Lord Skanda-Murugan
 

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் முருக பக்தி

ஆங்கிலத்தில் மூலக் கட்டுரை: பேட்ரிக் ஹரிகன்

Original article in English: "Murugan Devotion among Tamil Diaspora" by Patrick Harrigan

தமிழில் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

Lord Murugan lands in Lanka with his attendants
சுப்பிரமணிய ஸ்வாமி தேவஸ்தானம், குமார வயலூர்
Mauritius main island (19k)
Sydney Murukan Temple gopuram and entrance
சிட்னி முருகன் ஆலயம், ஆஸ்திரேலியாவில் முருகன் வழிபாடு

முருகன் அவதாரக் கதைகள் எத்தனை பழமையானதோ, அத்னனைப் பழமை வாய்ந்தது இந்தியக் கடல் பகுதிகளில் நிலவும் முருக பக்தியின் காலமும். புராணக் கதைகளின்படி முருகன் ஹிமாலய மலைப் பகுதியில் அவதரித்தப் பின், எதோ ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தென் பகுதியை நோக்கிச் சென்று, அங்கிருந்து டெக்கன் மற்றும் தமிழகத்தைத் தாண்டி, திருச்செந்தூருக்குச் சென்று, அங்கிருந்தக் கரும் கடலையும் கடந்து இலங்கைாவிற்குச் சென்றதாக நம்பப்படுகின்றது.

அவர் லங்காவின் கடற்கரையை அடைந்ததும் அந்த தீபகற்பத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து முடிவாக கன்னிப் பெண்ணான வள்ளி அம்மாவை கதிர்காமக் காட்டில் கண்டு பிடித்தார். அவளைக் கண்டுபிடித்ததும், அவரும் அங்கேயே தங்கி இருந்து அவளை மணந்து கொண்டார். அதற்குப் பிறகுதான் அவர் வடநாட்டுப் பெண்ணான தேவசேனாவை (தமிழில் தெய்வானை) மணந்து கொண்டார். வரலாற்றின்படியும் தாயகமான இந்தியாவைத் தாண்டிப் பரவத் துவங்கிய முருக பக்தி முதலில் துவங்கியதும் விரிவடைந்ததும் இலங்கையில்தான்.

இந்தியக் கடல் பகுதியைத் தாண்டிச் சென்ற முருக பக்தி இயக்கத்தின் துவக்கம் இலங்கையில்தான் என்றாலும் அங்குதான் அது முடிந்து விடவில்லை. 11 ஆம் நூற்றாண்டில் ஸ்கந்த முருக பக்தி சிற்பக் கலை கைவினைப் பொருட்கள் மூலம் இந்தோனேஷியா தீபகற்பத்தின் ஜாவா தீவிலும் முருக பக்தி நுழைந்தது.

அதன் பின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்த திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் புத்த மத சமய இயக்கங்களிலும் ஸ்கந்த முருகன் மீதான நம்பிக்கைகள் தோன்றலாயிற்று. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகள் முதல் கடலைத் தாண்டிச் சென்று இலங்கையில் குடியமர்ந்த தமிழர்கள், மேலும் நல்ல வேலைகளைத் தேடியும், தமது பொருளாதார வாழ்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்து அங்கிருந்து தூர தேசத் தீவுகளான மொரூஷியஸ், சிச்சில்லேஸ், பர்மா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் பிஜி தீவிலும் சென்று பணி புரியத் துவங்கினார்கள்.

இந்தியாவில் இருந்து அப்படிக் குடிபெயர்ந்து சென்றவர்கள் பெரும்பாலும் நிலமற்ற ஏழைகள் மற்றும் நகரங்களைத் தாண்டி இருந்த இடங்களில் வாழ்ந்தவர்கள். அகவே அவர்களை ஒப்பந்தக் கூலி அடிப்படையில் மேற்கு நாட்டினர் தங்களுடைய தேங்காய்,ரப்பர் மற்றும் கரும்புத் தோட்டங்களில் கூலி வேலை செய்ய அழைத்துச் சென்றார்கள். ஆனால் அப்படிக் குடிபெயர்ந்த மக்களில் இருந்த செட்டியார் சமூகத்தினரோ தமது வியாபாரக் கேந்திரங்களை நிறுவும் நோக்கத்துடன் அங்கெல்லாம் சென்றார்கள்.

ஆக இப்படியான இந்த இரு பிரிவினரையும் தவிர இந்தியா மற்றும் இலங்கையில் தொழிலகங்களில் திறமைசாலிகளாக விளங்கிய மேலும் சில மக்களையும் தமது தோட்டங்களில் பணிபுரியச் சென்ற தொழிலாளர்களை மேற்பார்வை இடுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார்கள்.

தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தமது தொழிலில் நேர்மை மற்றும் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் சமூகத்தில் பெரும் மதிப்பைப் பெற்று இருந்தார்கள். அதே சமயம் அவர்கள் கடைப்பிடித்து வந்த சமய,மத மற்றும் கலாச்சாரங்களையும் துறந்து விடவில்லை. ஆகவே அவர்கள் பொருளாதாரத்தில் மேன்மைப் பெற்று எத்தனைதான் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டாலும் தமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பண்டிகைகள், சடங்குகள் போன்றவற்றை தொடர்ந்து கடை பிடித்து வந்துள்ளது ஒரு வியப்பான செய்தி அல்ல ஆனால் ஆரம்பம் முதலே அவர்களின் திட்டங்களுக்கு பல விதங்களிலும் இடைஞ்சல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன.

வருமானத்திற்காக கடல் கடந்து சென்ற மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது என்றாலும், சமய வல்லுனர்களும், அகம முறையில் பூஜைகளை செய்து வந்த பண்டிதர்களும் (பிராமணர்கள் என்று மறைமுகமாக கூறப்பட்டு உள்ளது என்று நினைகின்றேன்: சாந்திப்பிரியா) சமீப காலம்வரை கடல் கடந்தப் பயணத்தை மேற்கொள்ள தயக்கம் காட்டினார்கள். அதன் காரணம் அந்த காலத்தில் கடல் கடந்து பயணம் செய்தவர்களை அவர்களது சமுதாயம் ஏற்கவில்லை என்பதே. அதிக செலவு செய்து ஆகம பண்டிதர்களை வரவழைக்கும் நிலையிலும் அங்கு சென்ற தமிழர்களின் பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை. ஆகவே அவர்களால் அகம முறையில் பூஜைகளை செய்யாத பண்டிதர்களையே அங்கு வரவழைக்க முடிந்தது (பிராமணர்கள் அல்லாதோர் என்று மறைமுகமாக கூறப்பட்டு உள்ளது என்று நினைகின்றேன் - சாந்திப்பிரியா).

sailing craft in old Fiji
பழைய பிஜியில் மிதக்கும் கப்பல்

அடுத்து அந்த நாட்டை நிர்வாகித்து வந்த மேல்நாட்டை சேர்ந்த பெரும்பான்மையினர் ஹிந்துக்களின் பண்டிகைகளை அங்கீகரிக்காமல், அதற்கு மாறாக அனைவரும் கிருஸ்துவ தேவாலயங்களுக்கு செல்வதையே ஊக்குவித்தார்கள். அங்கிருந்த பல பண்ணைகளின் முதலாளிகளும் பண்ணை வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி, விடுமுறை அளித்து அங்கிருந்த பெரும்பாலான தோட்டத் தொழிலாளிகளை இந்துப் பண்டிகைகளுக்கு செல்ல அனுமதிக்கும் மன நிலையிலும் இருந்தது இல்லை.

ஆகவே இத்தனை தடங்கல்களிலும் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்களின் வீடுகளில் இருந்த பெண்மணியினர் தமது கலாச்சாரத்தை கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். தத்தம் வீடுகளில் பண்டிகைகளைக் கொண்டாடி வந்தார்கள். தமிழர்களின் வீடுகளில் இருந்தவர்கள் அம்மன், சிவன், பிள்ளையார், நாராயணன் போன்ற தெய்வங்களை வணங்கி வந்தாலும் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழர்களுடன் இயற்கையாகவே ஒன்றி இருந்த முருகப் பெருமானும் வணங்கப்பட்டு வந்தார். ஆகவே முருகனின் தீவீர பக்தர்கள் தாம் அனைவரும் வழிபட நாட்டுப்புற கோவிலாக அமைந்து இருந்தாலும் தமக்கு என சிறிய அல்லது பெரிய ஒரு கோவில் (ஆலயம்) அமைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தமது சகோதரக் குடும்பத்தினரிடம் பொருளாதார நிதி உதவியைக் கோரினார்கள்.

Śrī Siva Subramaniya Temple - Nadi
பெரிய கோவில்: ஸ்ரீ சிவ சுப்ரமணிய ஆலயம், நாடி, பிஜி
Annual Kavadi procession through Victoria, capital of Seychelles
சிச்செல்லேஸ் தலை நகரமான விக்டோரியா வழியே வருடாந்திர காவடி ஊர்வலம்

தத்தம் நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்த ஒவ்வொரு சமூகத்தினரும் தமது முன்னோர்கள் கொண்டிருந்த கலாச்சாரங்களைக் கைவிடாமல் இருந்தவாறும், அதே சமயம் தமது வாழ்கை தரத்தை உயர்ந்த நிலையில் கொண்டு செல்லவும் பல இன்னல்களை அனுபவித்து உள்ளார்கள்.

