Lord Skanda-Murugan
 

நூறு ஆண்டுகள் முன்பு வீ. டீ. சுப்பிரமணியப் பிள்ளையால் வெளியிடப்பட்ட திருப்புகழ்

அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்

ஞானபூரணி மாதவநாத்

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

தொடக்கம்

முருகனைப் பற்றி பாடப்பட்ட பாடல்களில் முதல் இடம் வகுப்பது அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு முருகனைப் பற்றி அருணகிரிநாதர் எழுதிய பாடல்கள்தாம். அதில் மிக முக்கியமானது திருப்புகழ் பாடல்கள். அதை கந்தர் பாடல்கள் என்றும் கூறினார்கள். அதில் உள்ள பாடல்கள் கேட்கவே இனிமையானதாக இருக்குமாறு தனிப்பாணியில் படைக்கப்பட்டு உள்ளது. 1008 காண்டங்களாக உள்ள அந்த பாடல் 1300 வரிகளைக் கொண்டதாக காலம் காலமாக ஏற்கும்படியான நிலையில் தற்பொழுது அச்சிடப்பட்டு வருகின்றது.

நூறு வருடங்களுக்கு முன்பாக பல ஓலைகளில் சிதறிக் கிடந்தது இந்தப் பாடல்கள். அதை வீ.டீ. சுப்பிரமணியப் பிள்ளை (VTS) என்பவரே தேடி எடுத்து 1300 பாடல்களைக் கொண்ட தொகுப்பாக செய்தார். அருணகிரிநாதர் முதலில் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை 16,000 பாடல்கள் என நம்பப்படுகின்றது.

அதில் இருந்து 1300 பாடல்களை முதலில் திரட்டி வெளியிட்டு உள்ள சுப்பிரமணியப் பிள்ளை, அருணகிரிநாதர்எழுதிய பாடல்களில் இருந்து குறைந்தது ஆயிரம் பாடல்களையாவது திரட்டி வெளியிடுவதே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணி இருந்தார். அந்த சுப்பிரமணியப் பிள்ளை எப்படி தான் கொண்டு இருந்த லட்சியத்தை முருகனின் அருளினால் நிறைவேற்றினார் என்பதை இனிக் காணலாம்.

என்னுடைய இந்தக் கட்டுரை என்னுடைய தந்தையும், சுப்பிரமணியப் பிள்ளை அவர்களின் இரண்டாவது மகனுமான திரு டாக்டர் செங்கல்வராயன் எழுதிய "திருப்புகழ் பதிப்பாசிரியர் வரலாறு" என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. 1921 ஆம் ஆண்டில் வெளி வந்த அந்த நூலில் வீ.டீ.எஸ் பற்றி அவர் அறிந்திருந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்தப் புத்தகம் வெளியானது. அதன் முன்னுரையில் " முயற்சி திருவினையாக்கும்" என்று எமுதப்பட்டதோடு "கடவுளை நம்பியோர் கைவிடப்படார்" எனவும் எழுதப்பட்டு உள்ளது.

வீ.டீ. சுப்பிரமணிய பிள்ளை

வி.டீ. சுப்ரமணியப் பிள்ளை 1846 ஆம் ஆண்டு டிஸம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று முருக பக்தி மிக்கக் குடும்பத்தில் உத்திரை நட்சத்திரம், வெள்ளிக் கிழமை கூடிய சுபதினத்தில் பிறந்தார். அவர் பெற்றோர்களின் பெயர் தணிகாசலம் மற்றும் லஷ்மி அம்மாள் என்பது. கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த அவர்கள் ரிஷி கருணீகர் பிரிவைச் சார்ந்தவர்கள். திருத்தணியில் இருந்த அவருடைய தாத்தா கற்பகம் பிள்ளை என்பவருக்கு முருகப் பெருமான் பலமுறைக் கனவில் தோன்றி அவருக்கு வழிகாட்டி இருக்கின்றார்.

