொண்டு இருக்குமாறும் சிலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில சிலை அமைப்புக்களில் வலது மேல் கையில் கத்தியும், இடது பக்க கீழ் கை கேடயத்தையும், கொடியையும் பிடித்தபடி காணப்படுகின்றன. மணிமாலையும் கும்பமும் பிரும்மாவை குறிப்பது. வஜ்ரா இந்திரனைக் குறிக்க அவை இரண்டும் குமரனின் அடையாளங்களுடன் சேர்க்கப்பட்டு உள்ளன. 'தேவசேனாபதி', 'கஜேந்திர வாகனா', 'சிக்கில் வாகனா', 'காங்கேயா', 'குஹா', 'பிரும்ம அஷ்டதா' மற்றும் 'வள்ளி கல்யாண சுந்தரா' போன்ற பெயர்களில் அமைக்கப்பட்டு உள்ள சிலைகள் இராஜஸ்வ குணத்துடன் இருப்பதைக் காட்டுபவை. திருச்செந்தூரில் உள்ள 'பாலகுமரன்' அதில் ஒன்று. அந்த சிலையில் முருகன் வலது மேல் கையில் சக்திவேல் ஒன்றை ஏந்தியபடியும், இடது கீழ் கை வராத முத்திரையை காட்டியபடியும் அமைக்கப்பட்டு உள்ளது. இடது மேல் கையில் மாலையும், கீழ் கை இடுப்பில் வைத்தபடியும் காணப்படுகின்றன.

ஆர்ய இந்து தேவதைகளின் படைத் தலைவன் முருகன். இந்திரனையும் அக்னி தேவனையும் விலக்கி விட்டு படைத் தலைவனாக்கப்பட்டவர். அதனால்தான் கந்தனை சேனாதிபதி என்றும தேவசேனாதிபதி என்றும் அழைக்கின்றனர். கஜவாகனனான முருகன் யானை மீதேறி படைகளத்திற்குள் செல்லும் புகழ் மிக்க படை வீரர். கங்கேயா என்ற உருவில் உள்ள அவர் முதலை மீது அமர்ந்து உள்ளார். அந்த வடிவம் அவர் பிறந்த இடத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. குஹா என்ற உருவில் உள்ள ஸ்கந்தனுக்கு சிவனைப் போலவே மூன்று கண்கள் உண்டு. அவர் பக்கத்தில் அவருடைய மனைவி தேவசேனை உள்ளார். மூன்று கண்கள் என்ற தத்துவம் சிவபெருமானிடம் இருந்து பெற்றது.

வள்ளி கல்யாண சுந்தர மூர்த்தி சிலை வடிவங்கள் முருகன் வள்ளியுடன் செய்து கொண்ட திருமணத்தைக் குறிக்கின்றது. அவற்றில் உள்ள முருகன் சிலையில் வலது மேல் கையில் மணிமாலை மற்றும் தண்ணீர் குடம் உள்ளது. இடது பக்கத்தில் உள்ள ஒரு கை அபய முத்திரைத் காட்ட, மற்றொரு கை இடுப்பின் மீது வைத்தவாறு உள்ளது. அந்த சிலை வடிவமைப்பில் காணப்படும் விஷ்ணு ஒரு கும்பத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு அதை ஊற்ற தயார் நிலையில் இருக்க, பிரும்மா நெய் கரண்டியுடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார்.

முருகன் மலைகளின் அதிபதி. தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அதையே கூறுகின்றன. முருகன் ஒரு வேடவரின் மகளை தமிழக பாணியில் காதலித்து மணந்து கொண்டார். தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் உலகில் இருந்து வந்த தேவயானையைப் போல் இல்லாமல் உள்ளுரைச் (பூலோகம்) சேர்ந்தவள் வள்ளி. சிங்களவர்களும் தேவயானை தேவலோகத்தில் இருந்து வந்தவர் என்றே கூறுகின்றனர். வள்ளி உள்ளுரை சேர்ந்தவள் என்பதினால் திராவிடக் கலை நயத்துடன் செய்யப்பட்டள்ள சிலைகளில் அவளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது. திராவிடர்கள் வடிவமைத்த முருகனின் சிலைகளில் இரண்டு மனைவிகளில் வள்ளிக்கு முக்கியத்துவம் கொடுக்க அவளை முருகனின் வலதுபுறத்தில் நிற்குமாறு வடிவமைத்து உள்ளார்கள்.