ஒவ்வொரு சமூகத்தினரும் அவரவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளை எல்லாம் எப்படியெல்லாம் சமாளித்து புது இடங்களில் குடியேறினார்கள் என்பதைக் கூறும் கதைகள் ஏராளம் உண்டு . தாய்நாட்டை விட்டு வெளியேறி வந்து விட்டாலும், வந்த இடங்களில் பல இன்னல்களை அனுபவித்தாலும், முருகன் பக்தியை விடாமல் கடைப்பிடித்து வருவதினால் அவருடைய அருள் கிடைத்து உள்ளதினால்தாம் தாம் வாழ்வில் வளம் பெற்று உள்ளதாக அவர்கள் நினைப்பது சரியானதே.

தாய்நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் குடியமர்ந்தவர்கள் தமது சமுதாயக் கலாச்சாரங்களைக் தாய்நாட்டில் உள்ளவர்களை விட அதிக அளவில் கடைப்பிடித்து வருவதாக மொழி ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக பண்டையக் கால ஸ்காண்டனெவிய கலாச்சாரங்களையும், நடைமுறைகளையும் ஸ்காண்டனெவிய இனத்தவரை விட அங்கிருந்து ஐஸ்லாந்து நாட்டிற்கு இடம் பெயர்ந்து சென்று விட்ட நாடோடி மக்கள் பெருமளவு கடை பிடித்து வருகிறார்கள்.

அது போலவே ஜாப்னாவில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ் மொழிக்கு சற்றே மாறுபட்ட பண்டைக் காலத்தில் வழக்கத்தில் இருந்த செந்தமிழ் மொழியை பேசி வருவதின் மூலம் அந்த மூல மொழியை பாதுகாத்து வருகிறார்கள். ஹெயின்ஸ் பெச்செர்ட் (Heinz Bechert) என்பவர் கூறி உள்ளார் " சியோன் அல்லது முருகன் வழிபாடு தென் இந்தியாவில் சைவ வழிபாட்டுடன் முற்றிலும் இணைந்து விட்ட நிலையில் கதர்காமர் பல புராதான வழக்கங்களை தொடர்ந்து கொண்டு உள்ளார். ஆகவே இன்றில் இருந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ள பெரும் சமுதாய மாற்றங்களினால் முருக பக்தி நெறி துவங்கிய தாய் நாட்டில் கூட காவடி எடுப்பது போன்றவை மறைந்து விடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும், புலம் பெயர்ந்த தமிழ் குடி மக்கள் அதை கைவிடாமல் நிச்சயமாக பாதுகாத்து வருவார்கள்.

Kavadi child, Sri Lanka

மொருஷியஸ்சில் நடைபெறும் அகில உலக இரண்டாவது முருகன் வழிபாட்டு மகாநாடு மொருஷியஸ்சில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் அல்ல தாய் நாட்டில் இருந்து இந்தியக் கடலைத் தாண்டி இடம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. மெளனமாக, அதே சமயத்தில் உயரமாக தூக்கிப் பிடித்துள்ள அணையா விளக்குப் போல முருகன் பக்தி நெறி மற்றும் அதன் பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படியாக தமது சமய மற்றும் எண்ணிலடங்காத கலாச்சாரங்களையும் தொடர்ந்து கொண்டு இருப்பதின் மூலம் தமது உள்ளத்தில் உள்ள தமிழ் மொழியின் மீதான ஈர்ப்பையும் வளர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். பண்டை காலத்தில் தமது முன்னோர்கள் கடை பிடித்து வந்திருந்த கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் இப்படியாக தொடர்ந்து கொண்டிருப்பதின் மூலம் தாமே உண்மையான தமிழ் இனத்தைய இந்துக்கள் என்பதை எடுத்துக் காட்டுவது மட்டும் அல்லாமல் தம் முன்னோர்கள் கடைப் பிடித்து வந்த அந்த அறிவு கூர்ந்த பழக்க வழக்கங்களை வரும் கால சந்ததியினரும் உணரும் வகையில் இருக்குமாறு வைத்து உள்ளார்கள்.

  Related Murugan Bhakti resources:
  Skanda-Murukan Conference home page
Program of Speakers and Activities -- Second International Conference
Speakers and Topics -- Second International Conference
Murukan Conferences: Master Index of Topics
Synopses of First Murukan Conference papers
Kataragama.org
Palani.org
Tiruchendur.org
 

Index of research articles on Skanda-Murukan