1857 ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றார். 1863 அம் ஆண்டில் பணப் பற்றாக்குறையினால் படிப்பைத் தொடர இயலாமல் அதே பள்ளியில் எட்டு ரூபாய் மாதச் சம்பளத்தில் அமர்ந்தார். அதன் பின்னர் சென்னையில் பேராசிரியராக இருந்த மில்லர் என்பவர் அறிவுறைப்படி சுப்ரமணியப் பிள்ளை மாகின்டோஷ் ஸ்காலர்ஷிப் பரிட்சைத் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று சென்னைக்குச் சென்று படிப்பைத் தொடர்ந்தார். அவர் எப்.ஏ. படிப்புப் படித்து முடித்தப் பின் மில்லரின் பள்ளியிலேயே 40 ரூபாய் மாத சம்பளத்தில் சேர்ந்தார்.

உடல் நலக் குறைவால் சுப்ரமணியப் பிள்ளை சென்னையை விட்டு வெளியேறிய வேண்டியதாயிற்று. அங்கு இருந்த பொழுது செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டும் எனில் 35 மைல் கல்லையும் நடந்தே செல்ல வேண்டியதாயிற்று. ஏன் எனில் ரெயில் வுhகன வசதிகள் அப்போது கிடையாது. வறுமையினால் வண்டியில் செல்ல பணம் கிடையாது.

1870 ஆம் ஆண்டில் அவருடைய அழகான கை எழுத்தைக் கண்டு வியந்த மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த (கடலூர்) நீதிபதி ஹட்சன் அவரை நீதி மன்றத்தில் ஆங்கிலத்தில் எழுதும் பணியில் அமர்த்தினார். எட்டு வருடத்திற்குப் பின் தேர்வுகளில் வெற்றி பெற்று கடலூரில் முனிசிப் பதவியில் அமர்ந்தார். அங்கிருந்து திருவள்ளுர், நாமக்கல் (1888), கும்பகோணம் (1892), திருத்துறைப் பூண்டி (1894), மதுரை (1897), மானா மதுரை (1899) போன்ற இடங்களில் பணி புரிந்தப் பின் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் (1901).

அவர் வாழ்க்கை முறையும் சிறப்புக்களும்

வீ.டீ. சுப்ரமணியப் பிள்ளை ஆரம்பம் முதலிலேயே தமிழ் மொழியிலும் முருகனிடமும் அதிக ஈடுபாடு கொண்டு இருந்தவர். எந்த இடத்தில் வேலைக்கு சென்று அமர்ந்தாலும் அக்கம் பக்கத்தில் இருந்த ஆலயங்களுக்குச் செல்லாமல் இருந்தது இல்லை. 274 பாடல் பெற்ற தலங்களில் 176 இடங்களுக்குச் சென்று இருக்கின்றார். திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசு மற்றும் சுந்தரர் போன்ற நாயன்மார்கள் ஏழாம் நூற்றாண்டில் பாடிய தலங்கள் அவை. ஆனால் அவருடைய ஆசை தன்னுடைய கடைசி காலத்தில் இறுதிவரை காஞ்சிபுரத்தில் வாழ்ந்து கொண்டு ஏகாம்பரரை தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே.

அவருடைய மூதையோர்களின் பழக்கப்படி அவருக்கும் திருத்தணி ஆலயத்தின் மீது ஈடுபாடு இருந்தது. அவருடைய பாட்டனார் காலம் தொட்டு கிருத்திகை தினங்களில் முடிந்தவரை திருத்தணிக் கோவிலுக்கு அவர்கள் செல்வது பழக்கம். ஒரே நிலையாக ஒரு கடவுளிடம் மனதை வைத்திருந்து பக்தி செலுத்திய நிலையை அது காட்டுகின்றது. அவர் மிகவும் சுத்தமான தமிழில் அடக்கமாகப் பேசுபவர். முனிசிப் ஆக இருந்த பொழுது அவர் அளித்த தீர்ப்புக்கள் மிகவும் வரவேற்கப்பட்டன. அவருடைய பொறுமை மற்றும் கடமை உணர்ச்சியைக் கண்டு பலரும் அவரைப் பாராட்டி வந்தனர். கீழ் கூறப்பட்டுள்ள திருக்குறளில் உள்ளது போன்றே அவரும் தன்னுடைய வாழ்க்கை முறையை மேற்கொண்டு இருந்தார்.