தேவசேனையுடன் முருகன் திருமணம் செய்து கொண்டது ஒரு பெயருக்காகத்தான். ஏன் எனில் கௌமாரி எனும் குமாரரின் பெண் ரூபமே தேவசேனா ஆகும். வடநாட்டு நம்பிக்கையின்படி ஸ்கந்தன் பிரும்மச்சாரி என்பதால் அவர் விலை மாதர்களையும் காத்தருள்பவர். ஏன் எனில் விலை மாதர்கள் திருமணம் ஆகாதவர்கள். பிரும்மஸ்தியா என்பது பிரும்மாவைக் குறிக்கும். சுப்ரமணியக் கடவுள் ஞானத்தின் அதிபதி. அவர் ஒருமுறை பிரணவ மந்திரத்தை பிரும்மாவிற்கு ஓதி அவருடைய செருக்கை அழித்தவர். அதனால் வலது கையில் ஜெப மாலையும் தண்ணீர் குடத்தையும் வைத்துக் கொண்டு உள்ளார். கீழ் நீட்டிய கைகளில் அபய மற்றும் வராத முத்திரைத் தோற்றங்கள் உள்ளன. சில சிலை அமைப்பில் முருகன் முன்பாக பிரும்மா நின்று கொண்டு இருந்தபடியோ, இல்லை கை கூப்பி வணங்கிக் கொண்டோ இருப்பது போல தோற்றம் தரப்பட்டு உள்ளது. அது சுப்ரமணியருடைய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்து உள்ளது.

தாமஸ் குணத்தைக் காட்டும் உருவச் சிலைகள்

தாமஸ் குணத்தைக் காட்டும் சிலைகள் நான்கு கைகளுடனும், கைகளில் பயங்கர ஆயுதங்களான சக்தி வேல், வாள், அம்புகள், கொடி, கதை (வஜ்ரம்), சக்கரம், ஈட்டி, சங்கு, கயிறு, படை மற்றும் கலப்பை போன்றவற்றை வைத்திருக்கும் உருவில் உள்ளன. பலவித சிலைகளும் இப்படிப்பட்ட கோலத்தில் உள்ளதின் காரணம் அவர் மற்ற கடவுட்களை விட மேலானவர் என்பதை எடுத்துக் காட்டவே. இந்த கருத்துக்கு ஒரு பின்னணி புராணக் கதை பரிபாடல் என்ற நூலில் உண்டு. முருகன் தன் இளமைப் பருவத்தில் தேவேந்திரனான இந்திரனை வென்றான். அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தேவர்கள் தங்களுடைய ஆயுளில் பாதியை ஒரு ஆயுதமாக மாற்றித் தந்தனர். அது மட்டும் அல்ல அவரை தங்கள் படைத் தலைவனாகவும் ஏற்றனர். முருகனே உலகைக் காக்க முடியும் என்ற கருத்தை இது ஏற்படுத்தியது.

சரவணபவா, சண்முகன், தாரகாரி போன்ற சித்திரங்களில் முருகன் ஆறு முகங்களுடனும் பன்னிரண்டு கைகளுடனும் காட்சி தருகின்றார். திருமுறுகாற்றுப்படையில் அவருடைய முகத்தைப் பற்றியும் கரங்களைப் பற்றியும் விவரங்கள் உள்ளன. முருகனின் பிறப்பு ஆறு முகங்களுடன் இணைந்து உள்ளது. இரண்டு புராணக் கதைகள் அவருடையப் பிறப்பு குறித்து எழுதி உள்ளன. அவற்றில் ஒன்றின்படி அக்னியின் புதல்வரே முருகன். அக்னி ஒருமுறை ஏழு முனிவர்களின் மனைவிகள் மீது மையல் கொண்டார். ஆனாலும் அதற்காக வெட்கப்பட்டு அவர் காட்டிற்கு சென்றார். தட்ஷணின் மகளான ஸ்வாஹா என்பவள் அக்னி மீது காதல் கொண்டாள். அவள் அந்த ஏழு முனிவர்களின் மனைவிகளைப் போல அவள் வேடம் பூண்டு அக்னியை ஆறு முறை காதலித்தாள். ஆனால் அவளால் அருந்ததி போல மட்டும் ஏழாவது உருவை எடுக்க முடியவில்லை. ஆறு முறை அவள் கருடனாக வந்து அக்னியின் உயிர் அணுக்களை எடுத்துக் கொண்டு சரவணப் பொய்கையில் இருந்த நாணல புதரில் ஒரு தங்க குடத்தில் போட்டு வைத்தாள். அவையே ஒன்றாகி ஒரே உடலில் ஆறுமுகம் கொண்ட குழந்தையாகப் பிறப்பு எடுத்தது.

