Lord Skanda-Murugan
 

Malaysia Nanban
Malaysian Nanban (Kuala Lumpur) Tuesday 4 November 2003

3வது அருள்மிகு முருகன் மாநாடு சமய அறிஞர்கள் திரண்டனர்

20 நாடுகளைச் சேர்ந்த சமய அறிஞர்களின் வாழ்த்துக்களோடு

Malaysia Nanban of 4.11.2003

"அடுத்த மாநாடு இலங்கையில் நடக்க வேண்டும்."

த்துமலை நவ 4 இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வருகை புரிந்திருக்கும் நூற்றுக்கணக்கான பேராளர்கள் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள முருகன் மாநாடு பத்துமலை திருத்தல முருகன் கோவில் வளாகத்தில் மிக விமர்சையாகத் தொடங்கியது. 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடங்கிய இந்த மாநாடு 5ம் திகதி முடிவுறும்.

முருகன் வழிபாடும் உலக அமைதியும் எனும் தலைப்பில் நடைபெறும் இந்த அனைத்துலக 3வது முருகன் மாநாடு உலகளாவிய நிலையில் உள்ள இந்துக்களை குறிப்பாக திருமுருகன் பக்தர்களைக் கவரும் மாநாடாகக் கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த மாநாட்டை ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம்لل இந்து சங்கம்لل இந்து மாமன்றம்لل உட்பட இந்து சமயம் தொடர்பான அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்துகின்றன.

இந்த மாநாட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ். சாமிவேலு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். உள்நாட்டு வாணிபம் பயனீட்டாளர் துறை அமைச்சரும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோ சி.சுப்பிரமணியம் நாடாளுமன்றச் செயலாளர் டத்தோ வீரசிங்கம்لل நெகிரிமாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. ராஜகோபாலு உட்பட மலேசிய சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டின் துவக்க விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்தனர்.

மாநாட்டின் ஏற்பாட்டுச் செயலாளர் டாக்டர் என். எஸ். ராஜேந்திரனின் வரவேற்புரையோடு தொடங்கிய இந்த மாநாட்டில் தொடக்க அங்கமாக கரகாட்டம்لل மயிலாட்டம்ஆகிய பாரம்பரிய நடனங்கள் சிறப்பு அங்கங்களாக இடம்பெற்றன.

வெளிநாட்டுப் பேராளர்களைப் பிரதிநிதித் சுமார் 17 பேர் வாழ்த்துரை வழங்கினர். பாண்டிச்சேரி சுகாதார அமைச்சர் திரு. வாக்கு திருப்பீட சுவாமி பாலயோகி இந்தியாவின் ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் மலேசிய அருள் நெறி திருக்கூட்டத்தைச் சேர்ந்த டான்ஸ்ரீ. மு. சோமசுந்தரம் தேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ அ. வைத்திலிங்கம் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் ஏ.டி.ராஜா மாநாட்டின் ஸ்தாபகர் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஜோன். சாமுவேல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். இ. கந்தையா அமெரிக்காவைச் சேர்ந்த பேட்டிக் ஹரிங்ஞன் சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் ஜேர்மனியைச் சேர்ந்த ஹில்டா கமலா லி மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் டாக்டர் கந்தசாமி தமிழகப் பேச்சாளர் டாக்டர் குமரி ஆனந்தன்لل ஞானாசிரியர் சங்கரதாசர்لل கே.

சாத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டைத் தொடக்கி தை;த டத்தோஸ்ரீ ச. சாமிவேலு முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்த 3வது அருள்மிகு முருகன் மாநாடு மலேசியாவிற்கு பெருமை சேர்க்கும் என்று குறிப்பிட்டார்.

இதன் முதலாவது மாநாடு தமிழகத்திலும் இரண்டாவது மாநாடு மொரீசியஸிலும்لل நடைபெற்று இப்பொழுது மூன்றாவது மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. அனைத்துலகப் பேராளர்களை வரவேற்கும் அதே வேளையில் இந்தப் பேராளர்கள் அனைவரும் நாட்டின் இதர பகுதிகளுக்கும் சென்று மலேசியா அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டர்.

மாநாட்டின் சிறப்பு அங்கமாக டாக்கடர் சி. பொன்னையா எழுதிய நக்கீரனின் திருமுருகாற்றுப்படை நூலை பொதுப்பணித்துறை அமைச்சர் சாமிவேலு வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாநாட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

"அடுத்த மாநாடு இலங்கையில் நடக்க வேண்டும்."

Shanthi Navukkarasan

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய இலங்கையில் அரச அதிகாரி திருமதி சாந்தி நாவுக்கரசன; அடுத்த முருகன் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாட்டைத் தாம் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்த வாய்ப்பை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் உள்ள கதிர்காமர் ஆலயம் பழைமையானது அதே போல் மேலும் பல ஆலயங்கள் அங்கே உள்ளன. இலங்கையில் திருமுருகன் மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கினால் அதனைச் சிறப்பான முறையில் செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.

தமிழில் உரையாற்றி அசத்திய ஆங்கிலேயர்

பேட்ரிக் ஹரிகன்
பேட்ரிக் ஹரிகன்

அமெரிக்காவைச் சேர்ந்த பேட்ரிக் ஹரிகன்மழலைத் தமிழில் பேசி மாநாட்டில் கலகலப்பை ஏற்படுத்தினார்.

1996 ம் ஆண்டு கதிர்காமத்திற்குச் சென்று அங்குள்ள ஒரு சமயப் பெரியாரிடம் முருகனைப் பற்றிய சிறப்புக்ககளைக் கேட்டறிந்ததாக அவர் குறிப்பட்டார்.

முருகப் பெருமானின் மீது ஏற்பட்டுள்ள பக்தியின் காரணமாக தமிழைப் படிக்கக் கற்றுறக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். முதலாவது மாநாடு சென்னையில் நடந்த போது அதில் கலந்து கொண்டேன். அப்போது முருகன் மீது எனது பக்தி அதிகமானதுلل இரண்டாவது மாநாடு மொரீசியஸில் நடைபெற்றபோது எனது தாயாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது நான் ரொம்ப வருத்தப்பட்டேன். இந்த மூன்றாவது மாநாட்டில் கலந்து கொண்டு உங்களைச் சந்திக்கிறேன். இப்போது என் நெஞ்சம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திரு. பேட்டிரி குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி செய்ய தகுதி இல்லை

இந்த மாநாட்டை முருகனைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்காகப் பயன்படுத்துவதை ஏற்கமுடிய வில்லை என்று தமிழகப் பேராளர் டாக்டர் பி. எஸ் எஸ். கிருஷ்ணமூர்தி கூறினார்.

முருகனைப் பற்றி ஆராய்சி செய்வதற்கு ஒரு யுகம் போதாது. இந்தத் தகுதியும் நமக்கு இல்லை. முருகனைப் வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டும். உலகம் முஐவதிலும் உள்ள நமது முன்னோர் தமிழ்ச் சான்றோர் முருகனைப் பற்றிய வரலாற்றைத் தெளிவாக எழுதி வைத்திருக்கின்றார்கள்.

அதனை மையமாக வைத்து வழிபடுவது எப்படிلل வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை ஆராய்ந்து இளைய தலைமுறையினருக்குச் சொல்வதற்கான மாநாடாக இந்த நிகழ்வு அமைய வேண்டும் என்று அவர் சொன்னார்.

home