''ஒழுக்கம் விலுப்பம் தரலான் உயிரினும் ஓம்பப்படும் (அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு வாழ்வது பெருமையைத் தரும் என்றாலும், வாழ்வதை விட அதை நினைவில் போற்றி வளர்ப்பது அவசியம்)''

அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை 15.9.1864 முதல் தொடர்ந்து வைத்து வந்துள்ளார். குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்டக் கோவில்களுக்குச் செல்வது, வரவு செலவுகள், தினமும் சிவபுராணம் போன்ற கடவுள் பிரார்தனை செய்வது, சிவ கவசம், கந்தர் அனுபூதி, சைவபடிகம் போன்றவை படிப்பது போன்ற பழக்கங்களை வைத்து இருந்தார். தினமும் தவறாமல் 32 முறை தணிகையன் துணை என்று எழுதிய பின் தணிகேசன் மீது எதாவது பாடல் இயற்றுவார். அவர் கடவுள் மீது எந்த அளவு பக்தி கொண்டு இருந்தார் என்பது அவர் எழுதி வந்த நாட்குறிப்பின் மூலம் விளங்கும்.

வாழ்வில் வறுமைக் களைந்து வசதி பெற்றப் பின் ஆலயங்களுக்கு உதவிகள் செய்யத் துவங்கினார். விளக்குகள் போடுவது, பாத்திரங்கள், ஆலய மணிகள் போன்றவற்றை தானமாகத் தருவது, ஆலயங்களைப் புதுப்பித்தல், மற்றும் கவனிக்காமல் கிடந்த தெய்வ சிலைகளை ஆலயங்களில் பிரதிட்சை செய்வது போன்ற பணிகளையும் செய்து வந்தார். 1902 ஆம் ஆண்டில் திருத்தணியில் ரிஷி கருணிகர் மடத்தை புதுப்பிக்க உதவினார். 1905 ஆம் ஆண்டில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலையை புதுப்பிக்க உதவினார். 25.6.1868 அன்று தாயம்மாள் என்ற மங்கையை மணந்து கொண்டார். ஆந்த அம்மையாரும் அவருடன் சேர்ந்து முருக பக்தியில் தலை சிறந்து விளங்கினார்.

ஆக அவர் வாழ்ந்திருந்த வாழ்க்கை ஒழுக்கம் பூரண பக்தி மற்றும் தரும நெறி கொண்டிருந்தது என்று கூறினால் அது மிகைப்படாது. 17.04.1909 அன்று அவர் இறைவன் பாதங்களில் சரணம் அடைந்தார்.

அவருடைய குறிகோள்

1871 ஆம் ஆண்டு அவர் மஞ்சக்குப்பம் துணை நீதிமன்றத்தில் பணி புரிந்து கொண்டு இருந்த பொழுது சிதம்பர ஆலயத்தைச் சேர்ந்த தீட்சதர்கள் ஒரு வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற பொழுது திருப்புகழில் இருந்து சில பகுதிகளை சில இடத்தில் தங்களுடைய வாதங்களில் மேற்கோள் காட்டி இருந்தனர். அந்த பகுதியில் அவர்கள் குறிப்பிட்ட வாசகம் இவை:

தாது மாமலர் முடியிலே
வேத நன்முறை வாளுவமே தினம்
வேல்வி யாலிலில் புனை முவயீர
மேன்மை வேட்டியர் மிகவே புகனை புரிகோவே

("கடவுளே, வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த முவாவியவார் (முவாயிரம்) என்ற பெருமைப் பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்")

அந்த அற்புதமான படைப்பைக் கண்ட வீ.டீ.எஸ் திருப்புகழில் இருந்த 16000 பாடல்களில் குறைந்தது ஆயிரம் பாடல்களையாவது வெளியிட வேண்டும் என்ற சபதம் பூண்டார். அதன் மூலம் தான் அனுபவித்த ஆனந்தத்தை தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்பதைப் போல உலகில் மற்றவர்களும் அதை அனுபவிக்க வேண்டும் என தீர்மானித்தார். அவர் முருக பக்தர் என்பதினால் சிவனுக்கு உகந்த தேவாரம், திருவாசகம் போன்று முருகனுக்கு உகந்ததாக திருப்புகழ் பாடல்கள் உள்ளன என நினைத்தார்.