இரண்டாவது கதை முருகன் சிவபெருமானின் மகனாகப் பிறந்த கதையைக் கூறுகின்றது. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று அசுரன் சூரபத்மனைக் கொன்று தங்களைப் பாதுகாக்கும்படிக் கோர, சிவபெருமான் தன்னுடைய ஐந்து தலைகளை அசைத்து, தன் மூன்றாம் கண்ணில் இருந்தும் நெருப்புப் பொறிகளை வெளியேற்ற அந்த பொறிகளின் வெட்பத்தினால் உலகமே துவண்டது. உமையவள் கூட அதைக் கண்டு பயந்து போய் ஓட அவள் தன் கணுக் கையை உடைத்துக் கொண்டாள். சிவபெருமான் அக்னியையும் வாயுவையும் அழைத்து அந்த பொறிகளை கங்கை நதியில் சென்று போடுமாறு கூற, அதை வாயு அக்னியிடம் கொடுக்க, அக்னி அதைக் கொண்டு போய் கங்கையில் போட்டார். அந்த வெட்பம் தாங்காமல் கங்கை அதை சரவணப் பொய்கையில் தள்ளி விட அந்த நாணல் புதரில் ஆறு உடல்கள், ஒவ்வொன்றிலும் இரு கைகள் என மொத்தம் பன்னிரண்டு கைகள், மற்றும் தனித் தனியே ஆறு முகங்கள் கொண்ட குழந்தையாக தாமரைப் பூவில் மிதந்து வந்தார்.

சிவபெருமான் கிருத்திகைகளை அழைத்து அவற்றை வளர்க்குமாறு கூறினார். உமை அங்கு சென்று அவற்றை வாரி அணைக்க அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஒரே உடலுடன் பன்னிரண்டு கைகள், ஆறுமுகங்கள் கொண்ட குழந்தையாக உரு மாறியது.

முருகன் சூரபத்மனையும் அவனுடைய சகோதரர்களான தாரகா மற்றும் சிங்கமுகனைக் கொன்றார். அவர் தமிழ் மற்றும் ஆரியப் பெண்களான வள்ளி மற்றும் தேவசேனாவை மணந்தார். கந்தபுராணம் முதல் பலரும் இந்த இரண்டாவது புராணக் கதையையே நம்புகின்றனர்.

சேனாபதி, சரவணபவா, சண்முகா, கார்த்திகேயா,தாரகாரி போன்ற உருவங்கள் இதனுடன் சம்மந்தப்பட்டவை. சேனாபதியின் உருவத்தில் வள்ளி அவருக்கு இடப்புறமும் தேவசேனா வலப்புறத்திலும் காட்சி தருகின்றாள். குருன்ச மலையை முருகன் தன்னுடைய சக்தி வேலால் இரண்டாகப் பிளந்த கதை குருன்சஹிதாவில் காணப்படுகின்றது. அதில் அவருக்கு ஆறு முகமும் எட்டு கைகளும் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

சௌரபீதா உருவங்களில் அவருக்கு எட்டுக் கைகள் மற்றும் நான்கு முகங்கள் உள்ளதாக காட்டப்பட்டு உள்ளது. அக்னி ஜாதாவில் இரண்டு முகங்களும் எட்டு கைகளும் உள்ளன எனத் தெரிவிக்கின்றது.

