Lord Skanda-Murugan
 

முருக பக்தி மாநாட்டில் அமெரிக்க நாட்டு
முருக பக்தர் பேட்ரிக் ஹரிகன் பேசுகிறார்

Nam Naadu front page of 12th August 2012

நம் நாடு (கோலாலம்பூர்) 12-08-2012

கோலாலம்பூர் :  கடந்த மூன்று நாட்களாக மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் முருக பக்தி மாநாட்டில் அமெரிக்க நாட்டை சேர்ந்த முருக பக்தர் பேட்ரிக் ஹரிகன் பேசுகிறார்.

பிறப்பு முதல் இறப்புவரை என் கதை என்ற தலைப்பில் அவர் வாசிக்கும் கட்டுரை இன்று காலை 9.15 க்கு இடம் பெறுகிறது. அவரதயு கட்டுரை படைப்பை மாநாட்டு பேராரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

அமெரிக்க நாட்டில் பிறந்த பேட்ரிக் தமிழ், சமிஸ்கிருதம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் படித்துப் பட்டம் பெற்றவர். மதுரையில் தமிழ் படித்த பேட்ரிக் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து 1985 ஆம் ஆண்டு எம். ஏ பட்டம் பெற்றார்.

கடந்த 40 ஆண்டுகளாக முருக பக்தராக இருக்கும் பேட்ரிக் இலங்கை கதிர்காமம் கோவிலில் ஆஸ்ரமம் அமைத்து முருக பக்தியைப் பரப்பும் குருவான கௌரிபாலா சுவாமிகளை குருவாக ஏற்றுக் கொண்டு குருகுல கல்வியை அவரிடம் பயின்றார். அவரிடம் சீடராக இருந்து முருகன் யார் எனக் கற்றுக் கொண்டார்.

கதிர்காமக் கோவிலில் இந்துக்கள், கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஒன்றாகக் கூடி பிரார்த்தனை செய்தது தன்னைக் கவர்ந்ததாகவும் அதுவே முருக பக்திக்கு அவரை இழுத்துச் சென்றதாகவும் பேட்ரிக் கூறினார்.

Transcribed by: சாந்திப்பிரியா