பாடல்களின் மூலம்

1876 ஆம் ஆண்டு அவர் ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்ததைக் கண்டார். ஏப்ரல் மாதம் ஒரு புனித வெள்ளிக் கிழமையில் தான் கண்டு பிடித்த பனை ஓலைகளில் இருந்து அவற்றை படித்து எழுதிக் கொள்ளத் துவங்கினார். 28.6.1878 வரை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை பிள்ளை என்பவரால் பனை ஓலைகளில் எழுதி இருந்த இருந்த 750 பாடல்களுக்கு மேல் கிடைத்தன. செப்டம்பர் மாதம் 30 தேதிவரை சிதம்பரத்தைச் சார்ந்த பென்னாத்தூரில் இருந்த சீனிவாச பிள்ளை என்பவர் எழுதி இருந்த இன்னமும் 450 பாடல்கள் கிடைத்தன. 20.03.1881 ல் கருங்குளி ஆறுமுக ஐயர் என்பவர் இன்னும் 900 பாடல்களைத் தேடித் தந்தார். 1903 ஆம் ஆண்டு திருமாக்கரலில் புதிதாக ஒன்றை சேர்த்து 780 பாடல்கள் கிடைத்தன.

பலவற்றிலும் ஒரே பாடல்கள் இருக்க அவற்றை தவிர்த்துத் அனைத்தையும் ஒரு முறையான தொகுப்பாக செய்வது மிகக் கடினமான வேலையாக இருந்தது. ஏன் எனில் அந்த பாடல்கள் பல இடங்களில் இருந்து கிடைத்து இருந்ததினால் எழுத்து நயம் வேறுபட்டு இருந்தது. அவற்றில் இருந்த குறைகளைக் களைந்து சீர் செய்ய, தமிழ் பண்டிதர்களான கடலூர் சிவ சிதம்பர முதலியார், சேலம் சரவணப் பிள்ளை மற்றும் அனந்தராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிய அளவில் இருந்தது. அத்தனை இருந்தும் தான் வெளியிட்ட முதல் பதிப்பில் " தவறுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டினால் அவற்றை மறுபதிப்பில் திருத்தி வெளியிடுவதாக " ஒரு குறிப்புடன் வெளியிட்டார். அதில் இருந்தே அவர் எந்த அளவு திருப்புகழை பிழைகள் இன்றி வெளியிட ஆவலுடன் இருந்தார் என்பது புரியும். அவர் அந்த காரியத்தை செய்து முடித்ததில் உதவிய அனைவருக்கும் மனமாற நன்றி செலுத்துவதாகவும் எழுதி இருந்தார். தமிழ் உலகம் அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை என்றும் நினைவில் வைத்து இருக்கும்.

பாடல்கள்

ஆறுபடை வீடுகளின் பாடல்கள் முதலில் இருக்க, அதன் பின் பஞ்சபூத ஸ்தலங்களைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றது. மற்ற பாடல்கள் தொண்டை நாடு, சோழ நாடு என்ற தலைப்பில் பிரிக்கப்பட்டன. குறிப்பிட்ட எந்த இடத்தையும் சேராமல் இருந்த பாடல்கள் கடைசியில் இடம் பெற்றன.

வெளியீடு

1895 ஆம் ஆண்டில்தான் திருப்புகழ் முதல் பாகம் வெளியிடப்பட்டது. அவற்றில் 603 பாடல்கள் இடம் பெற்றன. அடுத்து 1909 ஆம் ஆண்டு வந்த இரண்டாம் பதிப்பில் திருத்தங்களுடன் அது வெளியாயிற்று. 1921 ஆம் ஆண்டு வந்த மூன்றாம் பதிப்பில் அவருடைய மகன்களான வீ.எஸ்.சண்முகம், மற்றும் வீ.எஸ்.செங்கல்வராயன் இருவரும் பல புதிய பாடல்களை இணைத்து வெளியிட்டனர். 1931 ஆம் ஆண்டு வந்த நான்காம் பதிப்பில் திருப்புகழ் சிறப்பாயிரம் என்ற இலக்கியத்துடன் வெளியிடப்பட்டது.