தேசிகா எனப்படும் ஒருமுக சிலையில் ஒரே முகம்தான் காட்டப்பட்டு உள்ளது. ஆனால் ஆறு கைகள் உள்ள அதில் ஒன்று அபய முத்திரையையும் மற்றும் ஒன்று வராத முத்திரையையும் காட்ட, தூக்கிய இரண்டு கைகளில் மணிமாலையும், சக்திவேலும் உள்ளன. மீதி உள்ள இரண்டில் ஒன்று ஓம் என்ற சின்ன முத்திரையைக் காட்டியபடி உள்ளது. பக்கத்தில் அமர்ந்து கொண்டு உள்ள சிவபெருமான் ஒரு கையால் தனது வாயை மூடிக் கொண்டும் இரண்டாவதை ஞான முத்திரையைக் காட்டியவாறு மார்பில் வைத்துள்ளபடியும் கட்டப்பட்டு உள்ளது. முருகன் தூக்கிக் கொண்டு உள்ள கைகளில் யுத்தக் கோடாரியும், மான் ஒன்றும் காணப்படுகின்றது. பார்வதி தேவி அவர் பக்கத்தில் நின்று கொண்டு இருக்கின்றாள்.

முருகனின் ஒவ்ஒரு உருவமும் தனித்தன்மை வாய்ந்தது. இரண்டு மனைவிகளும் இச்சா சக்தி மற்றும் கிரியா சக்திகளைக் காட்டுகினறனர். வேல் விவேகத்தையும் பராக்கிரத்தையும் குறிக்க, நாத தத்துவத்தை சேவலும், பிந்து தத்துவத்தை மயிலும் காட்டிக் கொண்டு இருக்க அந்த தத்துவங்களாலேயே உலகம் இயங்கலாயிற்று. முருகன் தன்னுடைய பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தருகின்றார்.

அசுரர்களான சூரபத்மன், சிங்கமுகன் மற்றும் தாரகா போன்றவர்களை அழித்ததின் மூலம் இந்த உலகில் இருந்து மாயை, தலை கனம், தீமைகள் மற்றும் பற்று என்ற அனைத்தையும் அழித்ததாக தத்துவார்த்தமாகக் காட்டினார். தேவையற்ற அவைகளை அழிப்பதின் மூலமே பேரானந்த நிலைக்கு செல்ல முடியும். இது சைவ சித்தாந்தத்தின் தத்துவம். குமரன் சிவனுடைய ஒரு அம்சம். குமரம் சைவத்துடன் இணைந்து விட்டது


Dr. P. Suyambu, M.A., Ph.D., teaches Tamil grammar at Aditanar College, Tiruchendur. He has published two books and some sixty papers on traditional grammar and literature.

Dr. P. Suyambu
Lecturer in Tamil
Athithanar Arts & Science College
Tiruchendur - 628 216 Tamil Nadu, India

Other articles about Kaumara Iconography and Art History:

 • Iconography of Skanda-Murukan
 • 'Iconography of Murugan' by Raju Kalidos
 • "Trimurti in Medieval South India"
 • "Iconography of Somaskanda"
 • "Palani Andavar Idol: A Scientific Study"
 • "Rare Image of Brahmasasta"
 • "Kinetic Iconography of Murukan"
 • The Iconography of Goddess Kaumārī
 • "Painting of Murugan, Subrahmanya or Karthikeyan"
 • "Significance of Kaumara Icons"
 • "Mailam Murukan temple"
 • "7th cent. Murukan image discovered"
 • "Vallakkottai Murukan Temple"
 • "Karttikeya Images of Ancient Java"
 • "Skanda Images in Ancient Cambodia"
 • "17 Iconographical Aspects of Subrahmanya"
 • 19th Century Bengali Watercolor of Karttikeya
 • Skanda upon Peacock, 11th-12th Cent Chola Granite
 • Galleries of Kaumara Iconography

 • Gallery One: Tiruvavaduthurai Adheenam
 • Gallery Two: 1920's - 40's collection
 • Gallery Three: early to late 20th century
 • Gallery Four: 1930-50 lithographs
 • Aru Padai Veedu paintings
 • Paintings of famous temple moolavars