இரண்டாம் தொகுதி

இரண்டாம் தொகுதி 1902 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதில் பஞ்சபூத ஸ்தல பாடல்களும் காசி, இராமேஸ்வரம் பற்றிய 158 பாடல்களும் இடம் பெற்றன. அதன் இரண்டாம் பதிப்பு 1923 ஆம் ஆண்டு வந்தது. அவருடைய மகன்களான வீ. எஸ். சண்முகம், மற்றும் வீ.எஸ். செங்கல்வராயன் வெளியிட்ட அதில் 32 புதிய பாடல்கள் இடம் பெற்றன.

மூன்றாம் தொகுதி

வீ.டீ.எஸ் வெளியிட்ட் மூன்றாவது தொகுப்பு வெளிவந்த பொழுது அவர் உயிருடன் இல்லை என்றாலும் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தையும் முன்னரே அவர் செய்து இருந்தார். 1939 ஆம் ஆண்டு அந்தத் தொகுதி 309 பாடல்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டது. அதில் திருப்புகழ் பாடல்களைத் தவிற அருணகிரிநாதருடைய கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, மற்றும் திருவகாப்பு போன்றவை இடம் பெற்று இருந்தன. அதையும் தவிற அருணகிரிநாதர் பற்றிய வரலாறு, அவர் எழுதிய பாடல்களின் ஆய்வு, அவருடைய எழுத்துக்கள் என மற்றவையும் இடம் பெற்று இருந்தன. திருவேலுகுறிருக்கை (Tiruvelukūrrirukkai) என்ற நூலை வீ.டீ.எஸ் வெளியிடாததின் காரணம் அதில் சில தவறுகள் இருந்தன என்பதே. ஆனால் அதன் சாரத்தைக் கண்டு அதில் ஈர்புற்ற அவருடைய மகன்கள் அதை மூன்றாம் பதிப்பில் இணைத்தனர்.

அவருடைய மூன்றாவது மகனான செங்கல்வராயன் முருகன் வேல் பன்னிரை திருமுறை என்ற நூலை சைவ திருமுறை நூலைப் போலவே தொகுத்து வெளியிட்டு அதில் அருணகிரிநாதர் பாடல்களை விளக்கி இருந்தார். 1952-57 ஆம் ஆண்டில் அதை ஆறு பாகங்களாக வெளியிட்டார். பன்னிரண்டாவது திருமுறை சீதோன்தர் புராணம் என்ற தலைப்பில் ஒரு நூல் தென்னூர் சொக்கலிங்கம் பிள்ளையால் வெளியிடப்பட்டது.
வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்
வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்

1870-1951 ஆம் ஆண்டுகளில் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் மூலமே திருப்புகழ் பாடல்கள் பெரும் சிறப்புப் பெற்றன. திருப்புகழ் பாடல்களில் இருந்த இனிமையைக் கண்ட அவர் முதல் பாகத்தை வெளியிடச் செய்து அவற்றைப் தானே பாடினார். வீ.எஸ்.ஸி யை 1912 ஆண்டில் திருத்தணியில் சந்தித்தவர் அவருடைய நெருங்கிய நண்பர் ஆனார். திருப்புகழ் பாடல்களை அனு தினமும் பாடிப் பரப்பினார் அந்த பாடல்களை பெரிய அளவில் பரப்பிட 1918 ஆம் ஆண்டு முதல் திருத்தணியில் ஒவ்ஒரு வருடமும் பாத அடி கால் நடை பயணத்தைத் துவக்கினார்.

மற்ற வெளியீடுகள்

வீ.டீ.சுப்ரமணிய பிள்ளையின் மற்ற வெளியீடுகள் இவை:

 • பிரும்மோத்திர கந்த வாகனம் (Brahmōttara Kānda Vacanam (Jan 21, 1879)
 • திருத்தாறுபூண்டி ஸ்தல புராணம் (Tirutarupūnti Stalapurānam (1897)
 • திருவாரூர் புராணம் வேதாரண்ய புராணம் (Tiruvārūr Purānam; Vetaranya Purānam (1897)
 • நாமக்கல் செங்கழுனீர் வினாயகர் நவரத்தின மாலை (Namakkal Cenkalunīr Vināyakar Navaratna Mālai (1898)
 • மானாமதுரை ஸ்தல புராணம் (Manamaturai Stalapurānam (1901)
 • திரு உத்தரகோச மங்கை மங்கலேஷ்வரி பிள்ளைத் தமிழ் (Tiru uttarakocamankai Mankaleswari Pillai Tamil (1901)
 • சுந்தர விளக்கம் (Cuntara Vilācam (1904)
 • சிவஸ்தல மஞ்சரி (Śivasthala Majari (1905)
 • திருனீர்தூர்த்தல புராணம் (Tiruniturttala Purānam (1908)

1882ம் ஆண்டு முதல் சிவ ஸ்தலங்களைப் பற்றிய விவரங்களை வீ.டீ.எஸ். தொகுக்கலானார். சிவ ஸ்தல அகராதி ஒன்றை தொகுக்க எண்ணினார். ஆனால் அது 23 ஆண்டுகள் கழித்தே நிறைவு பெற்றது. அதை யூ.வீ. சாமினாத ஐயர் என்பவர் ஸ்வஸ்தால மஞ்சரி என்ற பெயரில் வெளியிட்டார்.

முடிவுறை

அவருடைய விருப்பப்படி அவருடைய சமாதி திருத்தணி கோவிலைப் நோக்கியபடி இருக்குமாறு அமைக்கப்பட்டது. திருப்புகழ் பாடலை படிப்பவர்களுடைய இதயத்தில் அவர் இறக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அவருடைய வாழ்க்கை வரலாறு 121 பாடல்களாக திருப்புகழ் சுப்பிரமணிய நாயனார் (Tiruppukal Cuppiramaniya Nāyanar) செய்தோந்தர் புராணம் என்ற நூலில் வராகவி தென்னுர் சொக்கலிங்கப் பிள்ளையால் பாடப்பட்டு உள்ளது. அவரைப் பற்றி யூ.வீ. சாமினாத ஐயர் கூறினார்:

"புவரும் அமலான் அயிகரக் செவ்வேல் பொன்னடி ஏனினன் துர்கித் தவறும் அருண கிரிப்பெருன் காரிய பலவும் திருப்புகழ் பலவும் மேவரு நிலையை உணர்ந்தவன் அருள் மெய்த்துணை யாக்கோடு தெடி யாவரும் பிறசே சுப்ரமணிய என்தன்சீர் இயம்புரார் பரவோ"

எப்போதுமே முருகனின் பொன்னிறப் பாதங்களில் தன் மனதை வைத்திருந்து , முருகன் பாதங்களில் இணைந்து விட்ட மாபெரும் கவிஞன் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்களை தேடிக் கண்டு பிடித்து நமக்கு அளித்துள்ள சுப்பிரமணியன் (V.T.S) பெரும் புகழுக்கு ஏற்றவர். அவர் புகழை என்னவென்று சொல்வது?

References

 1. Anvananda, Swami. Saint Arunagirinatha (Madras: Pongi Publications) 1975 pp. 144 + XII.
 2. Cengalvaraya Pillai, Va.Cu. Tiruppukal patippāciriyar Va.Ta. Subramania Pillai Carittiramum Avar Iyarriya Tanip Pātalkalum (Madras: P.R. Ramayyar Company) 1921 pp. 138.
 3. Va. Su. Chengalvaraya Pillai, "Tiru va.ta. Subramana Pillai ...Valkkai Varalārruccurukkam" in Śrī Vallimalai Tiruppugal Saccidananda Swami Centenary Jayanthi Souvenir, (Madras 1970), pp. 49-57.

ஞானபுரணி மாதவானத் , M.A., M.S. V.T. சுப்ரமணிய பிள்ளையின் பேத்தியும், அருணகிரிநாதரின் திருப்புகழை வெளியிட்ட V.S. செங்கல்வாராயனின் மகளும் ஆவார்.

Gnanapurani Madhvanath
13, 3rd East Street
Tiruvanmiyur Chennai - 600 041 India
E-mail: yogini@md4.vsnl.net.in